Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுனாமி ஒராண்டு நினைவு
#1
<img src='http://home.san.rr.com/clkoberg/images/tsunami/a07w.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'><b>அச்சே மாகாணத்தில் சுனாமி ஒராண்டு நினைவு</b>
<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/asia_pac_enl_1135594847/img/laun.jpg' border='0' alt='user posted image'>
சுனாமியின் ஓராண்டு....

ஆசியாவெங்கிலும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களை சுனாமிப் பேரலைகள் காவு கொண்டு சரியாக ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தின் மக்கள் அந்த சுனாமியில் பலியான தமது உற்றார் உறவினர்களை நினைவு கூர்ந்தனர்.

இந்த சுனாமியில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட அச்சே மாகாணத்தைப் பொறுத்தவரை, சுனாமியில் மொத்தமாக பலியானவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களே.

அந்த மாகாணத்தின் தலைநகரில் நடந்த நிகழ்வுகளில், சரியாக அந்த அனர்த்தம் இடம்பெற்ற நேரத்துக்கு ஒரு பெரிய சங்கு ஒன்று ஒலிக்கப்பட்டது. இது புதிய சுனாமி அபாய அறிவிப்பு சங்கின் ஒரு பகுதியாகும்.

அங்கு உரையாற்றிய இந்தோனேசிய அதிபர் சுசிலோ பாம்பாங் உத்தோயோனோ அவர்கள், இந்த அழிவுகளில் இருந்து மீண்டு வருவதற்காக, மீள்கட்டமைப்புக்காக முயற்சித்தவர்களுக்கு நன்றி கூறினார்.

அச்சே கிளர்ச்சிக்காரர்களுக்கும், இந்தோனேசிய அரசுக்கும் இடையிலான சமரச உடன்படிக்கை குறித்துப் பேசிய அவர், அழிவில் இருந்து எப்படி நம்பிக்கை உதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று கூறினார்.

சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் முகமாக வேறுபல தெற்காசிய நாடுகளிலும் நினைவஞ்சலிக் கூட்டங்கள் நடந்துள்ளன. தாய்லாந்தில் பிரதமர் தக்ஷின் ஷினாவத்ர தலைமையில் கஓலக் பகுதியில் நடந்த நிகழ்வில் நினைவுக் கல் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

<b>வடக்கு இலங்கையில் சுனாமி நினைவு நாள்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/12/20051226164913jaffnatsunamiday.jpg' border='0' alt='user posted image'>
சுனாமி பேரழிவினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வைபவங்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய வடபகுதி மாவட்டங்களில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும், விடுதலைப் புலிகளின் பிரதேசங்சளிலும் பரவலாக நடைபெற்றன.

சுனாமியினால் இறந்தவர்களின் நினைவாக வவுனியா பூந்தோட்டத்தில் சுனாமி நினைவுத் தூபியொன்று திறந்து வைக்கப்பட்டு இறந்தவர்களுக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்து, கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

முல்லைத்தீவு நகரில் கடல்கோளினால் அழிவுக்குள்ளாகிய புனித ராயப்பர் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவாலயத்தை யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் திறந்துவைத்தார்.

அவரது தலைமையில் கூட்டுத் திருப்பலிப் பூசையும் நடைபெற்றது. இந்து, முஸ்லிம் மதக்கிரியைகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டன. சுனாமி பேரலைகளின் ஊழிக்கூத்தில் விளைந்த அழிவுகள், இழப்புக்கள் பற்றிய நினைவு மலர்களும் இங்கு வெளியிடப்பட்டன.

முல்லைத்தீவு நகரில் கடை வீதிகள் எங்கும் கறுப்பு வெள்ளைக் கொடிகள் நினைவு பதாதைகள் கட்டப்பட்டிருந்தன.

கோவில்குடியிருப்பு, வண்ணாங்குளம், மணற்குடியிருப்பு ஆகிய இடங்களில் விசேடமாக அமைக்கப்பட்ட கொட்டில் மண்டபங்களிலும், கடற்கரையிலும் கூடிய பொதுமக்கள், கடல்கோளின்போது மறைந்த தமது உறவினர்களின் உருவப்படங்களை வைத்து கண்ணீர் மல்க கதறியழுது அஞ்சலி செலுத்தினர்.

அரச அதிகாரிகள், மதத்தலைவர்கள், பிரமுகர்கள், விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் என பலதரப்பினரும் உணர்வுபூர்வமாக இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென அமைக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட வீடுகள் உரியவர்களிடம் அதிகாரிகளினால் இன்று கையளிக்கப்பட்டன என்பதும் குறிப்பித்தக்கது.

இதனிடையில், பொதுமக்களினதும் ஊழியர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும், யாழ் வடக்குக கிழக்கு பிரதேசங்களில் இடம்பெறும் படுகொலைகள், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், கைதுகள் என்பவற்றைக் கண்டித்தும், அவற்றை உடனடியாக நிறுத்தக் கோரியும் யாழ்ப்பாணத்தில் அரச ஊழியர்கள் இன்று தமது பணிகளைப் புறக்கணித்திருந்தனர்.

இதனால் யாழ் மாவட்டத்தின் அரச நிர்வக இயந்திரம் பெருமளவில் ஸதம்பிதமடைந்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தியாவசிய சேவைகளாகிய வைத்தியம், உணவு விநியோகம், போக்குவரத்து தவிர்ந்த ஏனைய பணிகள் யாவும் முடங்கியிருந்தன. இந்த பணிபுறக்கணிப்பிற்கான அழைப்பை தமிழ்த்தேசிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

<b>திருகோணமலையில் சுனாமி நினைவு தினம்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/12/20051226160943tricotsunamiday.jpg' border='0' alt='user posted image'>
திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உயிரிழந்தவர்களுக்கான ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் ஏனையோருக்கான
நல்வாழ்வினனைக் கோரும் பிரார்த்தனைகள் வழிபாடுகள் ஆராதனைகள்
மற்றும் துவா தொழுகைகளும் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை ஈச்சிலம்பற்று பிரதேசத்தின் கல்லடி கிண்ணியாவின் நடுஊற்று
மற்றம் பெரியகுளம் பகுதிகளில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளின் ஒரு தொகுதி இன்று சம்பந்தப்பட்ட குடும்பங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

அரச நிவாரண உதவிகள் மற்றும் உணவு முத்திரை என்பன பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக திருகோணமலை நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதேச செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் கூறினார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிரந்தர வீடுகளை அமைக்கும் பணியில் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் ஈடபட்டு வருவதாகவும், இந்த நிறுவனங்கள் தமது பணியினை இன்னும் துரிதப்படுத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் பயனடைய முடியும எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

<b>மட்டக்களப்பில் நினைவஞ்சலி</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/12/20051226171242battitsunamiday203.jpg' border='0' alt='user posted image'>
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமியின் போது உயிரிழந்த 2,900 பேர் நினைவாக மாவட்டத்தின் கரையோர பிதேசங்களில் இன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒன்று கூடினார்கள்.

சுனாமியின்போது உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகொள்வதற்காக, ஒரு வருடத்தின் பின்பு தாங்கள் பிறந்து வளர்ந்த கடலோரக் கிராமங்களுக்கு அவர்கள் இன்று திரும்பியிருந்தார்கள்.

பரவலாக கடலோரக் கிராமங்களில் உயிரிழந்தவர்களின் நினைவாக பரவலாக நினைவுத்தூபிகள் அமைக்கப்பட்டு இன்று அஞ்சலி தீபங்கள் ஏற்றப்பட்டன.

<b>சுனாமியால் பாதிக்கப்பட்ட மட்டு அம்பாறை முஸ்லிம்களின் நிலை </b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/04/20050425165826olli203a.gif' border='0' alt='user posted image'>
சுனாமியில் பெரும் சேதங்களை எதிர்கொண்ட மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் முஸ்லிம் சமூகத்தினர் பேரிழப்புகளைச் சந்தித்திருந்தனர்.

சம்பவம் நடந்து ஓராண்டாகியும் முஸ்லிம் மக்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை அமைத்துத் தருவது தொடர்பில் தெளிவற்ற நிலையும் சிக்கல்களும் காணப்படுவதாக முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் அங்கலாய்க்கின்றனர்.

கல்முனையிலுள்ள இஸ்லாமாபாத் என்ற இடத்தில் தாற்காலிக குடியிருப்புகளில் வாழ்ந்தவருபவர்கள் பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்கொண்டுவருவதாக முறையிடுகின்றனர்.

சர்வதேச நாடுகளின் நிதி உதவிகளை தந்திருக்கும் போதிலும் தொண்டுநிறுவனங்கள் களத்தில் உதவிப் பணிகளை ஆற்றிவருகின்றபோதிலும் உரிய நிலங்கள் இல்லாது இருப்பதே இந்த மாவட்டத்தில் புதிய வீடுகளை அமைப்பதிலிருக்கும் பெரிய பிரச்சினை என்று தெரிவிக்கப்படுகிறது.

கடலைவிட்டு 200 மீட்டர் தள்ளியே வாழ்விடங்களை அமைக்கவேண்டுமென்ற விதிமுறை இம்மாவட்டங்களில் பல மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுள்ள நிலையிலும் இதுவரை நிரந்தர வீடுகள் எதுவும் கட்டிமுடிக்கப்படாத சூழல் காணப்படுகிறது.

<b>இலங்கையின் சுனாமி உயிரிழப்புகளை நினைவுகூர்ந்து காலி மாவட்டம் பெராலியவில் அரசு அஞ்சலி </b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41158000/jpg/_41158834_memorialpa203.jpg' border='0' alt='user posted image'>
26 டிசம்பர் 2004 அன்று, சரியாக ஓராண்டுக்குமுன் ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் இந்தோனேஷியாவிற்குப் பிறகு மிக அதிக உயிரிழப்புகளை சந்திந்திருந்த நாடு இலங்கைதான்.

இலங்கையில் சுமார் நாற்பதாயிரம் பேர் உயிரிழந்திருந்தனர். இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் மூன்றில் இரண்டு பங்கு சுமார் 13 மாவட்டங்களில் அனைத்து இனங்களைச் சேர்ந்த மக்களும் இந்த இயற்கை சீற்றத்தால் பெரும் பாதிப்புகளை சந்தித்திருந்தனர்.

வரலாறு காணாத அழிவுகளை இலங்கையில் ஏற்படுத்திய சுனாமியின் ஓராண்டு நிறைவை ஒட்டி இலங்கை அரசின் முக்கிய நினைவு நிகழ்வு காலி மாவட்டத்தில் உள்ள பெராலிய என்னும் இடத்தில் நடைபெற்றுள்ளது.

புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடந்த நினைவு நிகழ்வில், வெளிநாட்டு ராஜீய அதிகாரிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்ததுடன், மௌன அஞ்சலியும் அனுஷ்டிக்கப்பட்டது.

வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ராஜபக்ஷ இலங்கைக்கு உதவிகளை வாரி வழங்கியிருந்த சர்வதேச நாடுகளுக்கு நன்றியினை தெரிவித்தார்.

நாடுதழுவிய அளவில் சுனாமி மீள்கட்டுமானப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தமைக்கு அமைய, ஜெயலங்கா என்ற அமைப்பை ஜனாதிபதி உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துவைத்துள்ளார்.

<b>நாகையில் சுனாமி நினைவு தினம்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/12/20051226003651nagapattinam_rally203.jpg' border='0' alt='user posted image'>
சர்வமத நினைவு ஊர்வலமும் நாகையில் நடந்துள்ளது.

சர்வமத நினைவு ஊர்வலமும் நாகையில் நடந்துள்ளது.
நாகை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கபட்டவர்களை நினைவுகூறும் நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வளாகத்தில் நடந்தேறியுள்ளன.

உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இனிவரும் காலங்களில் இயறகைப் பேரிடர்கள் வரும்போது சமூகத்தைக் காப்பது தொடர்பில் அனைவரும் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

சுனாமிக்கு ஆறாயிரம் பேரை பலிகொடுத்திருந்த இம்மாவட்டத்தில் மெல்ல மெல்ல மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

கடலில் மீன் வளம் குறைந்திருப்பதாகவும் அதன் காரணமாக தமது வாழ்க்கைத் தரம் வீழ்ந்திருப்பதாகவும் மீனவர்கள் குறைபட்டுக்கொள்கின்றனர்.

ஆழிப்பேரலை காரணமாக கடல்மீது தமக்கு ஏற்பட்ட பீதி, உளப்பாதிப்புகள், தற்காலிக கூடாரங்களில் தாங்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் என்று பல்வேறுவகையில் மீனவ சமூகம் பாதிப்புகளை இன்றளவும் சந்தித்துவருகிறது.

நாகை நகரை ஒட்டிய சாமந்தான் பேட்டை போன்ற இடங்களில் நிரந்தரக் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு அங்கே மக்கள் குடியேறிவிட்டனர் என்பதையும் அவதானிக்கமுடிகிறது.

அரசின் நிவாரண உதவிகளால் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறுபவர்களும் நாகையில் இருக்கவே செய்கிறார்கள்.</span>

- பீபீசி தமிழ்
Reply
#2
எல்லா இடங்களிலும் நடைபெற்ற நினைவு கூடலை இங்கு போட்டமைக்கு நன்றி அஐிவன்

Reply
#3
<b>சுனாமியில் இறந்தவர்களுக்காக குமரி மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட நினைவுச சின்னம்</b>

<img src='http://epaper.tamilmurasu.in/2005/dec/26/images/8_06.jpg' border='0' alt='user posted image'>

tamil murasu
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: