12-24-2005, 12:06 PM
ஈழத்தமிழர் உள்ளம் கவர்ந்த தமிழகத் தலைவர்
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2005/December/24/p2.jpg' border='0' alt='user posted image'>
தமிழ் கூறும் நல்லுலகில் கடந்த நூற்றாண்டில் அனைவரும் போற்றுதற்கு உரியராகி விளங்கியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள். கடந்த நூற்றாண்டு முற்பகுதியில் தமிழ்த் திரைப்படத்துறை எதிர் பாராவகையில் அனைவரதும் உள்ளங்களையும் கவர்ந்து வளர்ச்சியடைந்தது. இத் திரைப்படத்துறையில் எம்.ஜி.ஆர்.அவர்கள் நடிகராக விளங்கினார். தமது இயல்பான நடிப்பாற்றலாலும் தான் ஏற்ற பாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்திய சிந்தனைகளாலும் மக்கள் அனைவரையும் கவர்ந்தார்.
திரைப்படங்கள் சமயம் சார்ந்த பொழுதுபோக்குக்கு உரியன என இல்லாமல் சமுதாயச் சீர்திருத்தங்களுக்கு உரியன ஆக வழிப்படுத்தினார். இதனால் கிராமப் புற மக்கள் பெரும் பயன் பெற்றனர். கிராமத்து மக்கள் எம்.ஜி.ஆர்.மன்றங்களை அமைத்து இவரது சிந்தனைகளுக்கு உறுதுணை ஆயினர். மக்களின் நன்மதிப்பைப் பெற்ற எம்.ஜி. ஆர்.அவர்கள் அறிஞர் அண்ணா அவர்களின் கொள்கையினால் கவரப்பெற்று அவரது தி.மு.க.இயக்கத்தில் இணைந்து அவருக்கு உறுதுணை ஆனார். அவர் தமிழக அரசுப் பொறுப்பை ஏற்றபோது அவரின் அமைச்சர்களுள் ஒருவர் ஆனார்.
எம்.ஜி.ஆர் அவர்கள் சமுதாயச் சீர்திருத்தக் கொள்கையினர் எனினும் தமிழ்ப்பற்று உள்ளவர். ஆகவே சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு நடைபெற்றபோது இம்மகாநாடு சிறப்பாக அமைவதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் பெரும்பணி செய்தார். அறிஞர் அண்ணா அவர்களின் பின் தமிழக முதல்வராக கலைஞர் வருவதற்கு எம்.ஜி.ஆர். உறுதுணையாக இருந்தார். கலைஞரது அமைச்சர்களுள் ஒருவராக இருந்தார்.ஆனால் இருவருக்கும் எதிர்பாராத வகையில் கருத்து வேறுபாடு வந்தபோது எம்.ஜி.ஆர்.அவர்கள் தி.மு.க.அமைப்பில் இருந்து விலகி அ.தி.மு.க.அமைப்பை நிறுவி அதன் தலைவர் ஆனார்.
தமிழுலகில் பெருமதிப்புப் பெற்று விளங்கிய கலைஞர் அவர்களையும் அவரது பலம் வாய்ந்த அமைப்பையும் எம்.ஜி.ஆர்.எதிர்கொள்வது பயன் தராது எனத் தமிழ் உலகு எண்ணியது. ஆனால் எதிர்பாராவகையில் தமிழகப் பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர்.அவர்கள் பெரும் வெற்றி பெற்றுத் தமிழக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுத் தமிழக முதல்வர் ஆனார்.எம்.ஜி.ஆர் அவர்கள் இயல்பாகவே சிந்தனை ஆற்றலும் செயலாற்றலும் உள்ளவர். ஆகவே தமது சிந்தனைகள் பலவற்றைச் செயற்படுத்தினார். தமிழறிஞர் பலரைத் தம் அமைச்சர் அவையில் இணையச் செய்து தமிழக ஆட்சியை மேற்கொண்டார். நல்ல பல செயல்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தினார் ஆத்மீக அறிஞர்களின் அறிவுரைகளையும் பெற்றார்.
உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு மதுரையில் நடைபெற்ற போது அம்மகாநாடு மிகச் சிறப்பாகவும் பயன் உள்ளதாகவும் அமையும்படி வழி நடத்தினார். அரசியல் அறிஞர்களிலும் பார்க்கத் தமிழறிஞர்கள் மேலானவர்கள் என்பதை வெளிப்படுத்தினார். பெரும் தமிழறிஞர்களுக்குப் பெரும்நிதி வழங்கி அவர்கள் வாழ்வு வளம் பெறச் செய்தார். உலகத் தமிழ் வளர்ச்சிக்காக இன்று சிறப்புற்று விளங்கும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிறுவினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நன்கு செயற்பட உதவினார். தமிழக அறிஞர் துணையோடு தமிழில் சில எழுத்துகளின் வரிவடிங்கள் அமையச் செய்தார். அரசியலில் இணைய முன் இலங்கைக்கு வந்து இங்கு உள்ள தமிழர்களுக்குத் தம் அன்பை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர் அவர்கள் இலங்கையிற் பிறந்தவர். தமிழினப்பற்று உள்ளவர். ஈழத்துத் தமிழர் தம் வாழ்வகத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் பெரிதும் உதவியதோடு இந்திய அரசு ஈழத் தமிழருக்கு ஆதரவு வழங்கும்படி உறுதுணையானார். இத்தகைய பெரும் பணிகள் மூலம் இவர் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவர் ஆனார். திரைப்பட நடிகர் ஒருவர் ஒரு நாட்டை நன்கு வழிநடத்த இயலும் என்பதை எம்.ஜி.ஆர்.அவர்கள் உலகிற்கு உணர்த்தினார்.
கடந்த நூற்றாண்டு நடுப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட சூழ்நிலையினாலும் இலங்கை அரசு மேற்கொண்ட நிதிக் கட்டுப்பாடுகளினாலும் தமிழகத்து நல்ல நூல்கள் இலங்கையில் பெறுதற்கு அரியனவாக இருந்தன. இந் நிலையில் இலங்கைத் தமிழ் ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் தமிழக நூல்களைப் பெற்றுத் தரும்படி கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு அறிவுறுத்தினர். இந்நிலையில் தமிழக அமைச்சரான இரா.நெடுஞ்செழியன் அவர்கள் பாரதியார் நூற்றாண்டு நிறைவுக்காக இலங்கை அமைச்சர் செ.இராசதுரை அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கை வந்தார். கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலும் உரை நிகழ்த்தினார். இத் தொடர்பினால் இலங்கைத் தமிழ் ஆய்வு முயற்சிகளுக்குத் தமிழக நூல்களை உதவும்படி தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்குத் தமிழ்சங்கப் பொதுச் செயலாளர் விண்ணப்பம் ஒன்றை எழுதி அனுப்பினார். செம்மனச் செல்வராக விளங்கிய முதல்வர் அவர்கள் இவ் விண்ணப்பத்தை உவந்து ஏற்றுக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்குத் தமிழக நூல்களை உதவும்படி உடன் ஆணை பிறப்பித்தார்.
தமிழ்நாடு பொதுநூலகத்துறை அனுப்பிய தமிழக முதற் தொகுதி நூல்களை இந்தியத் தூதுவராக இருந்த டி.என். தீக்சித் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து தமிழக நூல்கள் பொதுநூலகத்துறை மூலம் இச் சங்கத்திற்கு வந்தன. பொதுநூலகத்துறை இயக்குநர் அழைப்பை ஏற்றுத் தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் தமிழகம் சென்று இயக்குநர் உதவியினால் பல்கலைக்கழகங்கள், உயர்பதிப்பகங்கள் ஆதீனங்கள் ஆகியவற்றில் பயன் உள்ள நல்ல நூல்களைத் தேர்ந்து பொதுநூலகத்துறை மூலம் இங்கு வருதற்கு உதவினார். 1995 ஆம் ஆண்டு பொது நூலகத்துறை அனுப்பிய நூல்கள் வராமல் இருந்தன. எனினும், பொதுச் செயலாளர் முன்னைய தொடர்புகளின் துணையோடு தொடர்ந்த முயற்சிகளினால் அரிய 400 நூல்கள் இச் சங்கத்திற்கு வந்தன.
எம்.ஜி.ஆர்.அவர்கள பெரும் சிந்தனையாளர். ஆகவே இச் சங்க நூல்களுக்கு உதவிய நிதியை வங்கியில் இச் சங்கப் பெயருக்கு வைப்புச் செய்வித்தார். இதனால் இந் நிதியைத் தமிழக அரசு வேறுதேவைகளுக்குப் பயன்படுத்தவில்லை. இந்நிதியை வங்கியில் வைப்புச் செய்தததால் ஆண்டுதோறும் வட்டியினால் நிதிவளர்ந்தது. இதனால் தமிழக நூல்கள் தமிழ்ச் சங்கத்திற்குத் தொடர்ந்து கிடைப்பதாயின, இவைகளைப் பொதுநூலகத்துறை உதவி இயக்குநரான யே.செகநாதன் தெரிவித்தார். இந் நூல்களினால் இச் சங்கத்திற்கும் தமிழகத்திற்கும் நற்தொடர்பு உள்ளது. தொடர்ந்தும் நூல்கள் பெற வாய்ப்பு உண்டு. யாழ். நூலகத்திற்கும் பெரும் நிதியைத் தமிழக அரசு வழங்க எம்.ஜி.ஆர் வகை செய்தார். ஆனால் இந்நிதி அமைதியற்ற நிலையால் பயன்படுத்தப்படவில்லை.
தமிழக அரசு வழங்கிய நூல்கள் பன்னீராயிரத்துக்கு மேல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் உள. இவை பல்துறை சார்ந்த அரிய நூல்கள். தமிழக நூல்கள் வந்தபின்பே தமிழ்ச் சங்க நூலகம் சிறந்த பயன் உள்ள நூலகமாக வளர்ந்தது. அனைத்துப் பகுதிகளில் உள்ள தமிழ் ஆய்வாளர், ஆர்வலர்கள், பல்கலைக்கழகத்தினர். கல்விவெளியீட்டுத் திணைக்களத்தினர், கல்லூரிகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய பலரும் இந்நூல்களைப் பயன்படுத்தினர். வெளிநாட்டு அறிஞர்களும் இந் நூலகத்தைப் பயன்படுத்தினர். இந் நாட்டிலும் உலக நாடுகளிலும் பெருமதிப்பைப் பெற்றுள்ளது.
இந் நாட்டில் அமைதியற்ற சூழ்நிலையில் நல்ல தமிழ் நூல்கள் பெறஇயலாத நிலையில் இந்நூலகம் இந்நாட்டிற்குப் பெரும்பணி செய்துள்ளது. சிறப்பாக வட,கிழக்குப் பகுதிகளிலும், மலையகம், தென்மேல் பகுதிகளிலும் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் நூலாக்க அறிஞர்களுக்கும் இந் நூலகம் பெரும் பணி செய்துள்ளது. இவ்வகையில் இதன் பயன்பாடு பெரியது. வேறு நூலககங்கள் இருப்பினும் பயனுள்ள தமிழ் நூல்கள் இருக்கவில்லை. இந் நூலகம் எம்.ஜி.ஆர்.நூலகம் ஆகும்.
முதன் முதல் இச் சங்கத்திற்குப் பெருநிதி வழங்கியவர் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்களே ஆவர். இந் நாட்டில் நிதிவளம் உள்ளவர்கள், நிறுவனங்கள் இருந்தும் பெரும் உதவி வழங்க முன்வரவில்லை. இச்சங்கத்திற்கும் இந் நூலகத்திற்கும் பெரும்வளர்ச்சியும் புகழும் வருதற்கு வழிவகுத்தவர் எம்.ஜி.ஆர்.அவர்கள்.ஆகவே தமிழ்ச்சங்கம் இவரது உருவப் படத்தை இந் நூலகத்தில் திரைநீக்கம் செய்து வைத்துள்ளது. (1995) இந்திய தூதுவராக இருந்த நரேசுவர தயாள் அவர்கள் இதனைத் திரை நீக்கம் செய்து வைத்தார்.
எம்.ஜி.இராமச்சந்திரன் பலதுறைகளிலும் பெரும்பங்களிப்புகளைச் செய்து வந்ததனால் உலகப் பிரசித்தி பெற்ற உயர்ந்த தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இலங்கையில் பிறந்தவரான அவர் இலங்கை மக்களைச் சிறப்பாகத் தமிழர்களைத் தன் உயிராக உடன்பிறப்புகளாக நேசித்தார். எம்.ஜி.ஆர்.தமிழக முதல்வராக இருந்தபோது 1983 ஆண்டுக்கலவர காலத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான சிறந்த பல நூல்களை அன்பளிப்பாக வழங்கியதன் மூலம் தமிழ் இலக்கியத்திற்கும் மொழிக்கும் அவர் ஆற்றிய சேவைகளை எம்மால் நன்றாக அறிந்து கொள்ளலாம். சிறந்த அரசியல் அறிஞராக, இராஜதந்திரியாக, பெருந் தலைவராக, ஒப்பற்ற நடிகராக, கொடைவள்ளலாக, கொள்கைக் கோமானாக, மனிதநேயம் மிக்கவராக, மாமனிதராக வாழ்ந்து மறைந்த இன்னொரு தலைவரை இனி எம்மால் சந்திக்க முடியுமா என்பது சந்தேகம் தான். அவரின் திருவுருவப் படத்தைத் திரைநீக்கம் செய்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தலைநகரில் உலகளாவிய ரீதியில் நல்ல பல பணிகளை ஆற்றிவரும் இச் சங்கத்திற்கு எமது சக்திக்குட்பட்ட சகல உதவிகளையும் எந்த நேரத்திலும் செய்யக் காத்திருக்கிறேன்' எனத் தூதுவர் அவர்கள் தமது உரையில் தெரிவித்தார்.
ஆகவே, வரலாற்றில் இச் சங்க நூலகத்திற்கும் ஈழத்தமிழர்க்கும் பெரும்பணிகள் ஆற்றிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இச் சங்கம் ஈழத்தமிழரும் பெரிதும் கடமைப்பட்டுள்ளனர். இவரது நினைவு நிகழ்வு இச் சங்கத்தில் நிகழ வேண்டிய ஒன்றாகும்.
(கட்டுரையாளர் :கொழும்புத் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர்)
தமிழவேள் இ.க.கந்தசாமி
thinakural

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&