Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சங்கரியும் ஜே.வி.பி.யும்
#1
சங்கரியும் ஜே.வி.பி.யும்

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்த சங்கரி ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு நீண்டதொரு கடிதத்தை எழுதியிருக்கிறார். இலங்கை இனநெருக்கடிக்கு இந்தியப் பாணியிலான அதிகாரப் பரவலாக்கலின் அடிப்படையில் தீர்வொன்றைக் காண்பதற்கு ஆதரவளிக்குமாறு ஜே.வி.பி.யினரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கும் ஆனந்த சங்கரி, இது தொடர்பில் சாதகமான தீர்மானமொன்றை அவர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அறிவிக்க வேண்டும் என்றும் அல்லாவிட்டால் பலருக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்து விடும் என்றும் தெரிவித்திருக்கிறார். பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவைப்பதற்காக முழுமூச்சாக பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஜே.வி.பி.யினருக்கு வாக்களிப்பு தினமான எதிர்வரும் வியாழக்கிழமைக்கு முன்னர் தமிழர் விடுதலை கூட்டணித் தலைவரின் வேண்டுகோளைப் பரிசீலனைக்கெடுத்து தீர்மானமொன்றை அறிவிப்பதற்கு கால அவகாசம் இருக்குமோ தெரியவில்லை. அவ்வாறு ஜே.வி.பி.யினர் அறிவிக்காவிட்டால், உண்மையில் யார்யாருக்கெல்லாம் ஏமாற்றமாயிருக்கும் என்பது ஆனந்த சங்கரி அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனந்த சங்கரியின் கடிதத்தில் எமது கவனத்தைப் பெரிதும் ஈர்த்த அம்சம் ஜே.வி.பி.யினருக்கு `இனக் குரோத சிந்தனையற்றவர்கள். பல்வேறு சமூகங்கள் மத்தியில் குரோதத்தை மூளவைக்கும் நோக்குடன் ஆத்திரமூட்டும் வகையிலான பேச்சுகளை ஜே.வி.பி.யினர் ஒரு போதும் நிகழ்த்தியதில்லை. இருந்தாலும் சிறுபான்மையினங்களுக்கு எதிரான இனவாதக் கட்சியென்று ஜே.வி.பி.க்கு நாமகரணஞ் சூட்டப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளினால் நேரடியாக அல்லது மறைமுகமாக கட்டுப்படுத்தப்படும் தமிழ் ஊடகங்கள் சிலவற்றினால் உங்களது கட்சிக்கு இத்தகைய சேதம் ஏற்படுத்தப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட ஒவ்வொருவரையும் கண்டனம் செய்வதற்கு இந்தத் தமிழ் ஊடகங்கள் தயங்குவதில்லை' என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளருக்கான கடிதத்தில் ஆனந்த சங்கரி தெரிவித்திருக்கிறார்.

தனது கடிதத்தில் ஆனந்த சங்கரி `இளைய தலைமுறையினரின் நன்மைக்காகவும் பழைய தலைமுறையினரின் நினைவுகளைப் புதுப்பிப்பதற்காகவும்' என்று கூறி இன நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த காலத்தில் செய்யப்பட்ட உடன்படிக்கைகள் குறித்தும் தமிழர் பிரச்சினையின் முக்கிய சம்பவங்களையும் விளக்கமளித்திருக்கிறார். ஆனால், ஜே.வி.பி.யின் கடந்த காலம் குறித்து தனது நினைவுகளை அவர் புதுப்பித்துக் கொள்ள ஏன் முயற்சிக்கவில்லை என்பது எமக்குப் புரியவில்லை. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் அரசியலில் ஈடுபட்டிருக்கும் ஆனந்த சங்கரி, ஜே.வி.பி.யினரின் அரசியல் வரலாற்றைத் தெரியாதவராகப் பேசுகின்றாரா அல்லது தனது அரசியல் நிலைப்பாட்டுக்கு தென்னிலங்கையில் கிடைக்கக் கூடிய ஒரு சக்தி மிகு நேச அணியாக ஜே.வி.பி.யினரைக் காண்பதால் அவர்வளுக்கு `இன வாத சிந்தனையற்றவர்கள்' என்று நற்பெயர் வாங்கிக்கொடுக்க முயற்சிக்கின்றாரா?

இந்தியாவில் உள்ளதைப் போன்ற அதிகாரப் பரவலாக்கலுக்கு ஜே.வி.பி.யினரின் ஆதரவைக் கோரி நிற்கும் ஆனந்த சங்கரிக்கு ஆரம்பம் முதலிருந்தே தமிழர் பிரச்சினை விவகாரத்தில் அக் கட்சியினரின் கொள்கைகளை நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சீனச் சார்பு பிரிவில் இருந்து ரோஹண விஜேவீர பிரிந்து சென்று ஜே.வி.பி.யை அமைத்த போது, சுமார் 40 வருடங்களுக்கு முன்னரேயே அவரின் கட்சியின் சிறுபான்மையினர் விரோதக் குணாம்சம் குறித்து அரசியல் அறிஞர்கள் தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்த விமர்சனங்களை அன்றிருந்தவர்களில் அதிக பெரும்பான்மையானவர்கள் நம்பவில்லை. ஜே.வி.பி.யினரின் மார்க் சீயப் போர்வையே இதற்குக் காரணம். இன்று உண்மை நிலை தெளிவாகத் தெரிகிறது. அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் அவ்வப்போது அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்ட சகல திட்டங்களையும் ஜே.வி.பி. எதிர்த்தே வந்திருக்கிறது.

பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலகட்டத்தில் ஜே.வி.பி. தோற்றம் பெற்றிருக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் சீனச்சார்ப்பு பிரிவில் அங்கம் வகித்த விஜேவீர, டட்லி - செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஷ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பழைய இடதுசாரிக்கட்சிகளும் எதிர்ப்பியக்கத்தை நடத்தியபோது கட்சியின் கட்டுப்பாட்டையும் மீறி அவர்களுடன் ஊர்வலம் சென்றார் என்பது ஆனந்தசங்கரிக்குத் தெரியுமா? என்று நினைக்கின்றோம். ஜே.ஆர். ஜெயர்வதன 1981 இல் மாவட்ட சபைகளைக் கொண்டு வந்த போது, ஜே.வி.பி. அதை எதிர்த்தது. 1983 ஜூலை இனவன்செயல்களையடுத்து தடை செய்யப்பட்டிருந்த ஜே.வி.பி. 1987 ஜூலையில் இலங்கை- இந்திய சமாதான உடன்படிக்கையை எதிர்த்து தென்னிலங்கையில் வன்முறைப் போராட்டங்களில் இறங்கியது. தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கென்று கூறிக் கொண்டு அரசாங்கங்கள் வஞ்சத் திட்டங்களுடன் முன்வைத்த ஏற்பாடுகளைக் கூட ஜே.வி.பி.யினர் வெறித்தனமாக எதிர்த்தனர். தங்கள் தரப்பிலான யோசனைகளை அவர்கள் ஒரு போதுமே முன்வைத்ததில்லை.

நோர்வேயின் அனுசரணையுடனான அண்மைக்கால சமாதான முயற்சிகளுக்கு எதிராக ஜே.வி.பி. யினரும் ஜாதிக ஹெல உறுமயவினரும் முன்னெடுத்த எதிர்ப்பியக்கங்களே இன்று தென்னிலங்கை அரசியல் சமுதாயத்திற்குள் முனைப்படைந்து நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத உணர்வுகளுக்கு பிரதானமான காரணம். சிறுபான்மையினத்தவர்களின் நியாயபூர்வமான எந்தவொரு அரசியல் அபிலாசையையும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாத ஜே.வி.பி. க்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் இனவாத உணர்வற்ற கட்சிகள் என்று நற்சான்றிதழ் வழங்கும் அளவுக்கு ஆனந்த சங்கரி தன்னைத் தானே ஒரு பொருந்தாத் தன்மைக்கு உள்ளாக்கி அரசியல் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

தமிழர்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் கற்களை வீசும் சிங்களவர் மாத்திரம்தான் இனவாதியல்ல. கல் எறியாவிட்டாலும், நச்சுத்தனமான அரசியல் சிந்தனைகளைச் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி இனநெருக்கடிக்கு விட்டுக் கொடுப்பின் அடிப்படையில் அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு ஏதுவான சூழ்நிலை உருவாகாமல் தடுக்கும் சக்திகளே மிகவும் ஆபத்தானவை என்பதை ஆனந்த சங்கரி அவர்களினால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? ஜே.வி.பி. தொடர்பாக நாம் தெரிவித்து வரும் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு அடிப்படைக் காரணம் இலங்கையை உலுக்கும் தேசிய இனப் பிரச்சினைக்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் தீர்வைக் காண்பதற்கான சமாதான முயற்சிகளுக்கு அக்கட்சி ஆதரவை வழங்கவில்லை என்பதைத் தவிர, வேறு ஒன்றுமில்லை. சமாதான முயற்சிகளை எதிர்காலத்தில் முன்னெடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கக் கூடிய சூழ்நிலைகளை தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் மூலம் ஜே.வி.பி. யினர் படிப்படியாகத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிறுபான்மையினங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிராகரிக்கும் பேரினவாத முனைப்புடனான சிங்கள பௌத்த தேசிய வாதத்தை கோட்பாட்டுத் தளமாகக் கொண்டிருக்கும் ஜே.வி.பி. இலங்கை அரசியலில் ஒரு பெரிய புதிராக விளங்குகிறது. தீவிரமான முற்போக்கு மாற்றங்களை நாடி நிற்க வேண்டிய இளஞ் சந்ததியைச் சேர்ந்த தலைவர்களையும் உறுப்பினர்களையும் கொண்ட அக்கட்சி தென்னிலங்கைச் சமுதாயத்தின் மத்தியில் காணப்படக்கூடிய பழைமைவாதச் சிந்தனைகளையும் சீர்திருத்தங்களுக்கு விரோதமான பின்னோக்கிய உணர்வுகளுடனான சக்திகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கிறது. எதிரியின் எதிரி நண்பன் என்ற தந்திரோபாயம் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கச்சிதமாகப் பொருந்துவதில்லை என்பதை ஆனந்த சங்கரி புரிந்து கொள்வார் என்று நம்புகிறோம்.
http://www.thinakural.com/New%20web%20site...1/editorial.htm
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
ஆனந்த சங்கரியும் நீண்ட கடிதமாய் தான் எழுதுகின்றார். யாரும் பதிலளித்தாத காணோம்...

Reply
#3
சங்கரி இப்பவும் இருக்கின்றாரோ... இப்படி மடல் எழுதும்போது தான் கண்டு கொள்ளமுடிகின்றது. இல்லாவிட்டால் தெருநாய்க் கதைதான்.
[size=14] ' '
Reply
#4
RaMa Wrote:ஆனந்த சங்கரியும் நீண்ட கடிதமாய் தான் எழுதுகின்றார். யாரும் பதிலளித்தாத காணோம்...

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#5
யாரும் இவரிடமிருந்து கடிதம் வந்ததாக சொல்லவில்லையே...........

இப்படிப்பட்ட கடிதங்களை எழுதி பத்திரிகைகளுக்கு மட்டுமே அனுபிவிட்டு ரீல் விடுவார்.
[size=18]<b> ..
.</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)