Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொழுக்கட்டை கொழுக்கட்டை
#1
[size=13]களஉறவுகளே வணக்கம்.. இந்த கதையை நீங்கள் பாடசாலையில் படித்திருப்பீர்கள். அந்த கருத்தை வைத்து தான் எழுதியுள்ளேன். தாளலயம் என்று ஒரு கூத்து கேள்விபட்டிருப்பீர்கள். அதன் சுருதியுடன் வாசித்தால் மிகவும் நல்லாய் இருக்கும். தாளலயம் என்பது கைகளை சொடுக்கு போட்டுக்கொண்டு எல்லா வார்த்தைகளையும் இரண்டு தரம் கதைப்பது... பிடிக்கும் என்று நினைக்கின்றேன்.

பொன்னன்
தங்கம்மா தங்கம்மா
தங்கமான என் தங்கம்மா
தங்கம்மா:
என்னப்பா என்னப்பா
அடிபடியில் கொஞ்சம் வேலையப்பா

பொன்னன்:
தங்கம்மா தங்கம்மா

தங்கம்மா:
என்னப்பா என்னப்பா

பொன்னன்
எனக்கொரு சமையல் வேலை வந்திருக்கு
என்னவென்று பார்த்து வரேன்

தங்கம்மா:
சரியப்பா சரியப்பா
நேரத்தோடை போட்டு வாங்கோ அப்பா
(பொன்னன் வீட்டை விட்டு போகுதல்)

இந்த சமையல் வேலை செய்து செய்து களைத்துப்போனேன்.
நெருப்பில் நான் காய்ந்து போனேன்
இந்த வேலையையும் மாத்த வேண்டும் ம்ம்ம்ம்
கட்டாயம் இந்த வேலையையும் மாத்தவேண்டும்
என்ன வேலை செய்யிறது
ஆஆஆஆஆஆ
பாடப்போகின்றேன் நான் பாட்டு; பாடப்போகின்றேன்
சங்கீதம் நான் பாடப்போகிறேன்
சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் நான் பாடப்போகின்றேன்
நான் கடக்கப்போறேன் கடக்கப்போறேன்
இந்த ஆற்றை நானும் கடக்க போறேன்
(ஆறு கடத்தல்)
சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் நான் பாடப்போகின்றேன்
சங்கதியான சமையலை விட்டு சங்கீதம் பாடப்போகின்றேன்
…………………………………………..
மாமி வீட்டும் வந்திட்டுது.
தாகமாக இருக்கின்றது.
மாமி வீட்டை போகலமே
(மாமி வீட்டுக்கு செல்லுதல்)

கதவை தட்டுதல்

பொன்னன்:
மாமி மருதம் மாமி
என் தங்கத்தை பெத்த தங்க மாமி

மாமி:
ஆரது ஆரது மருமகனோ
வாருங்கோ வாருங்கோ
உட்காருங்கோ இதில் அமருங்கோ
(கதிரையை எடுத்து போடுதல்)
என்ன தம்பி இந்த பக்கம்
என் தங்கம் சுகம் எப்படி?

பொன்னன்:
அவளுக்கு என்ன ராசத்தி
பிடிஞ்ச கொப்பு புளியங்கொம்புல்லோ
சமையல் காரன் நான் அல்லோ

மாமி: ( உள்ளே போய் வருதல்)
மருமகனே சாப்பிடுங்கோ என் மரு மகனே சாப்பிடுங்கோ

பொன்னன்: (சாப்பிட்டபடி)
இது என்ன புதுச் சாப்பாடு
சுவையும் கொஞ்சம் அதிகமல்லோ
என்ரை சமையல் வாழ்க்கையில்
இது போல கண்டதில்லை

மாமி:
இது தம்பி கொழுக்கட்டை
வறுத்த மாவில் பொரித்து எல்லோ

பொன்னன்:
கொழுக்கட்டையோ மாமி இது கொழுக்கட்டையோ
தங்கம் கூட இதை செய்ததில்லை
தங்கத்திற்கு இது தெரியாதோ
ஒரு நாளும் செய்ததில்லை
மாமி:
ஒம் தம்பி ஒம் தம்பி
தங்கத்திற்கு தெரியும் அல்லோ

பொன்னன்:
அப்ப நான் போயிட்டு வாரேன்
இந்த கொழுக்கட்டையை இன்னும் நான் சாப்பிடணும்
ஆசை தீர நிறைய சாப்பிடணும்
இந்த பெயரை மறக்க மாட்டேன் ஆகா நான் மறக்க மாட்டேன்
வாரேன் மாமி போயிற்று வாரேன் மாமி
கொழுக்கட்டை கொழுக்கட்டை
கொழுக்கட்டை கொழுக்கட்டை
ரூசியான கொழுக்கட்டை
ஆற்றை கடக்க போறேன் இந்த ஆற்றை கடக்க போறேன்

(ஆற்றை கடத்தல்)
என்ன பெயர் அது என்ன பெயர்
ஒ ஆற்றுக்கட்டை அது ஆற்றுக்கட்டை
ஆற்றுக்கட்டை அது ஆற்றுக்கட்டை

பொன்னன்:
தங்கம்மா என் தங்கம்மா
போயிருந்தேன் நான் போயிருந்தேன்

தங்கம்மா:
எங்கையப்பா போனீர்கள்
எங்கையப்பா போனீர்கள்

பொன்னன்:
போயிருந்தேன் நான் போயிருந்தேன்
நான் உன்ர அம்மா வீட்டுக்கு
போயிட்டு இப்ப தான் வாரேன்
எனக்கு அவ மெத்த ருசியான
அத்துக்கட்டை செய்து தந்தவா
உடனடியாக நீயும் எனக்கு அந்த அத்துக்கட்டையை செய்து தரணும்
நான் இதிலே இருக்கின்றேன்

தங்கம்:
ஆத்துக்கட்டையோ அது அத்துக்கட்டையோ
ஏன்னங்க அது என்னங்க

பொன்னன்:
உன்ரை அம்மா எனக்கு சொன்னவா
உனக்கு நல்ல தெரியும் என்று
சலிக்கமால் நீயும் செய்து வா
தங்கம்: (தங்கம் யோசித்தல் என்ன ஆத்துக்கட்டை என்று)

பொன்னன
தங்கம்மா (மிக கோபத்துடன்)
எங்க எனக்கு ஆத்துக்கட்டை
தங்கம்:
எனப்பா அது ஆத்துக்கட்டையோ
எனக்கு ஒன்றும் விளங்கலை எனக்கு ஒன்றும் விளங்கலை

பொன்னன்:
அது ஒன்றும் எனக்கு தெரியாது
எனக்கு இப்போ ஆத்துக்கட்டை வேணும எல்லோ
(தங்கத்திற்கு அடித்தல்)
(தங்கம் அழுதல்)

தங்கம்:
எனக்கு அந்ந ஆத்துக்கட்டை என்னவென்றே தெரியாது
இஞ்ச பாருங்கோ கொஞ்சம் இஞ்ச பாருங்கோ
நீங்கள் அடிச்ச அடியிலை
கையெல்லாம் வீங்கிப்போச்சு
கொழுக்கட்டை மாதிரி வீங்கிப்போச்சு

பொன்னன்:
இதைத்தானே அட உதைத்தானே
நான் கேட்டேன் தங்கம்மா இவ்வளவு நேரம்
ஆத்துக்கட்டை அடசீ கொழுக்கட்டை
என்ரை தங்கம் கொழுக்கட்டை
செய்து வந்து விடு

Reply
#2
றமா ஆகா றமா பழைய தாளலயம் ஞாபகப் படுத்திவிட்டீர்கள். ம்ம் இதை நான் சின்னனுல என்ட தாத்தா ஒரே சொல்லுறவர் இப்ப கேட்டது எனக்கு என் தாத்தா ஞாபகம் வந்துட்டுது. ம்ம் நல்லா இருக்கும். இன்னும் எழுதுங்கோ
<b> .. .. !!</b>
Reply
#3
ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி ரமா. இந்த கதை சிறு வயதில் கேட்ட ஞாபகம். அதன் பின்பு இப்போது தான் மீண்டும் படிக்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
<!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin--> இப்ப கேட்டது எனக்கு என் தாத்தா ஞாபகம் வந்துட்டுது. ம்ம் நல்லா இருக்கும். இன்னும் எழுதுங்கோ<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்ப உங்களுக்கு என்ரை சின்னப்புன்ரை ஞாபகம் வந்திட்டுது எண்டு சொல்லுங்கோ எங்கடை ஞாபகத்தை ரசிகைக்கு கொண்டு வந்தா ராமாக்கு வாழ்த்துக்கள்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->அப்ப உங்களுக்கு என்ரை சின்னப்புன்ரை ஞாபகம் வந்திட்டுது எண்டு சொல்லுங்கோ <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இப்ப சின்னப்புவைப் பாத்தியளா?
நல்ல ஆள் மாதிரியே கதைக்கின்றார். அரட்டை அடிக்கவேண்டாம் என்று எச்சரிக்கை செய்கின்றார். ஒண்டும் புரியவில்லை.

ஆனால் இப்படி அன்பாகப் பழகிய எங்களுடன் "டூ" போட்டது தான் ஏன் எண்டு விழங்கவில்லை Cry Cry
[size=14] ' '
Reply
#6
ஆள்தம்பி சுயநினைவோடை இருக்கிறார் கொஞ்ச நாளா அதுதான் அப்பிடி........... தொடர்ந்து அப்பிடி இருக்க விட்டுவிடுவமா என்ன பயப்பிடாதைங்கோ........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->ஆள்தம்பி சுயநினைவோடை இருக்கிறார் கொஞ்ச நாளா அதுதான் அப்பிடி........... தொடர்ந்து அப்பிடி இருக்க விட்டுவிடுவமா என்ன பயப்பிடாதைங்கோ........<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அங்கிள் எல்லாம் உங்கள் கையில தான் இருக்குது. வாங்கின கடன் ஞாபகம் வரக்கிடையில பழைய நிலைக்கு ஆக்கி விடுங்கோ :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#8
ஆகா..ரமாக்கா...பழைய கதையை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்..நாங்கள் இதை முந்தி மழை பெஞ்சு வெள்ளம்மாக இருக்கும் இல்லையா..அப்போ அதுக்குள்ளால பள்ளுக்கூடம் போகும் போது..கதைச்சுக்கொண்டு போவோம்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> என்னமோ..சினோவுக்குள்ளாலயும் பாடலாம்..என்ன வான்ல வந்து தூக்கிப்போட்டுக்கொண்டு போயிடுவங்கள்.. :roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#9
ஓம் ஓம் எனக்கும் உந்தக் கதை தெரியும் ரமாக்கா.நீங்க சொன்ன விதம் நல்லாயிருக்கு.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
ரமா தாளலயப் பாணியை நினிவு படுதியதற்கு நன்றி.சிறு வயதில் கலை விழாக்களுக்கு தாளலய நாடகங்கள் போட்ட நாபகம்.அது சரி இந்த தாளலய நாடகங்களின் தோற்றுவாய் என்ன?

இதுக்கும் நாட்டுக் கூதுக்களுக்கும் தொடர்பு இருக்கா?தெரிந்தவர்கள் சொல்லவும்.
Reply
#11
ம்ம் வித்தியாசமாய் இருக்கு.... இதுக்கு பெயர் தாளயமா ? :roll:
நான் இன்னவரைக்கும் கேட்டதில்லை :oops: இருந்தாலும் ரமா அக்கவிற்க்கு நன்றிகள்... வாழ்த்துக்களும்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#12
'சங்கடமான சமையலைவிட்டு சங்கீதம் நான் பாடப் போறேன்
சங்கீதம் நான் பாடப் போறேன் சந்நியாசி ஆகப்போறேன்..'

'உன்னை நம்பி வந்தேன் நாதா என்னைவிட்டுப் பிரியலாமா..?'

இப்படியொரு பாடலை சிறு வயதில் கேட்ட ஞாபகம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
வாழ்த்துக்கள்
.
Reply
#13
ரமா
நீங்களா இந்தப்பாடலை எழுதியது? வாழ்த்துக்கள்!
உரும்பிராய் இந்துக்கல்லு}ரி பழைய மாணவர் சங்க (கனடா) கிளையின் விழாவில் இந்த தாளலயம் மிகவும் சிறப்பாக இருந்ததாகக் கூறினார்கள்.
நீங்கள் நன்றாக நாடகங்கள் நடிப்பீர்கள் என்றும் கேள்விப்பட்டேன்.

உங்களை ஒரு சகலாகலா வல்லவர் என்று அழைக்கலாமா?

Reply
#14
சங்கடமான சமையலை விட்டு நான் சங்கீதம் பாடப் போறேன். என்ற பாடு ஞாபகம் வருது. ரமா நல்லா இருக்கு உங்கள் தாளலயம் நினைவு படுத்தியமைக்கு நன்றி
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)