Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் குடாக்கடலில் ஒருவகை நச்சுநீர்? உடலில் பட்டால் .....
#1
குடாக்கடலில் ஒருவகை நச்சுநீர்?
* உடலில் பட்டால் நெருப்பினால் சுட்ட உணர்வு!
* வியர்வை துவாரங்களில் ஊசி குத்திய வேதனை!!
* எந்த வகையான மருந்துகளுக்கும் தீராத பாதிப்பு!!!
யாழ்.குடாக்கடலில் கரையை அண்டிய ஆழம் குறைந்த கற்பாறைகளைக் கொண்ட ஒரு பகுதிக் கடலில் ஒரு வகை நச்சு நீர் கலந்திருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழிலில் ஈடுபட்டிருக்கின்றபோது இந்த நீர் உடலில் பட்டதும் நெருப்பினால் சுட்டது போன்று உடல் முழுவதும் ஊசியால் குத்துவது போன்று தாங்கமுடியாத வேதனை ஏற்படுகிறது என்றும் மீனவர்கள் கூறு கின்றனர். இதன் தாக்கமும் வேதனையும் எந்த வகையான மருந்துகளுக்கும் தீராததாக இருக்கின்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடல் நீரிலிருந்து வேறுபடுத்திப்பார்க்க முடியாத வகையில் நிறத்திலும் செறி விலும் கடல்நீர் போன்றே கட்சியளிக்கிறது இந்த நச்சுநீர். கடந்த சில நாள்களாக குடாக் கடலில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பல மீனவர்கள் இந்த நச்சு நீரின் தாக்கத்துக்கு இலக்காகியிருக்கின்றனர். இதனால் மீன வர்கள் தொழில் செய்வதற்கு அஞ்சுகின்ற னர் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடல்நீரில் ஏற்பட்டிருக்கின்ற இந்த மாற்றம் தொடர்பாக உடனடியான உரிய ஆய்வுகளை மேற்கொண்டு மீனவர்களைப் பாதிப்பிலிருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாஷை யூர் புனித அந்தோனியார் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரி யல்வளத் திணைக்கள உதவிப்பணிப்பாள ருக்கு மகஜர் கையளித்திருக்கின்றனர்.
இந்த கடல் நீரின் மாற்றத்தினால் மீனவர்களால் உணரப்பட்ட தாக்கங்களையும் குறிப்பிட்டு அந்த மகஜர் கையளிக்கப்பட்டது.
அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:
யாழ்.குடாக் கடலை அண்மித்த ஆழம் குறைந்த பகுதியில், குறிப்பாக கற்பாறை களை கொண்ட கடற்பகுதியில் "நச்சு நீர்' அல்லது "சுணை' என பெயர் குறிப்பிடப்படு கின்ற கண்களுக்குப் புலப்படாத நீர் தொழி லாளர்கள் தொழிலை மேற்கொண்டிருக்கும் போது உடலில் படுவதால் தாக்கம் ஏற்படு கிறது.
லீஞிட் அளவு பகுதியிலேயே நச்சுநீர் தாக்கியது உணரப்படும். பின்னர் உடல் முழுவதும் அதன் தாக்கத்தின் வேதனை பரவிவிடும். இந்தத் தாக்கம் ஒரு சிலருக்கு மரணத்தைக் கூட ஏற்படுத்தியுள்ளது. மேற்படி தாக்கத்திற்குள்ளானவர்களிடம் இருந்து பெற்ற அனுபவங்களை உள்ளடக் கிய மேலும் பல தகவல்களை தருகின்றோம்.
* இந்தத் தாக்கம் ஏற்பட்டதும் அக் கடற்பகுதியை அவதானித்தால் கண்ணுக்குத் தெரியக் கூடிய எந்தப் பொருளோ அல்லது அக் கடற்பகுதியில் நிறமாற்றமோ புலப்பட மாட்டாது.
* தாக்கத்திற்குள்ளான உடற்பகுதியில் நெருப்பு சுட்டது போன்ற உணர்வு உடன் உணரப்படும்.
* அதிகமாக 30 நிமிட நேரத்திற்குள் உடல் முழுவதும் தாங்கமுடியாத வேதனை பரவிவிடும். இது 24 மணி வரை தணியாது. தாக்கத்தின் செறிவிற்கேற்ப 2,3 நாள்கள் வரை நீடிக்கும்.
* ஒரு மணி நேரத்தினுள் ஒவ்வொரு அணுவும் அல்லது வியர்வைத் துவாரமும் ஊசியால் குத்துவது போன்ற வேதனை உணரப்படும்.
* உடல் முழுவதும் குத்துவதால் தொடர் இருமலும். தும்மலும், மூக்கில் நீரும், கண்ணீரும், நாவில் அதிக உமிழ்நீரும் உண்டாகும்.
* சிறுநீர், மலம் கழிக்கமுடியாது.
* நச்சுநீர் பட்ட இடத்தில் ஏற்பட்ட எரிவு அல்லது அளத்தல் சாதாரண "கடற் சொறி' தாக்கியது போன்றும் உணரப்படும்.
* தாக்கம் ஏற்பட்ட பின் உணவு அருந்தினால் அதன் வேதனை இரட்டிப்பாகும்.
* தென்மேற்குப் பருவக்காற்றுக் காலங் களில் கூடுதலாக இத்தாக்கம் ஏற்படுவதில்லை.
* எந்தப்பிரிவு வைத்திய முறைகளும் பயன்தருவதில்லை.

மேற்கூறிய அனுபவக் குறிப்புக்களை முன்னிறுத்தி ஆய்வுகளை மேற்கொண்டு தடுப்பு முறைகளையோ அல்லது தாக்கத் திற்கு உடன் நிவாரண மருந்துக்களையோ கண்டுபிடித்து தொழிலாளர்களுக்கு உதவ ஆவண செய்யுமாறு தங்களை பணிவன் புடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Uthayan
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
இதற்கும் திருகோணமலையில் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதற்கும் சம்பந்தமுண்டா?

புதிதாக தொழிற்சாலைகள் ஆரைம்பிக்கப்பட்டு கழிவு நீர் கடலோடு கலக்கவிடப்படுகிறதா?

இல்லை தமிழீழத்தின் பொருளாதாரத்தை சிதைக்க ஏதாவது திட்டமிடப்பட்டுள்ளதா?
Reply
#3
kurukaalapoovan Wrote:இதற்கும் திருகோணமலையில் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதற்கும் சம்பந்தமுண்டா?

புதிதாக தொழிற்சாலைகள் ஆரைம்பிக்கப்பட்டு கழிவு நீர் கடலோடு கலக்கவிடப்படுகிறதா?

இல்லை தமிழீழத்தின் பொருளாதாரத்தை சிதைக்க ஏதாவது திட்டமிடப்பட்டுள்ளதா?

ஆமா நீங்கள் சொல்வது போல் தமிழீழத்தின் வளத்தை குறைக்க எதாவது எற்பாடாய் இருக்கும்.

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)