Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏக்கம் எனக்கு மட்டும் தானா?
#1
ஏக்கம்


இலண்டனுக்கு வந்து இருபத்தைந்து ஆண்டாச்சு
இருப்பிடம் வேலை பிள்ளைகள் இரண்டாச்சு
இன்னும் இரண்டு வீடு வாடகைக்குக் கொடுத்தாச்சு
மனைவிக்குச் சிறிய கார் எனக்குப்பெரிய "பென்ஸ் கார்"
பெரிய வீட்டோடு "பிரிட்டிஸ் பாஸ்போட்"
எல்லாமே வசதியாயிருக்கு எதுவித குறையுமில்லை
இப்படித்தான் எமைப்பார்ப்போர் எண்ணுவார் துன்பமில்லை
இருந்தும் என்மனதில் என்றுமே அமைதியில்லை

தமிழார்வம் எனக்குண்டு தமிழ்நூல்கள் பலவுமுண்டு
நினைத்தவுடன் கதைகவிதை எழுதிடவும் திறமையுண்டு
அன்பான மனைவியுண்டு அறுசுவைபோல் உணவுமுண்டு
ஆனாலும் பிள்ளைகட்கு தமிழுணவில் ஆர்வமில்லை
பிட்டென்றால் "பீசா" தோசையென்றால் "பற்சா"
மரக்கறி சோறுஎன்றால் மற்றவர்க்கு "மைக்டொனாட்"
இப்படியாய் இருபதாண்டு காலத்தைக் கழித்தாச்சு.

தமிழார்வம் கொண்டஎந்தன் தவமிருந்து பெற்றவாயில்
தவறிக்கூட ஏனும் தமிழைநான் கேட்டதில்லை
"அ" னாவும் தெரியாது அழகான தமிழிசையின்
தேனான பாடல்கள் தீண்டாது அவர்செவியை

பட்டுடுத்துப் பொன்நகைகள் பலவணிந்த மனைவியுடன்
பெருவிழா அழைப்பிற்சென்று பலர்பார்க்க முன்வரிசை
இருக்கையில் அமர்ந்து, இருவரும் எழுந்துசென்று
குத்துவிளக்கேற்றி, கூடவந்து அமர்ந்த டாக்டர்
பத்துக் கதைகள்கூற பல்தெரிய சிரித்தும்நெஞ்சு
பக் பக்கென்றே அடிக்கடி இடித்துநிற்கும்

வீதியுலா சென்றமகன் வேதனையை வளர்ப்பானோ?
பாதிஇரவு கழிந்தபின்னால் நாதிகெட்டு நுழைவானோ?
பாதி உடையணிந்து தோழருடன் சென்றமகள்
ஊதிப் புகைவிட்டு தோழருடன் உலள்வாளோ?
ஏழிசையைக் கேட்டுவிழி மேடையிலே மலர்ந்தபோதும்
பாழாய்ப் போனமனம் பெற்றவரையே நினைந்திருக்கும்

ஊரைவிட்டு தூர தேசம் வந்ததினால் பலஉழைப்பு
பேரைச் சொல்ல ஒருவரின்றி போனதினால் இது இழப்பு
நரைவிழுந்து போனபின் தான் ஞானக்கண் திறப்பு
யாருக்குச் சொல்லியழ இங்கு பலருக்கு இது நடப்பு

Reply
#2
செல்வமுத்து உங்கள் ஏக்கம் கவிதை புலத்திலுள்ள எல் பெற்றோருக்கும் உள்ள ஏக்கம் தான். உங்கள் கவிதை அருமை. ஏன் கவிதை பக்கம் இதை போடவில்லை???
<b> .. .. !!</b>
Reply
#3
¯í¸û ¸Å¢¨¾ «Õ¨Á,¯í¸û ¯½÷׸û Ò⸢ÈÐ
Å¡úòÐì¸û..................
; ;
-
,
Reply
#4
ஊரைவிட்டு து}ரதேசம் வந்ததினால் பலஉழைப்பு
பேரைச்சொல்ல ஒருவரின்றி போனதினால் இதுஇழப்பு
நரைவிழுந்து போனபின்தான் ஞானக்கண் திறப்பு
யாருக்குச் சொல்லியழ இங்குபலருக்கு இது நடப்பு

செல்வமுத்து கவிதையை ஏக்கத்துடன் படைத்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். புலத்தில் பகட்டு வாழ்க்கை என்பதை உங்கள் கவிதை மூலம் சொன்னது அருமை.

Reply
#5
அருமையான கவிதை.
பராட்டுக்கள் செல்வமுத்து ஐயா<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#6
புலத்தில் பல பெற்றோருக்கு உள்ள ஏக்கத்தை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
இது ஒரு பேப்பரில் வந்த கவிதையாச்சே..! நீங்களா அவர்..! நன்றி..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
kuruvikal Wrote:இது ஒரு பேப்பரில் வந்த கவிதையாச்சே..! நீங்களா அவர்..! நன்றி..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அடடா இதென்ன புதுக்கதை
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#9
என் கவிதையைப் படித்துப் பாராட்டுக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

குருவிகள்: இந்தக் கவிதை ஒரு Paper இல் வந்ததுதான் ஆனால் நீங்கள் கூறும் அந்த "ஒரு பேப்பரில்" அல்ல. நீங்கள் பல Paper கள் படிப்பதனால் சிறிது குழப்பம் என்று எண்ணுகிறேன்.

இரசிகை: கவிதைப்பகுதியில் எனது கவிதைகள் சில இருக்கின்றன. ஒரு பரீட்சார்த்தமாகத்தான் இங்கே இணைத்தேன்.

குறிப்பு:- உங்களைப் பரீட்சிக்க வந்துவிட்டேனோ என்று யாரும் என்னுடன் சண்டை பிடிக்கவேண்டாம்.

Reply
#10
வணக்கம் ஜயா...

பல பெற்றோரின் ஏக்கம் இது.. ஆனால் சில பிள்ளைகளுக்கு தான் புரிகிறது.... சிறு வயதில் வந்தவர்கள்... இங்கு பிறந்தவர்கள் தமிழில் தமிழ் சம்பந்தபட்டவற்றில் ஆர்வத்தை காட்ட மாட்டேன் என்கிறார்கள்.

கவிதைக்கு வாழ்த்துக்கள்.
Reply
#11
விஷ்ணு வணக்கம்
உண்மைதான். இந்த நிலைமை பல வருடங்களுக்கு முன்னர் வந்தவர்களுக்கு இருந்திருக்கின்றது. ஆனால் இப்போது அந்த நிலைமை மாறிக்கொண்டு வருகின்றது. இருப்பினும் எமது சுயநலன்களுக்காக புலம்பெயர்ந்து வந்து எமது சந்ததிகளைத் தொலைத்துவிட்டோமே என்கின்ற ஏக்கம் பலருக்கு இருக்கின்றது. இக்கவி பிறந்ததின் காரணமும் அதுதான்.

Reply
#12
தொலைப்போம் என்று அடம்பிடிப்பவர்களை என்ன செய்வது?!
என்னைப் பொறுத்தளவில்.. பிள்ளைகளுகஇகு தமிழில் சுயவிருப்பு வர வேண்டுமாயின்.. அவர்கள் தாயகச் சூழலில் தாயக மக்களுடன் பழக இயலுமானளவு சந்தர்ப்பங்கள் ஏற்படவேண்டும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#13
சோழியன் சொன்னதில் உண்மை இருக்கு நான் அவதானித மட்டில், எங்கே நாம் செறிவாக வாழ்கிறோமோ எங்கே நாம் ஒன்றுகூடல்களை அடிக்கடி வைக்கிறோமோ அங்கே வளரும் பிள்ளைகள் அவர் வயதை ஒத்தவருடன் கூடி விளயாடும் போது தன்னார்வமாக தமிழைப் பேசுகின்றனர்.

அதே நேரம் தனியாக வளரும் குழந்தைகளுக்கே தமிழ் கஸ்டமாக இருகின்றது.அவர்கள் யாருடன் விளயாடுகிறார்கள் பழகுகிறார்களோ அவர்களே கூடிய தாக்கத்தை செலுத்துபவர்களாக இருக்கிறார்கள்.
Reply
#14
Selvamuthu Wrote:என் கவிதையைப் படித்துப் பாராட்டுக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

குருவிகள்: இந்தக் கவிதை ஒரு Paper இல் வந்ததுதான் ஆனால் நீங்கள் கூறும் அந்த "ஒரு பேப்பரில்" அல்ல. நீங்கள் பல Paper கள் படிப்பதனால் சிறிது குழப்பம் என்று எண்ணுகிறேன்.

இரசிகை: கவிதைப்பகுதியில் எனது கவிதைகள் சில இருக்கின்றன. ஒரு பரீட்சார்த்தமாகத்தான் இங்கே இணைத்தேன்.

குறிப்பு:- உங்களைப் பரீட்சிக்க வந்துவிட்டேனோ என்று யாரும் என்னுடன் சண்டை பிடிக்கவேண்டாம்.

ம்ம்... லண்டனில் வெளிவரும் பல பேப்பர்களில் ஒரு பேப்பரில்.. அதுக்கு பெயர் ஒரு பேப்பரில்ல..வேற ஒன்று..அதில் வந்தது..! நீங்கள் சொல்வது சரிதான்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)