Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜிமெயில் குறிப்புகள்
#1
1. நீங்கள் வீட்டைத்தவிர்த்து, வெளியிடங்களில் சென்று, மோஸில்லா அல்லது நெட்ஸ்கேப் உலாவியின் மூலம் ஜிமெயிலை பார்வையிட்டால், அந்தப்பக்கத்திலிருந்து வெளிவரும் போது முறையாக "Sign out" செய்துவிட்டு வாருங்கள். வெறுமனே பக்கத்தை மூடினால், அடுத்து வரும் யாரேனும் ஜிமெயில் முகவரியைத் தந்தால் அது நேராக உங்கள் மின்னஞ்சல் பகுதிக்குத்தான் கொண்டு செல்லும். அவரால் உங்களது மடல்களைப் படிக்க முடியும். எனவே கவனம் தேவை.

2. பாதுகாப்பாக ஜிமெயிலைக் காண https://gmail.google.com
முகவரியை உபயோகிக்கவும்.

3.ஒரு மடலைப்பார்த்த பின்னர் மீண்டும் மின்னஞ்சல்பெட்டிக்கு [Inbox] திரும்ப இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் இருக்கும் "Back" என்ற பொத்தானை அழுத்தத் தேவையில்லை. மாறாக முகப்பில் பெரியஎழுத்துக்களில் உள்ள "GMail" என்பதையோ, "Inbox" என்பதையோ, மடல்களின் மேலே உள்ள "Refresh" என்கிற பொத்தானையோ அழுத்தினால் விரைவாக மின்னஞ்சல் பெட்டியின் முகப்பு பக்கத்திற்கு செல்ல முடியும்.

4. அதிகமான மின்னஞ்சல்கள் வந்திருக்கிறது. அதில் குறிப்பிட்ட மின்னஞ்சலை மட்டும் தேடிக்கண்டுபிடிப்பது எப்படி? உதாரணமாக கீழே உள்ளது போல --- [ ] இது போன்ற சதுர அடைப்புக்குறிகளைத் தவிர்த்து--- தேடவும்.

[Subject:"Rain in Chennai" (from:Nanban OR to:Ragavan)]
இதில் "to:" என்பதற்கு பதிலாக "cc:" என்பதையோ "bcc:" என்பதையோ உபயோகிக்கவும் முடியும். மேலும் "-" கழித்தல் குறியை உபயோகிப்பதன் மூலம் தேவையில்லா மின்னஞ்சல்களை தேடுவதிலிருந்து தவிர்க்க இயலும். உதாரணமாக

[Subject:"Rain in Chennai" (from:Nanban OR (to:Ragavan -ccTongueriyan -bccTonguearansothi))] என்று தந்தால் பிரியனிடமிருந்தும், பரஞ்சோதியிடமிருந்தும் "Rain in Chennai" என்று தலைப்பிட்டு வந்த மடல்களைத் தவிர்த்து நண்பன் மற்றும் இராகவனின் மடல்கள் மட்டுமே தேடுதலின் தீர்வாக கிடைக்கும்.

5. ஜிமெயில் மின்னஞ்சல் அனுப்புபவர்களுக்கு 'To','Cc','Bcc' பகுதிகளில் [ஜிமெயில் மின்னஞ்சல் வைத்திருக்கும்] பெறுபவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது - @gmail.com என்று குறிப்பிடத் தேவையில்லை. உதாரணமாக
manmadan@gmail.com என்பதற்கு பதிலாக manmadan என்று குறிப்பிட்டாலே போதுமானது. (ஜிமெயிலில் பெறுபவரின் முதலெழுத்தை தட்டச்சும் போதே, கீழே மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தோன்றுகின்றன என்பதையும் கவனிக்கவும்.)

6.உங்களுக்குத்தெரியுமா..? ஜிமெயில் மின்னஞ்சல் முகவரி
முதல்பெயர்.கடைசிப்பெயர்@ஜிமெயில்.காம் என்று சிலருக்கு இருக்கும். இதில் இருக்கும் நிறுத்தற்புள்ளியை நாம் இடாவிட்டாலும் ஜிமெயில் சரியான முகவரிக்குத்தான் செல்லும்.!உதாரணமாக

subra.manian@gmail.com என்ற முகவரியை subramanian@gmail.com என்று தட்டச்சினாலும் சரியான முகவரிக்குத்தான் செல்லும்!

7.ஜிமெயிலில் "or" என்பதும் "OR" என்பதும் ஒன்றல்ல. தேடலுக்கு "OR" என்பது மட்டுமே (மேற்கோள் குறிகள் இல்லாமல்) உதவும் என்பதைக் கவனிக்கவும்.

8. ஜிமெயிலில் ஒரு சொல்லைத் தேடும் போது "adi" என்று தேடுவதும் "Adi" என்று தேடுவதும் ஒன்றே. ஆனால் அவ்விதம் தேடினால் ஜிமெயில் "Aditya" என்பதை விடையாகத் தராது! "aditya" அல்லது "Aditya" என்று தேடினால் மட்டுமே அதற்கான சரியான விடை வரும்.

ஒவ்வொருவரும் பல மின்னஞ்சல்களை - யாஹ¤, ஹாட்மெயில் போன்று - உபயோகித்து வருகின்றனர். அவை ஒவ்வொன்றிலும் பல நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் ஜிமெயில் மின்னஞ்சலுக்கு எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்!

உதாரணமாக யாஹ¤ மின்னஞ்சலில் உள்ள முகவரிகளை மாற்ற வேண்டுமெனில், இணையத்தில் தொடர்பு கொண்ட பின், உங்கள் யாஹ¤ மின்னஞ்சலுக்கு செல்லவும். இடதுபுறம் உள்ள "Address" பகுதியில் உள்ள உதவியைப் பயன்படுத்தி, மின்மடல் முகவரிகள் அடங்கிய கோப்பை உங்கள் கணினிக்கு பதிவிறக்கிக்கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்பு Yahoo.csv என்ற பெயரில் சேமிக்கப்பட்டிருக்கும்.

இப்போது உங்களின் ஜிமெயிலுக்கு பயனாளர் பெயர், கடவுச்சொல்லைக் கொடுத்து முகப்பு பக்கத்திற்கு வரவும். பக்கத்தின் இடது பக்கத்தில் இருக்கும் "Contacts" என்பதை அழுத்தினால் "Contacts List" என்ற புதிய பக்கம் திறக்கும். அதில் மேலே வலது ஓரத்தில் இருக்கும் "Imports Contacts" என்பதை தேர்வு செய்யவும். வரும் திரையில் "Browse" பொத்தானை தேர்வு செய்து, உங்கள் கணினியில் எந்த இடத்தில் யாஹ¤ மின்னஞ்சல் முகவரிகள் அடங்கிய கோப்பான Yahoo.csv இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுக்கவும். அதற்கு பின்னர் "Import Contacts" பொத்தானை அழுத்தவும். உங்கள் கோப்பு வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர் வரும் திரையில், புதிதாக சேர்க்கப்பட்ட முகவரிகள் அனைத்தும் காண்பிக்கப்படும்.

(ஜிமெயிலில் இருந்து யாருக்கேனும் மின்னஞ்சல் அனுப்பினால், அவர்களுடைய முகவரிகள் தானாகவே ஜிமெயில் முகவரிப் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடும் என்பதை அறியவும்.)

10. உங்களுக்கு புதிதாக ஜிமெயில் வந்திருக்கிறதா என்பதை அறிய ஒவ்வொரு முறையும் ஜிமெயில் பக்கத்திற்கு சென்று பார்க்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக GMail Notifier என்ற மென்பொருளை பதிவிறக்கம் செய்து, நிறுவிக்கொண்டால் போதும். இணையத்தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு முறையும், புதிய ஜிமெயில் மின்னஞ்சல்கள் வந்திருந்தால் அதைப் பற்றிய விபரங்களை தானாகவே காண்பிக்கும். இந்த இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்ய http://snipurl.com/gefx என்ற சுட்டியைத் தட்டுங்கள்.

11. உங்களது ஜிமெயில் முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களை வேறொரு மின்னஞ்சல் முகவரிக்கு தானாகவே அனுப்ப வழி இருக்கிறது! ஜிமெயிலில் உள்ள "Settings" என்பதை அழுத்துங்கள். வரும் திரையில் "Forwarding" என்பதை தேர்வு செய்து, பின்னர் "Enable" (mail forwarding) என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். அங்கே இருக்கும் பகுதியில் எந்த மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்படவேண்டுமோ, அந்த முகவரியைத் தரவும். அதற்கு கீழ் இருக்கும் மூன்று தேர்வுகளில்
1. Keep GMail's copy in Inbox
2. Archieve GMail's copy
3. Trash GMail's copy
என்பனவற்றில் உங்கள் தேவைக்கு தகுந்தவாறு தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். மாற்றங்களை சேமித்துவிட்டு வெளியில் வரவும். அதற்கு பின்னர் உங்கள் ஜிமெயிலுக்கு வரும் மின்மடல்கள் அனைத்தும் நீங்கள் தந்திருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு தானாகவே அனுப்பப்படும்.

12. ஒரு இணையத்தளத்தைப் பார்வையிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் - அந்த தளத்திலிருந்து மின்னஞ்சல் அனுப்ப விரும்பி, "email link"-ஐ தட்டினால் அது வழக்கமாக Outlook Express-ஐ திறக்கும். அதற்கு பதிலாக ஜிமெயிலிருந்து மின்னஞ்சலை அனுப்ப விரும்புகிறீர்கள் என்றால், G-Mailto என்ற இலவச மென்பொருளை, http://snipurl.com/geg5 என்ற சுட்டியிலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டால் நேரடியாக அனுப்ப முடியும். அப்போது ஒரு வேளை நீங்கள் ஜிமெயிலில் இல்லாமல் இருந்தால் ஜிமெயில் மின்னஞ்சலுக்கு செல்வதற்கான பக்கத்தை திறக்கும்.

13. ஜிமெயிலில் உள்ள Label - Filter போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தி, உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை தனித்தனியாக - உதாரணமாக நண்பர்களின் மின்னஞ்சல்களைத் தனியாக, குடும்பத்தினர் மின்னஞ்சல்களைத் தனியாக, அலுவல் அஞ்சல்களைத் தனியாக - இப்படி எவ்விதம் வேண்டுமென்றாலும் தனித்தனியான பகுதிகளுக்கு செல்லும்படியான வசதியை ஏற்படுத்திக்கொள்ளலாம். எப்போது வேண்டுமென்றாலும் அந்த உபயோகங்களை "Edit" செய்து தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

நன்றி>தமிழ்மண்றம்
.

.
Reply
#2
ஜி மெயிலில் இத்தனை விடயங்களா? வந்த தொடக்கத்தில் கட்டாயம் ஒரு ஜிமெயில் வேண்டும் என்றூ ஓடி போய் திறந்தது, ஆனால் இப்போது உபயோகிப்பது குறைவு. தகவலுக்கு நன்றிகள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றிகள் பிருந்தன்
<b> .. .. !!</b>
Reply
#4
Mathan Wrote:ஜி மெயிலில் இத்தனை விடயங்களா? வந்த தொடக்கத்தில் கட்டாயம் ஒரு ஜிமெயில் வேண்டும் என்றூ ஓடி போய் திறந்தது, ஆனால் இப்போது உபயோகிப்பது குறைவு. தகவலுக்கு நன்றிகள்


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ம்ம்ம்.. உங்க கதை எனக்கும்...
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)