12-24-2005, 08:01 AM
மேய்ப்பர் வழி தொடர்வோம்!
மனுக்குல மேய்ப்பன் இறைதூதன் தேவசுதன் இயேசு பிரான் அவதரித்த கிறிஸ்மஸ் நன்னாள் நாளையாகும்.
அவலங்களுக்கும் அனர்த்தங்களுக்கும் மத்தியில் சமா தானத்தைத் தேடி, அமைதியை நாடி, தீராத ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் காத்திருக்கும் இலங்கைத்தீவின் மக்க ளுக்கு திருமைந்தன் தேவகுமாரனின் வாழ்வும், வழிகாட் டலும் காரிருளில் கிடைத்த அற்புத வெளிச்சங்களாகும்.
சமாதானம், அமைதியான வாழ்வு, இரக்கம், ஈகம், தியாகம் என்ற உன்னத வாழ்வியல் மகத்துவங்களை பூவுல குக்கு எடுத்துரைத்து வழிகாட்டவே மீட்பராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து, மகிமையிலிருக்கும் தேவனுடைய குமாரனாக இருந் தும் வேற்றுமை பாராட்டாது, மானிட சமூகத்தை நாடி, மகிமை யிலிருந்து கீழே இறங்கி வந்தார். மானுடம் செய்த தவத்தின் பேறு அவரது வருகை. காலத்தைக் கடந்த இறைவன், ஞாலத்தைக் காப்பதற்காக ஓலமிடும் மக்களை அவலத் திலிருந்து விடுவித்து அவர்களுக்கு சீலத்தைப் போதிப்பதற்காகக் காலத்துக்கு உட் பட்டு, பாலனாய்ப் பிறந்து, மானு டத்துக்கும், தேவனுக்கும் பால மாய் அமைந்தான். பாடுகளைச் சுமந்து, பார் உலகை அர வணைத்தான். அன்பு, அஹிம்சை வழியில் மனிதரை நல்வழிப்படுத்தினான்.
ஆரம்பம் முதல் இறுதிவரை இறைதூதரின் செயற்பாடு சமாதானத்தை அறிவிக்கும் மாண்புமிக்க பணியாகவே அமைந் தது என்று நற்செய்தி அறிவிக்கும் ஏடுகள் நமக்கு உணர்த்து கின்றன.
தமது பணி வாழ்வை ஆரம்பிக்கும் அவரது மலைப் பிரசங் கம் கூட அமைதியை வலியுறுத்துவதாகவே அமைந்தது.
சமாதானத்திற்காக மானுட அமைதிக்காக தன் சொல் லாலும், செயலாலும், ஜீவனாலும் நற்பணி புரிந்த நமது மேய்ப்பர் அதற்காகவே தமது உயிரையும், உடலையும் கூட அர்ப் பணித்தார் என்பதே அவரது வாழ்வு காட்டும் சிறப்பாகும்.
""இருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்ட னர்; மரண நிழல்படும் நாட்டில் உள்ளோருக்கு ஒளி உதித் தது; சுடர் வீசிற்று'' என்று தேவசுதனின் பிறப்புக் குறித்து முன்னறிவிக்கப்பட்டது.
இன்று மரணங்கள் மலிந்த பூமியில், மன்றாடும் நமது மக்கள் இயேசுவின் இந்தக் கிறிஸ்தோதயம் அந்த நெருக் கடி களில் இருந்து தமக்கு விடிவையும், ஒளியையும் பெற்றுத் தராதா என்று ஆதங்கத்தோடு ஏங்குகின்றார்கள்.
""கஷ்டப்பட்டோர் பேறுபெற்றவர்கள். ஏனெனில், மகிமை யில் உள்ள ஆண்டவரின் ஆசீர்வாதம் அவர்களுக்கு உண்டு.'' என்பது உன்னத வாக்கியம்.
இலங்கைத் தீவில் தமது வாழ்வியல் இருப்புக்காகவும் அடிப்படை உரிமைக்காகவும் சொல்லொணாத் துன்ப துயரங் களை நிதம் நிதம் அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் தமி ழர்கள். கஷ்டங்களின் பேறாக பாடுகளின் விளைவாக சுபீட்சமும், சுதந்திர வாழ்வும், நிலையான அமைதியும், நேர்சீரான வாழ்வும் தங்களுக்குக் கிட்டாதா என்ற நியாய மான எதிர்பார்ப்பு அவர் களின் மனதில் ஏக்கத்தோடு இழை யோடுவது நியாயமானது.
கஷ்டங்களுக்கு மத்தியில் நம்பிக்கை. எதிர்பார்ப்பு. இது தான் வாழ்வியலின் அடிநாதச் சிறப்பு.
இதன்படி, கிறிஸ்தோதயத் திருநாளில் தேவசுதனின் கிருபையால் இதுவரை நாம் அனுபவித்த அவவாழ்வும் அவ லங்களும் அகன்றுவிடும் என்ற நம்பிக்கை மிதமிஞ்சிப் பிறப் பதில் தவறில்லை. அதுவும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வாழ்வில் இந்த கிறிஸ்மஸ் திருநாள்கள் மிக முக்கியமான நம் பிக்கைதரும் தினங்களாகும்.
புதிய மிலேனியம் ஆண்டின் கிறிஸ்மஸ் தினத்தில்தான் நீதியான அமைதியான சமாதானமான நிரந்தரமான தீர்வு ஒன்றை எட்டுவதற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் ஒருதலைப் பட்சமாக யுத்தநிறுத்தத்தை அறிவித்தார் தமிழர்களின் தேசியத் தலைவரான வே. பிரபாகரன். ஆனால், அந்த அழைப்பை தென்னிலங்கையின் அப்போதைய தலைவியான ஜனா திபதி சந்திரிகா குமாரதுங்க உதாசீனப்படுத்தினார்; நிராகரித் தார். அதனால் மக்களின் எதிர்பார்ப்புத் தோற்றுப்போயிற்று. பாடு களைச் சுமக்கும் அவலம் தொடர்ந்தது.
அடுத்த ஆண்டில் 2001 டிசெம்பரில் கிறிஸ்தோயத் திருநாள் நம்பிக்கை ஒளிக்கீற்றுடன் பிறந்தது. டிசெம்பர் 5 தேர்தலை அடுத்து ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு பதவியேற்ற நிலையில் இம்முறையும் கிறிஸ்மஸுடன் ஒருதலைப்பட்சமாக யுத்தநிறுத்தத்தை அறிவித்து அமைதி முயற்சிகளுக்கு பிள்ளையார் சுழி போட்டார் தலைவர் பிரபா கரன்.
அமைதி முயற்சிகள், சமாதானப் பேச்சுகள் என்ற நம்பிக்கைதரும் எத்தனங்களுடன் 2002 கிறிஸ்தோயத் திருநாள் பிறந்து கழிந்தது.
ஆனால், மீண்டும் அவலம் 2003 கிறிஸ்மஸை ஒட்டி நேர்ந்தது. பிரதமர் ரணில் தலைமையிலான அரசின் அமைதி முயற்சிகளை நசுக்கி பௌத்த, சிங்களப் பேரினவாதம் விஸ் வரூபம் எடுக்க வாய்ப்பளித்த அப்போதைய ஜனாதிபதி சந் திரிகாவின் செயற்பாடுகளினால் அவநம்பிக்கையுடன் அந்த ஆண்டில் கிறிஸ்மஸை சந்தித்தார்கள் இலங்கைத் தீவு மக்கள்.
அதற்குப் பின்னர் கடந்த ஆண்டிலும், இம்முறையும் மிகமிக மோசமான அச்சம் தருகின்ற பீதி ஏற்படுத்துகின்ற அனு பவங்களோடும் எண்ணங்களோடும் தேவசுதன் பிறப்பை எதிர் கொள்கிறார்கள் நம்மக்கள்.
எந்த நேரமும் மீண்டும் யுத்தம் வெடிக்கலாம் என்ற மிரட்சி ஒவ்வொருவர் மனதிலும் நெருடுகின்றது. நம்பிக்கை தகரும் குழப்பநிலையே நீடிக்கின்றது.
இறைமகன் இயேசு காட்டிய சமாதான வழியில் மற்ற மனிதர்களையும், இனத்தையும் தன்னைப்போல் மாண்புடன் மதிக்கின்ற பாதையில் செயற்படுகின்ற மேலான மனப் பாங்கும், மனப்பக்குவமும் நம் இலங்கைத் தீவின் தலை வர்களுக்கு வராத வரையில் தேவன் காட்டிய அமைதி வாழ்வு நமக்குக் கிட்டப்போவதில்லை. அத்தகைய நல்வழியில் தேசத் தலைவர்கள் நடப்பதற்கு இறைதூதர் வழிகாட்டு வாராக!
Uthayan

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>