Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் வெள்ளப்பெருக்கு - ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு
#1
யாழில் வெள்ளப்பெருக்கு - ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு
Written by Sankiliyan Sunday, 11 December 2005

யாழ்ப்பாணத்தில் பெய்த அடை மழை காரணமாக மூவாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இடப் பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர். தாழ்ந்த நிலப் பகுதிகளில் குடியிருந்தோரே இவ்வாறு பாதிக்கப்பட்டு பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
கொழும்புத்துறை, குருநகா,; பொம்மைவெளி, ஆனைக்கோட்டை, நல்லூர், நந்தாவில் நல்லூர், முத்திரைச் சந்தை, செட்டியா தோட்டம், தலையாளி, உடுவில், ஆலடி தாவடி, சண்டிலிப்பாய், கல்வளை, தெல்லிப்பளை மற்றும் தீவகத்தில் பல இடங்களிலும், வடமராட்சி, தென்மராட்சி கோட்டங்களில் சில இடங்களுபல இடங்களிலுமமென வெள்ளத்தின் தாக்கத்திற்குப் பொது மக்கள் உள்ளாகியுள்ள போதிலும் இது சம்பந்தமாக உரிய பிரதேச செயலகங்களின் அலுவலர்கள் சென்று பார்வையிட வில்லையென பல இடங்களிலும் மக்கள் தெரிவிக்கின்றார்கள்

அண்மையில் பெய்த மழையின் போதும் கூட உரிய நேரத்தின் போது கிராம அலுவலர்கள் சென்று பார்வையிடாது, பின்னர் காலம்தாழ்த்தி சென்று பார்யிட்டதாகவும் பொது மக்கள் குறை கூறுகின்றனர்.

மழை பெய்து பலமணி நேரம் சென்ற போதிலும் பொது மக்களின் இடங்களுக்குச் செல்ல உரிய கிராம அலுவலர்கள் ஞாயிற்றுக் கிழமையெனக் காரணம் கூறி தட்டிக்கழித்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய நிலையில் இருந்து உரிய அலுவலர்களை மாற்றியமைக்கும் வரை தொடர்ச்சியாக பொது மக்கள் பாதிப்படைந்து கொண்டே இருக்க வேண்டிய நிலமையே காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றார்கள் .


Sankathi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)