Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழினத்தை தாக்குவதாக கொண்டு புூமராங்கையே ஏவுகிறார்கள்
#1
தமிழினத்தை கூறுபோட்டு பலத்தை சிதைக்க, பலவீனப்படுத்த எடுக்கும் முயற்சிகள் எப்போதும் வெற்றியளிக்காது. தமிழினத்தை தாக்குவதாக நினைத்துக்கொண்டு புூமராங்கையே ஏவுகிறார்கள். தமிழினத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்@ தமிழினத்தை கொந்தளிக்கச்செய்து அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு முகம் கொடுத்த வண்ணம் உள்ளீர்கள் என்று அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் சிங்கள இனவாதிகளுக்கு அறிவுறுத்தும் - எச்சரிக்கும்; வகையில் தெரிவித்தார்.
இன்று கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி உரையினை நிகழ்த்தும்; போது அவர் இதனைத் தெரிவித்தார்.

முற்பகல் 9.30 மணியளவில் கிளிநொச்சி வலயக் கல்வி பணிமனை முன்பிருந்து மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் அவர்களின் புகழுடல் போராளிகளின் அணிவகுப்பு மற்றும் அணியிசை என்பவற்றுடன் ஊர்வலமாக கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது.

அங்கு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், வடமுனை கட்டளைத் தளபதி கேணல் தீபன், மலையக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், மலைய மக்கள் முன்னனி தலைவர் சந்திரசேகரன், மேலக மக்கள் முன்னனித் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் புகழுடலுக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர்.

வணக்க நிகழ்வு வடக்கு கிழக்கு மனித உரிமைச் செயலகப் பணிப்பாளர் எம்.எச். கருணாரெட்ணம் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்றது.

வணக்கவுரைகளை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளின் ஒருவரான கேணல் ரமேஸ், மேலக மக்கள் முன்னனித் தலைவர் மனோ கணேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வேலணை வேணியன், பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதரம்பரநாதன், மலையக தொழிலாளர் காங்கிரசைச் சேர்ந்த முத்து சிவலிங்கம், மலையக மக்கள் முன்னணித் தலைவர் பெ.சந்திரகேரன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நிகழ்த்தினர்.

அங்கு அஞ்சலியுரையாற்றிய அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

தமிழ்த் தேசியத்திற்காக, தமிழினத்தின் விடிவிற்காக தமிழினத்தின் கௌரவத்திற்காக ஒயாத புயலாக சுழன்றடித்த மாமனிதர் யோசப் ஜயா அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம்.

சிங்கள இனவாதிகளும் சிங்கள இனவாதிகளின் அடிவருடிகளும் தமிழ்த் தேசியத்தை, அதன் வலிமையை சிதைப்பதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் இன்று கங்கணம் கட்டி செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். அதன் வெளிப்பாடுதான் எங்கள் பாசத்துக்குரிய தலைவர்களை, செயற்பாட்டாளர்களை, புத்திஜீவிகளை, மக்களை அழிக்கின்றனர். மிக கோழைத்தனமான முறையில் ஜோசப் ஐயா படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உலகம் போற்றுகின்ற நன்நாளிலே தனது இனத்தின் அமைதிக்காகவும் கௌரவத்துக்காகவும் ஆராதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் போது தேவாலயத்துக்குள் வைத்து மிக கோழைத்தனமாக சுட்டுப்படுகொலை செய்துள்ளார்கள்.

தற்போது கொந்தளித்த நிலையில் இருக்கின்ற எமது மக்களை மேலும் கொந்தளிக்க வைக்கின்ற நிகழ்வாகவே ஜோசப் ஐயா அவர்களின் படுகொலை அமைந்துள்ளது.

கொந்தளித்துக்கொண்டு இருக்கின்ற சமுத்திரம் போன்ற மக்களை மேலும் கொந்தளிக்க வைக்கும் நிலையினை உருவாக்க சிங்கள இனவாதிகள் தமது கைக்கூலிகள் மூலமாக படுகொலைகளைச் செய்து வருகின்றனர்.

சிங்கள இனவாதிகள் படுகொலைகளைச் செய்துவிட்டு இதனை மூடிமறைக்கும் வகையில் அனுதாப அறிக்கைகளை விடுத்த வண்ணம் உள்ளார்கள்.

தமிழ்த் தேசியம் விழுதுவிட்டு விருட்சமாக வளர்ந்து நிற்கின்றது. தமிழ் தேசியத்தை அழிப்பதற்கு, சிதைப்பதற்கு எடுக்கின்ற முயற்சிகள் திரும்பி அவர்களையே சென்றடையும். ஒரு போதும் தமிழ்த் தேசியத்தை எவராலும் அழிக்கமுடியாது. இன்று ஒன்றுபட்டு தமிழினம் பெரும் பலத்தோடு நிற்கின்றது.

ஜோசப் ஐயாவின் இறுதி நிகழ்வு சிறிலங்கா தேசத்துக்கும் உலகத்திற்கும் தெளிவான ஒன்றை எடுத்துகாட்டுமென்று நினைக்கிறேன்.

இலங்கைத்தீவிலே தமிழீழ தேசத்தின் மக்கள் பிரதிநிதிகளும், சிறிலங்காவில் இருக்கின்ற தமிழ் மக்களுடைய அனைத்து தலைவர்களும் வருகை தந்து தமது சோகத்தை இந்நிகழ்விலேயே வெளிப்படுத்திய வண்ணம் உள்ளார்கள்.

இந்நிகழ்வே ஒன்றைப் புரியவைக்க வேண்டும். தமிழினத்தை கூறுபோட்டு பலத்தை சிதைக்க, பலவீனப்படுத்த எடுக்கும் முயற்சிகள் எப்போதும் வெற்றியளிக்காது.

தமிழினத்தை தாக்குவதாக நினைத்துக்கொண்டு புூமராங்கையே ஏவுகிறார்கள்.

தமிழினத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் தமிழினத்தை கொந்தளிக்கச்செய்து அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு முகம் கொடுத்த வண்ணம் உள்ளீர்கள்.

இராணுவம் பெரும் அளவில் கொல்லப்படுவதாக இருந்தால் அது விடுதலைப் புலிகளால் மட்டுந்தான் முடியுமென குற்றம் சாட்டுகின்றீர்கள்.

உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டு அதற்கு உயர்ந்த மதிப்பைக் கொடுத்து தம்மைக் கட்டுப்படுத்திவைக்கின்ற சூழலில், மக்களின் ஜனநாயக வழிப்போராட்டங்களை இராணுவ வன்முறைகொண்டு அடக்கும் சூழலில், மக்கள் கொந்தளித்து மக்களே திருப்பி தாக்குகின்ற சூழலை உருவாக்கி இருக்கின்றீர்கள். அதனுடைய விளைவுகளை தமிழர் தாயகத்தில் அனுபவிக்கின்றீர்கள்.

காலம் காலமாக வாழ்ந்த புூர்வீக மண்ணில் எந்த நெருக்கடிகளும் இல்லாமல் வாழவேண்டும் என்றே எமது மக்கள் கேட்கின்றார்கள்.

அண்மையில் கூட எமது சகோதரி ஒருவர் கடத்தப்பட்டு இரவிரவாக சிங்கள காடையர்களால் குதறப்பட்டு கொலைசெய்யப்பட்ட நிகழ்வு தமிழ் மக்களை கொந்தளிக்கும் நிலைக்கு தள்ளிவிட்டது.

பல்கலைக்கழகம் ஜனநாயக வழியில் முன்னெடுத்த போராட்டம் இராணுவம் கொண்டு அடக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளரர்கள்.

இதனுடைய விளைவாகத்தான் தமிழர் தாயகம் எல்லாம் ஒரு கொந்தளிப்பான சூழல் உருவாகிவிட்டது

எனவே, சர்வதேச சமூகத்திடம் கேட்கிறோம்@ இலங்கை அரசாங்கத்தின் அடாவடித்தனத்தை முடிவுக்கு கொண்டுவர முழு அழுத்தத்தைம் பிரயோகியுங்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டும் செயலை சர்வதேச சமூகம் கண்டிக்கவேண்டும்.

தமிழ்மக்களை அமைதிப்படுத்த வேண்டுமாக இருந்தால் ஆக்கிரமிப்பு இராணுவம் மக்கள் மீது கட்டவிழ்த்து இருக்கின்ற வன்முறையை நிறுத்துவதே ஒரே வழி. இதற்கு சர்வதேச சமூகம் முழு அழுத்தத்தை அரசுக்கு கொடுக்கவேண்டும்.

ஜோசப் ஐயாவின் இழப்பு என்பது ஈடுசெய்யமுடியாத இழப்பாக உள்ளது. தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் யோசப் ஜயாவிற்கு மாமனிதர் கௌரவம் வழங்கியுள்ளார்.

ஜோசப் ஐயா தமிழத்தேசியத்தை சிதைக்கின்ற சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் துணிவுடன் தமிழ்த் தேசியத்திற்காக செயற்பட்டவர் எனவும் அவர் தெரிவித்தார்.

நன்றி: ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)