Posts: 170
Threads: 43
Joined: Sep 2004
Reputation:
0
<span style='color:indigo'>அரசியலில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தற்பொழுது பல்டி அடித்து நாடாளுமன்றத்துக்கு செல்வதுக்கு திட்டமிட்டிருப்பது பற்றி அண்மையில் ஐ.பி.சி வானொலியில் ஒரு கருத்து பகிர்வு இடம்பெற்றது (இன்று அதாவது 24/11/2005), இதில் முக்கிய கருத்துக்கள் 2 முன்வைக்கப்பட்டது,
சந்திரிக்காவின் நாடாளுமன்ற மீள் பிரவேசம்...
1.தன்னலம் கருதியா?
2.பொது நலம் கருதியா?
இதைபற்றி யாழ்கள உறவுகளே உங்கள் கருத்துக்களை யாழில் முன்வையுங்களேன்???
இதைபற்றி பல நேயர்கள் ஐ.பி.சியில் முன்வைத்தார்கள்,, அவற்றில்..
*இவ்வளவு நாளும் தன்னலம் கருதி செயற்பட்டவர் எனி பொது நலத்துக்காக செயற்பட போகிறார் எனவும்...
*நாடாளுமன்றம் சென்றால் தானக்கு ஏற்பட்டிருக்கும் உயிராபத்துகளை சமாளிக்கலாம்,,,
*தான் அரசியலில் இருந்து விலகிவிட்டால், தனது குடும்ப அரசியல் தன்னோடு அஸ்தமனம் ஆகிவிடும் என்று நினைத்து தனது மகளை, அல்லது மகனை அரசியலுக்கு கொண்டுவரும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது...
*தான் அரசியலில் இருந்து விலகினால், கொலை செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் லக்ஷமன் கதிர்காமர் வழக்கில் தன்னை விசாரிக்க சாத்தியக்கூறுகள் இருப்பதால், அரசியலில் தொடர்ந்து இருந்தால்த்தான் தப்ப முடியும்....
இப்படி பல கருத்துகளை முன்வைத்தார்கள்... உங்களின் கருத்துகளை முன்வையுங்களேன்,,, :?:</span>
[b]
,,,,.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பொது நலம் கருதி சந்திரிகா மீண்டும் அரசியக்கு வர விரும்புகின்றார் என்று எனக்கு தோன்றவில்லை. பொதுநலன் கருதியே அவர் மீண்டும் அரசியலுக்கு வரமுயல்கின்றார் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொண்டாலும் கூட அது காலம் கடந்த ஞானோதயம். அதற்கு அவருக்கு கிடைத்த வாய்ப்புக்களை அவர் தவறவிட்டு விட்டார். பொதுவாக அரசியல் மற்றும் பதவிகளில் இருப்போர் தாம் இறக்கும் வரை அதை விட்டு விலக விரும்புவதில்லை. அந்த அளவுக்கு பதவி மோகம் அவர்களை பிடித்து ஆட்டுகின்றது. சிறிமா பண்டாரநாயக்காக தனது இறுதிக்காலத்தில் செயற்படமுடியாத நிலையில் கூட அரசு பதவியில் இருக்க விரும்பினார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் தேசிய தின நிகழ்வு என்று நினைக்கின்றேன். அதற்கு பிரிட்டிஷ் இளவரசர் சார்ளஸ் கூட வந்திருந்தார். அதில் இலங்கை தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது ன்அவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை, அவரின் உடல்நிலை அந்த அளவு மோசம் அடைந்திருந்தது. ஆனாலும் அவர் பதவியில் இருந்தார். இதை பதவி மோகத்துக்கு ஒரு உதாரணமாகவே சொல்கின்றேன், சிறிமாவோவை மட்டும் குறிப்பிட்டு அல்ல.
இப்போது சந்திரிகா மீள அரசியலுக்கு வர முயன்றால் அது அவரது சொந்த அபிலாசைகளை கருதியே இருக்கும். இலங்கை அரசியலில் உச்சத்தில் இருந்த அவர் மகிந்த பதவியேற்றதும் திடீரென அதலபாதாளதுக்கு போய்விட்டது போன்ற ஒரு நிலைமையை செய்திகள் காட்டுகின்றது. அதிகாரம் கையை விட்டு சென்றுவிட்ட நிலையில் சுதந்திர கட்சியில் அவருடைய பிடிப்பு குறைவது போலவும் தெரிகின்றது. கட்சியில் தனது இடத்தை தக்க வைத்து கொள்ளவோ அல்லது மகிந்தவுக்கு எதிராக உள்ள அரசியல் தலைமைத்துவ வெற்றிடத்தை கைப்பற்றவோ அல்லது இன்ன பிற சுய நலங்களுக்காகவோ அவர் நாடளுமன்றத்துக்கு திரும்ப முயலலாம்.
இந்த தலைப்புடன் தொடர்புடைய செய்தி இணைப்பு ஒன்று
http://www.theacademic.org/stories/1132905...ry.shtml[/size]
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
மீண்டும் நாடாளுமன்றத்தில் நுழைய முயற்சிப்பது வெட்கக் கேடானது: சந்திரிகாவுக்கு அமைச்சர் கண்டனம்!
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக தேசியப் பட்டியலின் மூலம் தன்னை நியமிப்பதற்கு முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க முயற்சிப்பது வெட்ககக்கேடான செயல் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் விஸ்வ வர்ணபால கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
தேசியப் பட்டியலின் மூலம் தன்னை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவருமாறு முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டிருக்கிறார்.
எந்தவொரு அரசியல்வாதியும் செய்யக்கூடாத வெட்கக்கேடான செயல். பதவி மீது அவருக்கிருக்கும் ஆசை இதன் மூலம் வெளிப்படுகிறது.
அரசியல்துறை பேராசிரியர் என்றவகையில் தனக்கிருக்கும் அனுபவத்திற்கமைய உலகின் எந்தவொரு நாட்டினது அரச தலைவரும் தனது பதவிக்காலத்திற்குப் பின்னர் இத்தகைய கோரிக்கையை விடுக்கவில்லை.
ஓய்வு பெறுபவர்கள் அரசியலிலிருந்து ஓய்வுபெற்று புத்தகம் எழுதுதல் போன்ற நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகின்றனர் என்றார் விஸ்வா வர்ணபால.
<b>நன்றி புதினம்</b>
<i>சந்திரிகாவின் அரசியல் மீள் பிரவேச முயற்சி குறித்து அவருடைய சொந்த கட்சி அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் கருத்தை பாருங்கள். ஓய்வு பெற்றதும் அவருடைய மரியாதை முக்கியத்துவம் எல்லாம் போய்விட்டது. அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி வேறு விடயங்களில் கவனத்தை செலுத்துவதே அவருக்கு நன்மை பயக்கும். இதனிடையே மகிந்தவையே சுதந்திர கட்சிக்கும் தலைவராக்க வேண்டும் என்று ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே கருத்து தெரிவித்துள்ளார்.</i>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
பதவி ஆசை வெக்கம் அறியாதது, அதுவும் சந்திரிக்காவுக்கு இருக்கிறது பேராசை.
.
.
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
அதுவும் சந்திரிகாட்டை வெக்கமா...........அப்பிடியெண்டா..
மனுசி இப்பவும் மேக்கப் போட்டுக் கொண்டு நாடு சுத்தத் திரியுது அதிகமா ஆசைப்பட்ட பெம்பிளையள் வாழ்ந்ததில்லை - இதுக்கைத் அம்மாவும் சேருறா எங்கைபோய் நிக்கப் போதோ தெரியலை.......
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
சந்திரிக்கா நாடாளுமன்றம் வந்தால் அவருக்கு வெளிவிவகார அமைச்சு பதவி கொடுக்கப்படலாம் என்ற தகவல்கள் அடிபடுகின்றன. இதன் மூலம் மேலும் எமது போராட்டத்தை கேவலப்படுத்தும் முயற்சி ஏதும் எடுக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது. கதிர்காமரின் இடத்தை அதன் மூலம் நிரப்ப சந்திரிக்கா முடிவு செய்திருக்கலாம்.
இருந்தாலும் மகிந்த ராஜபக்சா கட்சியில் சந்திரிக்காவுக்கான செல்வாக்கை அதிகரிக்கும் எந்த முயற்சிக்கும் ஒத்துழைப்பு வழங்கமாட்டார் என்பது உறுதி. பண்டாரநாயக்கா குடும்பத்தை உயரவிடாமல் இருந்தால் தான் தான் ஆட்சி செய்யமுடியும் என்பது மகிந்தவுக்கு தெரிந்த உண்மை.
[size=14] ' '
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
நாங்கள் இப்படி எல்லாம் து}ற்றி எழுதியதைப் பார்த்து விட்டு சந்திரிக்கா நாடாளுமன்றம் வரும் ஆசையை கைவிட்டிட்டாவாம். அழகப் பெருமாவுக்கு தான் அது கிடைக்கப்போகுதாம்.
[size=14] ' '