Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருடப்பட்ட கமராவை தமிழீழ காவல்துறையினர் கைப்பற்றினர்
#1
மீசாலையில் திருடப்பட்ட கமராவை
காவல்துறையினர் கைப்பற்றினர்

மீசாலைப் பகுதியில் களவாடப்பட்ட இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான வீடியோக் கமராவினை தமிழீழ காவல் துறையின் யாழ். மாவட்ட பணிமனை யைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மீட்டெடுத்து உரியவரிடம் கையளித்தனர்.
கடந்த 9ஆம் திகதி மீசாலைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தப் பட்டிருந்த வாகனமொன்றில் வைக்கப் படிருந்த வீடியோக் கமராவே களவாடப் பட்டது.
இது தொடர்பாக உரியவர்கள் பளை யில் தற்காலிகமாக இயங்கும் தமிழீழ காவல்துறையின் யாழ். மாவட்ட பணிமனையில் முறைப்பாடு பதிவு செய்தனர்.
இதனையடுத்து, காவல் பணிமனைப் பொறுப்பாளர் சண்முகநாதன் ரகு, தலை மைக்காவலர் எஸ்.சிறிதரன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் துரிதவிசாரணை கள் மேற்கொண்டனர்.
இதன்போது வீடியோக் கமராவும் மீட்கப்பட்டது. அதனைத் திருடியதாக சந்தேசிக்கப்படும் நபரை காவல்துறை யினர் கைது செய்து விளக்க மறியலில் வைத்துள்ளனர்.
இவர் இந்த வார முற்பகுதியில் தமிழீழ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். என்று தெரிவிக்கப்பட்டது.

http://www.uthayan.com/pages/news/today/18.htm
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)