Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அகதியாய்
#1
அகதியாய்

வானத்தை அண்ணாந்து பார்த்தவாறு அம்மா வாசலில் நின்றாள். என்னவோ அம்மாவுக்குள் புகுந்து தன்னைப் பயப்படுத்துவதாக உணர்ந்தவளாய்இ அன்றைய நாளின் இரவு. சிலவேளை நிம்மதியற்றதாக இருக்குமோ என நினைத்து வெள்ளியையும் காணோம் இண்டைக்கும் மழைதானோ தெரியேல்லை என மனதில் நினைத்தவளாய் வசலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த ஒளியற்ற ஊருக்குள் எங்கெங்கோ தொலைவொன்றிற்காக மின்னிப் ப10ச்சிகளாய் விளங்குகள் தெரிந்தன. அந்த இருளுக்குள்ளும் ஓர் உருவம் வருவதை அம்மா உணர்ந்தவளாய் இருக்க அடக்க முடியாத இருமலுக்குள் ஒருமனிதன் அந்தச் சிறிய குடிசையை அண்டி வந்தவரைப் பார்த்து மிக இளகிய மனித நேயத்துடனும் அன்பான வார்த்தைகளுடனும்.
'வாங்கோப்பா என்ன இன்டைக்கு கன நேரமாச்சு"

'ஓமப்பா இண்டைக்கு முதலாளி வரநேரமாச்சுது. காசும் வாங்காம வரேலாது அதுதான் அவர் வரமட்டும் பாத்திருந்து காசு வாங்கி கடைக்கும் போய் சாமானை வாங்கிட்டு வாறான்"

கணவனிடமிருந்து கடைச்சாமன்களை வாங்கியதும் வேகவேகமாக சமையலில் ஈடுபட்டாள் அம்மா. அதற்கிடையில் மூத்தவனின் சிணுங்கல் குரல் இருவரின் காதிலும் கேட்கவே செய்தது!

'அம்மா பசிக்குது.....அம்மா பசிக்குது..."

'தம்பி சத்தம் போடாமல் படு இப்ப அம்மா சமைச்சுத் தந்திடுவா"

'இவன் கடும் மோசம் கத்திக்கத்தியே சின்னதுகளையும் எழுப்பி விட்டிருவான். இப்ப சாப்பிடலாம் சத்தம் போடாமல்படு. கொஞ்சம் பொறப்பு என்ர செல்லமல்லே" என்றாள் அம்மா. மூத்தவன் பசியோடேபடுத்து நித்திரையானான்.

அம்மா சமையலைத் தொடர கந்தர் ஏதோ யோசனையில் மூழ்கியவராய் வாசலில் அமர்ந்திருந்தாள்..

'என்னப்பா யோசிக்கிறியள்"

'வானமும் இருண்டு கிடக்குது. இண்டைக்கும் மழை வந்தால் என்ன செய்யப் போகிறோமோ தெரியாது."

'என்னத்தச் செய்யிறது. வழமைபோல பக்கத்திலூர் கோயில்ல போய் இருந்திட்டு மழை விட்டா வாறது தானே. இதற்கு ஏன் கவலை. கவலை தோய்ந்த மனதோடு அம்மா சொன்னா.

'என்றைக்குத் தான் இந்தப் பிரச்சினை தீர்ந்து சந்தோசமா இருக்கப்போறோமோ இந்தத் துலைவான்கள் ஏன் எங்கட நிலத்தில வந்து நிக்கிறானுகள்! அவன் அவரன் ஊருக்குப் போனால் அவனும் சுகமாக இருக்கலாம். நாமும் சந்தோசமாக இருக்கலாம் என்று புலம்பிக் கொண்டிருந்தார்"

'ஏனப்பா சும்மா புலம்பிறியள். ஏதோ எங்கட தலைவிதி தமிழனாப் பிறந்தா இப்படித்தான் வாழ வேண்டும் என்று எழுதியிருந்தா அத யாரால மாத்த முடியும். ஏதோ எங்கட பொடியளும் இயலுமாப்போல போராடிப் பாக்கிறாங்கள். எப்படியும் இன்னும் கொஞ்சநாளில சரியா வந்திடும் போலகிடக்கு. அப்படிப் பிரச்சினை சரியா வந்திட்டா எல்லாரும் எங்கட ஊர்சனத்தோட போயிடலாம்" என்றவாறே அம்மா எழுப்பி வந்தாள்.

எழும்பி வந்தவள் பிள்ளைகள் நான்கையும் எழுப்பிச் சாப்பாடு கொடுத்தாள்.

'நீங்களும் போய் கால் முகத்தைக் கழுவிற்று வாங்கோவன் சாப்பிடுவம் என்றாள்"

கந்தர் எழும்பிச் செல்லவும் குழந்தைகள் நச்சரிக்கவும் சரியாய் இருந்தது.

'ஏனம்மா இண்டைக்குச் சாப்பிடச் சுணங்கிப் போச்சு இது மூத்தவன். ஏனம்மா அப்பா இண்டைக்கு வரச் சுணங்கினவர். அப்பா வராமல் விட்டிருந்தால் இண்டைக்கு எங்களுக்குச் சாப்பாடு இல்லையோ" இது இரண்டாமவன்.

அம்மா இப்படி எத்தனை நாளைக்குத்தான் பசியும் பட்டினியுமாய்க் கிடக்கிறது. கொட்டிலிலும் ஒரே ஒழுக்காய் இருக்கு. ஏனம்மா எங்கட ஊருக்குப் போன எங்கட வீட்டில இருக்கலாம் தானே" இது மூன்றாமவன்.


எல்லாவற்றுக்கும் காதைக் கொடுத்தவள் அதற்கு விடை தெரிந்தும் தெரியாதவளாய் இப்ப ஒன்றும் என்னட்டக் கேட்க வேண்டாம். அப்பா வந்திடுவார் வேகமாகச் சாப்பிடுங்கோ" என்றவாறே தன் கடைக்குட்டி நிலாவிற்கு சோற்றை ஊட்டிக் கொண்டிருந்தாள்.

ஒருவாறு குழந்தைகளைச் சாப்பிடச் செய்து படுக்க வைத்து விட்டு தன் கணவனுக்குச் சாப்பாட்டைக் கொடுத்தாள்.

'தங்கம் உனக்குச் சாப்பாடு கிடக்கோ நீயும் சாப்பிடு" எனக்குச் சாப்பாடு கிடைக்குதப்பா உழைக்கிற மனுசன் நீங்கள் தான் நல்லாச் சாப்பிட வேண்டும்"

அதுக்காக நீங்கள் சாப்பிடாமல் கிடக்கிறதோ. சாப்பிட்டாத்தானப்பா பிள்ளைகளையும் குடும்பத்தையும் பாக்கலாம். கொஞ்ச மெண்டாலும் இரண்டு பேரும் பிரிச்சுச் சாப்பிடுவம் அதுதான் சந்தோசம்"

இருந்த சாப்பாட்டை இருவருமாகப் பகிர்ந்து சாப்பிட்ட போது இரவு 11.00 மணி ஆகிவிட்டிருந்தது. இருவரும் படுக்கச் சென்றபோது மழையும் தூறத் தொடங்கியது.

'தங்கம் பிள்ளைகளை எழுப்பிவிடு மழை பெரிசாகிறதற்கு முன் கோயிலுக்குப்போவம்" என்றவாறு கந்தர் சில பொருட்களை கையிலெடுக்க அம்மா பிள்ளைகளை எழுப்பி நிலாவைத் தூக்கிக் கொண்டு வானத்தையே பார்த்தவாறு ஓட்டமும் நடையுமாக கோயிலடியைச் நோக்கிச் சென்றனர்.

இவர்கள் போவதற்கு முன்பே அங்கு கூட்டம் கூடியிருந்தது. காரணம் அந்தக் கிராமத்தில இடம் பெயர்ந்தவர்களே அதிகமாக இருந்தனர். அதிலும் வீடில்லாதோரே அனேகமானோர். என்பதால் எல்லோரும் எப்போதோ? கொடுத்த அகதித் தறப்பாளிலேயே கொட்டில் போட்டிருந்தனர். அதிலும் பெரிய பெரிய ஓட்டைகள் என்பதால் மழை என்றால் கோயிலுக்கு வருவது வழக்கம்.

எல்லோரும் கோயிலுக்குள் புகுந்ததும் மழையும் பலத்திருந்தது. கோயிலில் ஒரே சத்தமாக இருந்தது. குழந்தைகளின் கீச்சிடும் சத்தமும் முதியவர்களின் வரட்டு இருமலும் கடுமையாக இருந்தது. சில நோயாளர்களின் சத்தம் மரணவேதனையைத் தந்தது. இப்படியாக அந்தக் கோயிலில் அவலக்குரல் எழுப்ப மூலஸ்தானத்திலிருந்த முருகனோ எந்தவித சலனமோ அசைவோ இன்றி அப்படியே கருங்கல்லாகவே இருந்தார். அந்த முருகனுக்கு எங்கே எமது கஸ்ரம் புரியப்போறது. அவருக்குக் கோயில்இசிலைஇ மூலஸ்தானம்இ மூன்றுவேளை ப10சை இப்படியே எல்லாமே இருக்க அவருக்கென்ன கவலை. இங்கே நாங்கள் தான் இவ்வளவு கஸ்ரப்படுகிறம் என்று நினைத்தவாறே கந்தர் நித்திரையானர்.

அம்மாவிற்கோ நித்திரையே பிடிக்கவில்லை. ஏதோ தான் நரக வேதனையில் தள்ளப்பட்டிருப்பதாக உணர்ந்தாள் தனது கடந்தகால வாழ்க்கை கற்பனைகள்இ மனக்கோட்டை என்பவற்றை நினைத்தும் தற்போது தனது குடும்ப நிலையை நினைத்தும் தனது கணவனின் கஸ்ரத்தை நினைத்தும் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தும் மிகவும் வேதனை அடைந்தவளாக நித்திரை வராமல் அங்குமிங்கும் புரண்டு கடைசியில் நி;த்திரையானாள். காலை விடிந்ததும் அன்றைய நாளுக்கான ஜீபனோபாயத்தை நினைத்து கந்தர் கூலித்தொழிலுக்குச் செல்ல அம்மா வீட்டை நோக்கிப் பிள்ளைகளுடன் நடந்தாள். இனி மாலை கணவன் வந்தால்தான் உணவு என்ற நிலை தொடர்ந்தது. பிள்ளைகளின் படிப்பும் பசிஇ பட்டினியால் இல்லாது போனதுடன் இப்படியாகவே நாட்கள் மாதங்கள்இ வருடங்கள் பல கடந்திருந்தது.

இப்போதும் அம்மாவின் குடும்பம் அதே இடத்தில் தான் இருந்தது. பிள்ளைகள் வளர்ந்திருந்தனர். அம்மாவின் கணவரும் அதே கூலித்தொழிலைத்தான் செய்து கொண்டிருந்தார். ஆனால் ஒரு மாறுதல் கந்தர் இப்போது எல்லைப் படையில் இருந்தார். மாதம் ஒரு முறை எல்லைக்கும் போய்வந்து மீதி நாட்களில் கூலித்தொழிலுக்குச் சென்று கிடைப்பதில் குடும்பத்தைப் பார்த்து வந்தார். அம்மாவின் மூத்தவன் சோதியும்இ இளையவன் காசியும் வளர்ந்து விட்டது மட்டுமல்லாமல் இருவரும் வேலைக்குப் போனதால் குடும்பத்தில் ஓரளவுக்கு வறுமை குறைந்தது. மூன்றுவேளை சாப்பிடக் கூடியவாறு இருந்தது.

கிடைத்த பணத்தை சிறுகச்சிறுகச் சேர்த்து அம்மா கிடுகு வேண்டி வீட்டையும் வேய்ந்திருந்தாள். ஆனால் வறுமை முற்றாக அகலவில்லை. நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க நாட்டுபிரச்சினையும் மிக மோசமானபோது எல்லைப்படைக்குச் சென்ற அப்பாவும் காயம் அடைந்து வந்த நாள் பாடசாலை சென்ற தம்பியும் தங்கையும் சிங்கள இராணுவத்தின் மிருகத்தனமான விமானக்குண்டு வீச்சில் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதைக் கேள்விப்பட்ட அம்மாவும்இ சோதியும்இ காசியும் கதறி அழுதவாறு வைத்தியசாலைக்குச் சென்று பார்த்தபோது அங்கு நடந்த சம்பவத்தைப் பார்த்து மேலும் கதறி அழுதனர். காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

அம்மாவின் மூன்றாவது மகனும் கடைக்குட்டி நிலாவும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். மூவரும் அவர்களின் கட்டிலின் அருகே சென்று கதறி அழுதனர். அப்போது கடுமையாக தாக்கப்பட்டிருந்த அப்பாவின் மகன் கமல் இறந்திருப்பதைப் பார்த்த அம்மா கதறிக் கதறி அழுதாள். கமலின் சகோதரர்களும் கதறி அழுதனர். இவர்கள் அழுவதைப் பார்த்து நிலாவும் அழத் தொடங்கியதால் அவளுக்கும் ஏதும் நடந்து விடுமென்று அம்மா அழுகையை நிறுத்தி நிலாவைக் கட்டித் தழுவி முத்தமிட்டு நடக்கப் போவதை கவனிக்க வெளியேறினார்.

வீட்டிற்கு வந்த போது செஞ்சிலுவைச் சங்கத்தினர் கமலின் உடலை வீட்டை கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சென்றிருந்தனர். இயக்கப்பெடியள் அப்பாவைக் கொண்டு வந்து இறக்கிவிட்டு சென்றதிலிருந்து கமலின் இறுதிச் சடங்கு நடைபெறும் வரை வீட்டில் ஒரே மரண ஓலமாகவே இருந்தது. அயலவரும் உறவினரும் அம்மாவை மாறிமாறி கட்டியணைத்து அழுது தீர்த்தனர். கமலின் இறுதிச் சடங்கு முடிந்துவிட்ட நிலையில் கந்தர் போராளிகளின் மருத்துவமனைக்குச் சென்று விட்டார் நிலாவும் வைத்தியசாலையிலேயே இருந்தாள்.

இந்த நேரத்தில் தான் சோதி தம்பியைக் கூப்பிட்டு
'தம்பி எங்களின்ரை குடும்பத்தில் அடுத்தடுத்து வேதனயும் சோதனையுமாகவே காலம் கடந்து விட்டது. இது எங்களுக்கு மட்டும் புதிதல்ல இந்த மண்ணில் எல்லத் தமிழர்களுக்கும் இந்த நிலமைதான் எனவே இனியும் நாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க ஏலாது. அப்படிக் பார்த்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக நாம் எல்லோரும் அழிய வேண்டிவரும். எனவே நான் இயக்கத்துக்குப்போகப் போறேன். நீ வீட்டையும் அம்மா அப்பா தங்கச்சியையும் நன்றாக பார்த்துக்கொள். இப்போது நான் போனதாக அம்மாவிடம் சொல்லாதே. வேறு இடத்திற்கு வேலைக்குப் போனதாகச் சொல்லி விடு கொஞ்சநாள் போனதும் சொல்லலாம்." என்று விடை பெற்றவனை

'நில் தம்பி" எனத் தடுத்தது ஒரு குரல்

அங்கே அம்மா நின்று கொண்டிருந்தாள். 'தம்பி நீ கதைத்ததை எல்லாம் நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தன். ஏன் என்னிடம் சொல்லக்கூடாது நீ சந்தோசமாகப் போய்வா. எங்களின்ர சனம் எல்லாரும் ஊமையாய் இருந்ததினால் இந்தளவு கேவலமாக இண்டைக்கு சிங்களவனுக்கு பயந்து வாழுறம். இனியும் அந்த நிலைமைஇ அதுவும் எங்களின்ர குடும்பத்திற்கு வந்த நிலைமை எமது நாட்டில எந்தக் குடும்பத்துக்கும் வரகூடாது. எனவே நீ சந்தோசமாக போய்வா.... " என அம்மாவே வழி அனுப்பி வைத்தாள்.

நாட்கள் கடந்த வேளை நிலாவும்இ அப்பாவும் காயங்கள் சுகமாகி வீடு வந்து சேர்ந்தனர். இப்போது சோதியும் போராடச் சென்று பல களங்களில் நன்றாகச் சண்டை செய்து திரும்பியதை அம்மா அறிந்திருந்தாள். இவற்றையெல்லாம் விட அம்மாவின் ஊரும் மீட்கப்பட்டிருந்தது. அந்தச் சண்டைக்கு தனது மகனும் போயிருந்ததை நினைத்து அம்மா சந்தோஷப்பட்டிருந்தாள்.

'அப்பாடா ஊரையும் பொடியள் எவ்வளவோ பாடுபட்டு பிடிச்சி;ட்டாங்கள் இனி எப்பதான் ஊருக்குப் போவதோ...."

அம்மா தவித்துக் கொண்டிருந்தாள். அப்போது சமாதானமும் வந்திருந்தது. அம்மாவிற்கு மேலும் சந்தோசமாக இருந்தது. எப்படியெண்டாலும் 10இ15 வருடமாக தொலைந்து விட்ட சந்தோசத்தை சொந்த ஊருக்குச் சென்று தனது வீட்டின் முன் உள்ள வேப்பமரத்தடியில் பாய்போட்டு படுத்தால் தீர்ந்துவிடுமென அம்மா நினைத்துக் கொண்டே நாட்களை ஓட்டினாள்.

விடுமுறையில் வந்த மகனிடம் 'எப்படா தம்பி வீட்டுக்குப் போகலாம்" எனக்கேட்டாள். 'போகலாம் விரைவில்" என தம்பி சொன்னதில் ஏதோ மாயம் இருக்குது என அம்மா உணர்ந்து கேட்காமலேயே விட்டு வி;ட்டாள். அன்றும் வழமைபோல் முற்றத்தில் அமர்ந்த தன் கணவனிடம் அம்மா கேட்டா.

'ஏனப்பா சமாதானமும் வந்திட்டுது ஏன் இன்மேல் எண்டாலும் ஊருக்குப் போகலாம் தானே.."

பதிலுக்கு கந்தர் 'போகலாம் தானப்பா முகமாலையில அவன் இருக்கேக்க என்னெண்டு நாங்கள் புதுக்காட்டில இருக்க முடியும். இங்கிருந்து அங்க போய் வீடு வாசலை திருத்துவதெண்டால் காணியில ஒண்டும் இல்லை. வீடெல்லாம் தரைமட்டமா இருக்குது. சிங்களவன் கண்ணி வெடிகளையும் விதைச்சிட்டுப் போயிருக்கான். எப்படியப்பா போறது. சரி அப்படியே போனாலும் திடீரெண்டு மீண்டும் ஒரு முறை பிரச்சினை எண்டால் எங்களால என்ன செய்ய முடியும். அதை விட இப்ப போகாம இங்கேயே இருந்திட்டு நல்ல நிலைமை வந்தாப் போவம். அதுவரைக்கும் எங்கட நிலைமை இப்படித்தானப்பா ஒவ்வொருநாளும் சிங்களவன் எங்களுக்கு அள்ளித்ரப்போறதில்லை. சமாதானம் எண்டு சொல்லி வந்து இவ்வளவு நாளாகியும் இதுவரை ஒண்டும் நடக்கேல்லை. இப்பிடி இருக்கே என்னெண்டு போறது."

'எதுவெண்டாலும் பெடியள் அடிச்சுப் பிடிச்சுச் தந்தால்த்தான் நாங்கள் எல்லாரும் சுதந்திரமாகஇ சுவீட்சமாக எங்கட நிலத்தில வாழ முடியும். அது வரை இந்த அகதி வாழ்வை ஆராலும் தடுக்க முடியாது. அதைத்தடுக்கிறது என்றால் நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்து போராடி மண்ணை மீட்க வேண்டும்".

பெரிய விரிவுரையை அம்மாவிற்கு வழங்கினார் கந்தர்.

அம்மாவும் 'அதெல்லாம் உண்மை தானப்பா என்னதான் சமாதானம் வந்தாலும் நிரந்தர சமாதானம் வராமல் விட்டால் எங்கள் எல்லோரின் வாழ்வும் அகதி வாழ்வுதான்" என்று பெருமூச்சு விட்டாள். 'நிச்சயமாய் எங்கட பிள்ளைகள் இருக்கும் மட்டும் எங்களுக்கு எந்தவித கவலையும் இல்லை" என்று சொல்லிவிட்டு எழுந்தார் சுந்தர்.

நன்றி மிரேஸ் ஈழநாதம்.


சுட்டது சூரியன்.com நன்றி
<<<<<..... .....>>>>>
Reply
#2
மிக இயல்பா எளிமையா நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை எதிர் கொண்ட
பிரச்சினைகளை சோகம் கலந்த நிஜப்பிரதிபலிப்புடன் சொல்லியிருக்கிறார் கதாசிரியர்.

இணைப்புக்கு நன்றி சுட்டிகேர்ள்!
<b> .. .. !!</b>
Reply
#3
ஒரு ஏழை வீட்டில் நடக்கும் சம்பவங்களை எழுதியிருக்கிறார் காதாசிரியார். சிலவேளைகளில் கறி நல்லாய் இல்லையே என்று அடம்பிடித்து சாப்பிடமால் இருக்கும் பல புலத்து குழந்தைகளுடன் இந்த குழந்தைகளுடன் சேர்த்து பார்க்கும் போது கவலையாக இருக்கின்றது.
நன்றி இங்கு இனைத்தமைக்கு

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)