Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
பரராஜசிங்கம் விடயத்தில் எப்படி நடந்துகொள்ளப் போகிறார்கள்?
#1
தமிழ்த் தேசிய எழுச்சியின்
குரல்வளையை நசிக்கும் முயற்சி

[b]சமாதானத் தூதுவன் அமைதி நாயகன் இயேசு பிரான் பிறந்த தினம் அவதார நேரம் மட்டக்களப்பில் பக்தி பூர்வ மாக அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் கொடூர பாத கம் அரங்கேறியிருக்கின்றது. அதுவும் புனிதமும், தெய்வ அமை தியும், பக்தியும் கமழும் தேவாலயத்துக்குள் வைத்து மக்கள் பிரதிநிதி ஒருவர் கிறிஸ்மஸ் வேளையில் படுகொலை செய் யப்பட்டிருக்கின்றார்.

[b]தமிழர்களின் மற்றொரு ஜனநாயகக் குரல் வேட்டுகள் மூலம் அடக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயகக் குரலை அல்ல, ஆயுதக் குரலையே செவிமடுப் பதற்குத்தான் தயாராக இருக்கிறான் என்பதை எதிரி மீண்டும் ஒரு தடவை பலமாக எடுத்தியம்பியிருக்கின்றான்.
அஹிம்சை வழியிலான தமிழர்களின் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட மூத்த தலைவர்களுள் எஞ்சி யிருந்த ஓரிருவரில் ஜோசப் பரராஜசிங்கம் முக்கியமானவர்.
ஒரு பத்திரிகையாளராகத் தனது பொது வாழ்வை ஆரம் பித்த ஜோசப் பரராஜசிங்கம், தந்தை செல்வாவின் கொள்கை களால் கவரப்பட்டு, அவரது பாசறையில் இணைந்து அரசிய லில் வளர்ந்தவர். கொண்ட கொள்கையில் தளராத பற்றுறுதி யுடனும் அர்ப்பணிப்புடனும் விளங்கிய ஜோசப் பரராஜசிங் கத்தின் மனவுறுதியைக் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக் களும் சர்வதேசத்தவரும் அடையாளம் கண்டனர்.
கருணா என்ற தனிமனிதப் பிறழ்வு காரணமாக இலங் கைத் தீவில் தமிழ்த் தேசியத்தின் எதிர்காலத்துக்கு பேரா பத்து ஏற்பட்டபோது கிழக்கில் தனித்து நின்று அச்சுறுத் தல்களுக்கு முகம் கொடுத்த அரசியல் போராளி ஜோசப் பரராஜசிங்கம். தமிழர் தாயகத்தைக் கூறுபோடும், இன விரோதிகளின் திட்டத்துக்கு வெறிக் கூச்சலுக்கு கடைசி வரை இடங்கொடாது, தமது உறுதியில் சிறிதுகூட சலனம் காட்டாது, மிகத் தெளிவாகவும் திடமாகவும் செயற்பட்டு, தனது கொள்கைப்பற்றின் ஆழத்தை அப்போது சகலரது மன திலும் பதித்தவர் அவர்.

[b]பெரும் உயிராபத்துகளுக்கு மத்தியிலும், தந்தை செல்வா முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தை, தேசியத் தலை வர் பிரபாகரனின் வழி தடத்தில் வெற்றிப்பாதையில் இட்டுச் செல்வதற்காக தனது உயிர் பிரியும்வரை ஓயாமல் பணி புரிந் தவர் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.
தமிழர் தாயகத்தில் மட்டுமல்லாமல், இலங்கைத் தீவில் மட்டுமல்லாமல், சர்வதேச ரீதியிலும் தமிழர் தம் போராட்டத்தின் நியாயத்தை முரசறைவதில் நிகரின்றி ஓய்வு, ஒழிச்சலின்றி பணியாற்றிய மூத்த தமிழ்த் தலைவர் அவர்.
மனித உரிமைகளைப் பேணுவதிலும், அதற்காகக் குரல் எழுப்புவதிலும் தேசிய, சர்வதேச மட்டத்தில் அரும்பணியாற்றியவர். தமிழர் தாயகத்தில் தனியான மனித உரிமைகள் செயலகம் ஒன்றை உருவாக்குவதில் அவரின் பங்களிப்பு கணிசமாக அமைந்தது.
கிறிஸ்மஸ் வேளையில் பிரபலமான தேவாலயத்துக் குள் ஆராதனையில் ஈடுபட்டிருந்த ஒருவர் ஆயுததாரிக ளால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார். அதுவும் இலங்கை அரசுப்படைகளின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள மட்டக் களப்பு நகரத்தின் மத்தியில், உயர்பாதுகாப்பு வலயத்துக்குள், ஆயர் ஒருவர் கிறிஸ்மஸ் வழிபாடுகளை நடத்திக் கொண்டி ருக்கையில், வலு சாவகாசமாக ஆயுததாரிகள் வந்து இந்தப் படுகொலையை நிகழ்த்தி விட்டுச் சென்றிருக்கின்றார்கள்.
தமிழர்களின் ஜனநாயகக் குரலுக்கு சாவு மணி அடிக்கும் இத்தகைய கொலைகளின் பின்னணியில் இருக்கும் அரூபக்கரங்கள் எவை என்பது உலுகுக்கு நன்கு தெரியும்.
விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் அரசியல், வாழ்வி யல் உரி மைகளுக்காக நடத்தும் சுதந்திரப் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் விதத்தில் தாயகத்தில் வெளிப்படுகின்ற ஜனநாயக வழி எழுச்சிகளைத் தனது ஆயுத வலுக்கொண்டு அடக்கி, ஒடுக்கும் தென்னிலங்கைக் கைங்கரியம் இப்போது முழு வீச்சாக ஆரம்பிக்கப்பட்டிருப்பதை கடந்த சில நாள்க ளாக இப்பத்தியில் சுட்டிக் காட்டி வந்தோம்.
கடந்த சில நாள்களாக வடக்கில் அரங்கேறிய வெகு ஜன எழுச்சியை அடக்கும் பேரினவாத அட்டகாசம், இப்போது கிழக்குக்கும் விஸ்தரிக்கப்பட்டிருப்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.
போர் நிறுத்த ஒப்பந்த விதிகளுக்கு மாறாக ஒட்டுப்படைகளை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியத்துக்கு எதிரான நாசகார வேலைகளைப் புரிந்து வரும் தென்னிலங்கைப் பேரின வாதம், இந்தப் படுகொலைக்கான பொறுப்பையும் \"இனந் தெரியாத ஆயுதக் குழு'வின் கணக்கில் சுமத்தித் தான் தப்பிக் கொள்ள எத்தனிக்கும்.
வடக்கு கிழக்கில் தமிழர் தாயகத்தில் ஜனநாயக வழி யில் தமது கருத்தை வெளிப்படுத்த விடாது தமிழ் மக்களின் வெகுஜன எழுச்சிக்கு எதிராக அடக்குவாரத்தை ஒடுக்கு முறையை தென்னிலங்கை அரசு கட்டவிழ்த்து விட்டிருக் கையில், அதைப் பார்க்காமல் பாராமுகமாக கண்டும் காணா மலும் நடந்து கொள்ளும் சர்வதேச சமூகம், இந்தக் கொடூரக் கொலையை அதுவும் தேவாலயத்துக்குள் வழிபாடு செய்து கொண்டிருந்த ஜனநாயக அரசியல் தலைவரை அங்கு வைத்தே சுட்டுப் படுகொலை செய்த கொடூரத்தை எப் படிக் கையாளப் போகின்றது?

[b]மக்களைத் தேர்தலில் சந்திக்காமலேயே பின் கதவால் அரசியலுக்குள் நுழைந்து, மக்களைச் சந்திக்காமலே

[b]மக்கள் தலைவனாக உயர்ந்து, தனது தேசியத்துக்காக நேர்மையுடன் பணியாற்றி, அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அஞ்சாமல் சேவைபுரிந்து, தேவாலயத்துக்குள் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டவரான ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி. விடயத்தில் எப்படி நடந்து கொள்ளப் போகின்றது?

[b]??????????????????????????????

நன்றி: உதயன்.கொம்
[b]

Reply
#2
நாம தான் அவர்களுக்கு சங்கு ஊதி நித்திரையால(?) எழுப்பணும் முதல.......
[size=18] ..

Reply
#3
அட சர்வதேசத்தை விடுங்கோ அப்பு இங்க களத்திலயே தமிழ் ஆக்கள் சிலதுகள் இருக்குது சங்கூதி எழுப்புங்கோ. அவ ஆரோ நடிகை செத்துப் போனாவாம் வந்து துயர்பகிர்ந்தவை. உந்தக்கிழடு செத்ததுக்கு கவலையே படேல்ல. அப்ப எப்பிடி சர்வதேசம் கவலைப்படும்.

வாயில வரூது எழுதுவன் வேண்டாம் பிள்ளையள் பயந்திடும்.

Reply
#4
என்ன ஆறுமுகத்தார் விளையாடுறீங்களா...???? உது அவர்களின்ர உரிமை எண்டுவினம்... உங்களுக்கு ஏன் தேவையில்லாத விடயம் எல்லாம்.. :wink:

Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)