11-21-2005, 11:39 AM
<b>நோர்வேயை விமர்சிப்பதை நிறுத்தி புதிய அரசு புலிகளுடன் பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டும்</b>
பிரபாவையும் சந்திக்க மேற்குலக ராஜதந்திரிகள் விருப்பம்
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளதையடுத்து, அரசிற்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதான முயற்சிகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான முயற்சிகளில் மேற்குலக ராஜதந்திரிகள் ஈடுபட்டுள்ளனர். இம் முயற்சிகள் குறித்து அவர்கள் இந்தியாவிற்கும் அறிவித்துள்ளனர்.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் அதிகரித்து வரும் வன்முறைகளை முடிவிற்கு கொண்டுவர அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டுமென, டோக்கியோ நிதியுதவி மாநாட்டில் இணைத் தலைமை வகித்த அமெரிக்கா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் என்பன கருதுகின்றன.
குறிப்பாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது அரசியல் கூட்டணியினரும் நோர்வேக்கு எதிராக பகிரங்கமாக முன்வைத்துவரும் விமர்சனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டுமென மேற்குலக ராஜதந்திரிகள் விரும்புகின்றனர்.
இத்தகைய விமர்சனங்கள் தொடருமாயின், தொடர்ந்தும் தன்னால் சமாதான முயற்சிகளில் அனுசரணையாளராக செயற்பட முடியாது என நோர்வே தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ராஜபக்ஷவும், அவரது கூட்டணியினரும் தேர்தலின்போது, அரசியல் இலாபங்களுக்காகவே நோர்வேயை விமர்சித்து வந்தனர். தற்போது, தேர்தல் முடிவடைந்திருப்பதால் நோர்வேக்கு எதிரான பிரசாரங்கள் கைவிடப்படும் என தாம் நம்புவதாக மேற்குலக ராஜதந்திரியொருவர் ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புலிகளுடனான சமாதானப் பேச்சுகளை மீள ஆரம்பிப்பதற்கு இதுவே தக்க தருணம் என கருதும் மேற்குலக ராஜதந்திரிகள், விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனைச் சந்திப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மேற்குலக ராஜதந்திரிகளை சந்திக்கின்ற போதிலும் பிரபாகரன் அவர்களைச் சந்தித்து பேசுவதை தவிர்த்து வருவதாகவும் ராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம், புதிய அரசில் புலிகள் நம்பிக்கை வைக்கும் விதத்தில் புதிய ஜனாதிபதி செயற்பட வேண்டும் எனவும் மேற்கு நாடுகள் விரும்புவதாகவும் அந்த ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Thinakural

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>