Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விஜயகாந்தின் அரசியல்
#1
<b>விஜயகாந்தின் அரசியல்</b>
திரைப்படங்களில் சாதிகளைச் சாதிச்சங்கங்களை எதிர்க்கும் கதாநாயகனாகத் தன்னைக் காட்டிவந்த விஜயகாந். இப்போது சாதி என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட வரமென்று முத்தாக உதிர்க்கின்றார். தனது சுயநல அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம் என நினைக்கும் இவர் மற்ற அரசியல்வாதிகளைக் கிண்டலடிப்பதுதான் நகைச்சுவை. தான் அரசியலுக்கு வந்தால் இலஞ்சத்தை ஒளிப்பேன் என்பவர் நாளை அரசியலுக்கு வந்தபின் அதற்கும் ஏதாவது சொல்லுவார். இப்படியான சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு மக்கள்தான் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
Reply
#2
Vasampu Wrote:<b>விஜயகாந்தின் அரசியல்</b>
திரைப்படங்களில் சாதிகளைச் சாதிச்சங்கங்களை எதிர்க்கும் கதாநாயகனாகத் தன்னைக் காட்டிவந்த விஜயகாந். இப்போது சாதி என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட வரமென்று முத்தாக உதிர்க்கின்றார். தனது சுயநல அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம் என நினைக்கும் இவர் மற்ற அரசியல்வாதிகளைக் கிண்டலடிப்பதுதான் நகைச்சுவை. தான் அரசியலுக்கு வந்தால் இலஞ்சத்தை ஒளிப்பேன் என்பவர் நாளை அரசியலுக்கு வந்தபின் அதற்கும் ஏதாவது சொல்லுவார். இப்படியான சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு மக்கள்தான் சரியான பாடம் புகட்ட வேண்டும்.


ஆமாம் விடக்கூடாது வசம்பு.
நாங்கள் பதிலுக்கு கண்டன அறிக்கையைக் கூட்டாக விடுவோம்.
[size=14] ' '
Reply
#3
பிறகேன் கூட்டு நீர் ஒருவர் விட்டாலே.................................. விட்டமாதிரித் தானே. அது போதும். :roll: :roll: Idea
Reply
#4
ஏனப்பா விஜயகாந்துக்காக நீங்கள் அடிபடுறீங்கள்...? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#5
தமிலன் எண்டு சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று எண்டு மேடைகளில் வீரவசனம் பேசியவர் இப்போது எல்லோரும் ஹிந்தி கற்ற வேண்டுமாம்...........

வருங்காலத்தில் யாரும் தமிழ்நாட்டில் தமில் பேசக்கூடாது எண்டு அறிக்கை விட்டாலும் விடுவார்.
<b>
?
- . - .</b>
Reply
#6
Vasampu Wrote:பிறகேன் கூட்டு நீர் ஒருவர் விட்டாலே.................................. விட்டமாதிரித் தானே. அது போதும். :roll: :roll: Idea

ரெம்பத் தான் புகழாதிங்க!!
நீங்கள் <b>ஆலோசனை</b> சொல்லி ரெம்ப நாள் ஆச்சு என்று உதவி செய்யலாம் என்று பார்த்தால் வேண்டாம் என்கின்றியே நைனா!!
[size=14] ' '
Reply
#7
எனக்கு அப்பவே தெரியும் காஷ்மீர் பக்கம் தீவிரவாதிகளைப் பிடிக்கிறதெண்டு போகேக்கையே நினைச்சன் மனுசன் கெதியிலை அரசியலிலை வந்து இப்பிடி அறிக்கை விடும் எண்டு.......... அப்ப இந்தியாவிலை சாதியை வைச்சாத்தான் அரசியல் பிழைப்பு நடத்தலாம் போலக்கிடக்கு.........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
விஜயகாந்துக்கு சொந்தமான திருமண மண்டபம் அரசாஙத்தால் இடிக்க பட போகிறது. காரணம் புதிய பாலம் கட்டும் பணி.
.
.
Reply
#9
<b>உண்மையில் திருமண மண்டபத்தின் முன்பகுதியிலுள்ள ஒரு சிறு பகுதியே இடிக்கப் பட வேண்டியுள்ளது. இதற்குரிய நஷ்டஈடும் மத்திய அரசால் அவருக்கு வழங்கப்படும். இப்படி கிட்டத்தட்ட 40 ற்கு மேற்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்படவுள்ளன. அதில் விஜயகாந்தின் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியும் அடங்குகின்றது. ஆனால் விஜயகாந் இதை அரசியலாக்கி மக்களிடம் அனுதாபம் பெறப் பார்க்கின்றார்.</b>
Reply
#10
Vasampu Wrote:<b>உண்மையில் திருமண மண்டபத்தின் முன்பகுதியிலுள்ள ஒரு சிறு பகுதியே இடிக்கப் பட வேண்டியுள்ளது. இதற்குரிய நஷ்டஈடும் மத்திய அரசால் அவருக்கு வழங்கப்படும். இப்படி கிட்டத்தட்ட 40 ற்கு மேற்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்படவுள்ளன. அதில் விஜயகாந்தின் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியும் அடங்குகின்றது. ஆனால் விஜயகாந் இதை அரசியலாக்கி மக்களிடம் அனுதாபம் பெறப் பார்க்கின்றார்.</b>

அதுதான் உன்மை இவரும் நான் ஜெயாலலிதக்கும்
கருனநிதிக்கும் கொஞ்ம் கூட சளைத்தவன் இல்லை எண்டு காட்டிட்டார் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#11
Vஅசம்பு எழுதியது:
உண்மையில் திருமண மண்டபத்தின் முன்பகுதியிலுள்ள ஒரு சிறு பகுதியே இடிக்கப் பட வேண்டியுள்ளது. இதற்குரிய நஷ்டஈடும் மத்திய அரசால் அவருக்கு வழங்கப்படும். இப்படி கிட்டத்தட்ட 40 ற்கு மேற்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்படவுள்ளன. அதில் விஜயகாந்தின் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியும் அடங்குகின்றது. ஆனால் விஜயகாந் இதை அரசியலாக்கி மக்களிடம் அனுதாபம் பெறப் பார்க்கின்றார்.


அந்த இடத்தின் இட மதிப்புக்கும் அரசாங்கம் தர போகும் நஸ்ட ஈட்டுக்கும் வித்யாசம் நிரைய இருக்கின்றது. அந்த மண்டபம் முழுதாக இடிக்க போகின்றதா அல்லது வெரும் முகப்பு மட்டுமா என்று கூடிய விரைவில் தெரிந்து விடும்
.
.
Reply
#12
<b>ராஜாதிராஜா

இவ்விடயத்தால் விஜயகாந் மட்டுமல்ல அவர் போல் எனைய 40 ற்கு மேற்பட்ட கட்டிட உரிமையாளர்களுமே பாதிக்கப்பட உள்ளார்களே. ஆனால் பொதுவாழ்வில் ஈடுபட்ட விஜயகாந் பாதிக்கப்படும் அனைவரைப்பற்றிச் சிந்திக்காமல் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பது அவரின் சுயரூபத்தையே காட்டுகின்றது.</b>
Reply
#13
ஆம் அது சரிதான் !! அது 20 கோடி மதிப்பு உள்ள சொத்து. அவரும் சாதாரண அரசியல் வாதிதான். இதில் வியப்பு ஏதும் இல்லை. அவை இப்போது ஜெயா அம்மா ஆதர்வு தேடி செவதாக ஒரு செய்தி கூட உண்டு.
.
.
Reply
#14
rajathiraja Wrote:ஆம் அது சரிதான் !! அது 20 கோடி மதிப்பு உள்ள சொத்து. அவரும் சாதாரண அரசியல் வாதிதான். இதில் வியப்பு ஏதும் இல்லை. அவை இப்போது ஜெயா அம்மா ஆதர்வு தேடி செவதாக ஒரு செய்தி கூட உண்டு.

இந்திய அரசும் விட்டு கொடுக்கலாம் அவர் எத்தனை தீவிரவாதிகளை பிடிச்சு கொடுத்தவர் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#15
Quote:இந்திய அரசும் விட்டு கொடுக்கலாம் அவர் எத்தனை தீவிரவாதிகளை பிடிச்சு கொடுத்தவர்
_________________

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> [/quote]
.
.
Reply
#16
<b>இப்போ தனித்தே போட்டியிடுவேன் என்று சொல்லும் விஜயகாந் நிட்சயம் தேர்தல் நெருங்கியதும் அ.தி.மு.க உடனோ அல்லது தி.மு.க கூட்டணியிலிருந்து பிரியுமென எதிர்பார்க்கப்படும் வை.கோவுடனோ சேர்ந்துதான் தேர்தலைச் சந்திப்பார். </b>
Reply
#17
அரசியல்ல இது எல்லாம் சகஜம் அப்பா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#18
<span style='font-size:21pt;line-height:100%'><b>கலைஞருக்கு கேப்டன் சவால்!</b>
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p27.jpg' border='0' alt='user posted image'>
25 கிரவுண்டு நிலம்... 20 கோடி ரூபாய்ச் சொத்து... ஆசை ஆசையாகக் கட்டிய ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் எந்நேரமும் தகர்க்கப்படலாம் என்கிற சூழல்... எப்படி இருக்கிறார் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் தலைவர் எனத் தெரிந்துகொள்ள விரும்பினால், விஜயகாந்த்துக்கு நெஞ்சுவலி என்று வந்தது செய்தி!



அவசரமாக செல் நம்பரைத் தட்டினால், வணக்கம், விஜயகாந்த் பேசறேன், நல்லா இருக்கீங்களா? என்றார். அடுத்த இருபத்து ஏழாவது நிமிடத்தில் ஆரம்பித்தது பேட்டி.

என்னாச்சு? என்றால், கலகலவெனச் சிரிக்கிறார். வழக்கமான மெடிக்கல் செக்அப்தான். ஊர் ஊரா கட்சி மீட்டிங்னு அலையறேன். ஒரு மாசம் முழுக்க டூர். நடுவே ஷ¨ட்டிங் டென்ஷன் வேற... ஒரு நாள் ரெஸ்ட் கிடைச்சது. சும்மா ஜெனரல் செக்அப் பண்ணிரலாம்னு ஆஸ்பத்திரிக்குப் போனேன். சாயங்காலம் போனா கூட்டமா இருக்குமேனு கொஞ்சம் லேட்டா பத்து பதினோரு மணிக்குப் போனேன். மார்னிங் பேப்பரில் நெஞ்சுவலினு வந்துருச்சு நியூஸ்!

அதை நான் ஈஸியா எடுத்துக்கிட்டேன். ஆனா, என் ரசிகர்கள், கட்சிக்காரங்க, சொந்தக்காரங்க, சினிமா நண்பர்கள்னு பதறி, ஆளாளுக்கு போன் பண்ணி விசாரிக்கிறாங்க. இப்பதான் சத்யராஜ் பேசினார். ஒண்ணுமில்லைனு சொன்னதும், என்ன விஜி, நானும் ஒம்பது வருஷமா செக்அப்னு ஆஸ்பத்திரிக்குப் போறேன். என்னைப் பத்தி யாரும் எழுத மாட்டேங்கிறாங்களே!னு சிரிச்சார் எனும்போதே விஜயகாந்த்துக்கு அடக்க முடியாத அட்டகாசச் சிரிப்பு.

<b>அப்புறம் எப்படி இருக்கு, நீங்க கனவு கண்ட அரசியலும் இப்போ கட்சி ஆரம்பிச்சு ஊர் ஊராகப் பயணப்படும் நிஜ அரசியலும்?</b>

அவசரமா அரசியலுக்கு வரலை சார் நான். ஆறேழு வருஷமா நிறைய யோசிச்சு, நல்லது கெட்டதையெல் லாம் பேசி முடிவெடுத்து, என்னையே நான் பல முறை ஸ்டடி செஞ்சுட்டு தான் வந்தேன்.

நான் எப்பவுமே பொதுவான ஆளாத்தான் இருந்திருக்கேன். எல்லா தலைவர்களோடவும் நெருங்கிப் பழகியிருக்கேன். எல்லாரோட இன்னொரு முகமும் எனக்குத் தெரியும். பொதுவா பயப்பட மாட்டேன். மத்தவங்க மனசு புரிஞ்சு நடந்துப்பேன். ஆனா, என் மனசுக்கு சரின்னு பட்டா, அது எந்த சபையா இருந்தாலும் சொல்லத் தயங்க மாட்டேன். சரின்னா சல்யூட், தப்புனா தப்புதான்!

அரசியலில் இறங்கினதும், மதுரையில் என் கட்சியின் முதல் மாநாடே ஒரு மிராக்கிள் மாதிரிதான் நடந்தது. எப்பவுமே சினிமா ரசிகர்கள்தானேனு குறைச்சு மதிப்பிடாதீங்க. வீட்டுக்கு வீடு இருக்கிற நம்ம அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சிங்கதான் ரசிகர்கள். அதில் அரசியலுக்கு யார் யார் சரியா இருப் பாங்கனு பார்த்துத்தான் பொறுப்புகளை ஒப்படைக்கிறேன். ஒருத்தர் தப்புனா, அவங்க எனக்கு எவ்வளவு வேண்டிய வங்களா இருந்தாலும் கட்சிதான் முக்கியம்ங்கிற அடிப்படையில் வெளியே தூக்கிப் போடவும் செய்றேன்.

காஞ்சிபுரம், கும்மிடிபூண்டினு டூர் கிளம்பினேன். வழியெல்லாம் அப்படி ஒரு கூட்டம், வரவேற்பு. கூட்டத்தைப் பார்க்கப் பார்க்க என் மனசுல பலவிதமான எண்ணங்கள் ஓடுது. என்னோட வந்த பண்ருட்டியார் சிரிச்சார். எம்.ஜி.ஆரோட போயிருக்கேன். அவருக்கு எப்படி வரவேற்பு இருக்கும்னு பார்த்திருக்கேன். அந்த வேகம்... அந்தப் பாசத்தை இப்போதான் நானே இன்னொரு தடவை பார்க்கிறேன்னு சொன்னார்.

விருதுநகர் மாவட்டம், தேனி மாவட்டத்தி லெல்லாம் போன இடங்களில் பயங்கர கூட்டம். குறிப்பா, படைபடையா இளைஞர் பட்டாளமும் வயசு வித்தியாசமே இல்லாம பெண்கள் கூட்டமும் திரண்டு வர்றாங்க. அப்படியே ஆத்துல புது வெள்ளம் பாய்ஞ்ச மாதிரி இருக்கு!



<b>சினிமா வசீகரத்தினால் கூடுகிற கூட்டத்தைப் பார்த்துவிட்டு எமோஷனலாகக் கணக்குப் போடுவது சரி வருமா? </b>

நான் பல கூட்டத்தைப் பார்த்தவனுங்க. வேடிக்கை பார்க்க வர்ற கூட்டம், பிரியத்தால் ஓடி வர்ற ஜனங்க, மனசில் மரியாதை இருந்தா முகத்தில் தெரியுமே ஒரு தவிப்பு... அப்படி எல்லா வித்தியாசமும் எனக்கும் புரியும். ஏன்னா, கூட்டத்தில் ஒருத்தன்தானே நானும்!

நான் ஜனங்ககிட்டே யதார்த்தமா பேசறேன். வேடிக்கை பார்க்க வர்ற கூட்டம்னு வெளியே பேசறாங்க. எனக்கு வோட்டு போடுவீங்களா?னு கேட்கிறேன். மொத்தக் கூட்டமும் கை தூக்கி, உனக்குத்தான் வோட்டுனு உணர்ச்சிபூர்வமா கத்துறாங்க. இத்தனைக்கும் பல இடங்களில் மேடைகூடக் கிடையாது. என் வேனில்தான் ஏறி நின்னு பேசறேன்.

குடும்ப அரசியல், கொள்ளை அரசியல், வாரிசு அரசியல்னு மாறிமாறி மக்களும் நிறையப் பார்த்துட்டாங்க. எத்தனையோ முறை... எத்தனையோ கட்சிகளுக்கு மாறி மாறி வோட்டுப் போட்டுப் பார்த்துட்டீங்க. இந்த முறை எனக்கு ஒரு வாய்ப்பு தாங்க... நான் மாத்திக்காட்டுறேன்னுதான் கேக்கிறேன்!

<b>ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு செயல் திட்டம், கவர்ச்சியான வாக்குறுதிகள் இருக்கும், நீங்க என்ன சொல்லி வோட்டு கேட்கிறீங்க?</b>

என் வாக்குறுதியெல்லாம் சிம்பிள்!

லஞ்சத்தை ஒழிக்கணும்னா அது ஏதோ அம்பது ரூபா, நூறு ரூபா லஞ்சத்தை மட்டுமில்லை. மக்கள் நலத் திட்டங்களைச் செய்ய மக்கள் வரிப் பணத்தைக் கோடி கோடியா கொள்ளையடிக்கிறாங்களே, அதை ஒழிச்சுக்காட்றேன்னு சொல்றேன்.

வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தீர்க்கிறேன்னு சொல்றேன். காரு, கம்ப்யூட்டர், செல்போன்னு ஆரம்பிக்கிற அத்தனை ஃபேக்டரியும் மெட்ராஸ்லயே இருந்தா போதுமா? செங்கல்பட்டுக்கு வெளியே இருக்கிறதும் தமிழ்நாடுதானே, ராமநாதபுரம் வரைக்கும் வாழறவனும் தமிழன்தானே! மாவட்டத்துக்கு மாவட்டம் தொழிற்சாலைகள் கொண்டுவர்றேன்னு சொல்றேன். எல்லோருக்கும் பரவலா வேலை வாய்ப்புகள் கிடைக்கணும். அதுக்கான அடிப்படை வசதிகளைச் செய்யாம, அங்கெல்லாம் அடிப்படை வசதிகள் இல்லைனு சொல்றதும் குற்றம்தானே!

எனக்கும் அன்னைத் தமிழ்தான் முக்கியம். ஆனா, அதோட அனைத்து மொழிகளையும் கற்கணும்னு சொல்றேன். அதுக்கான வாய்ப்பு வசதிகளைச் செய்து தருவேன்னு சொல்றேன். நகர்ப்புறத்துக்கு இணையா கிராமப்புறத்திலும் சுகாதார வசதிகளை மேம்படுத்தணும். ஒவ்வொரு டாக்டரும் படிப்பை முடிச்சு வர அரசாங்கம் செலவழிக்கிற தொகையை அவங்க படிச்சு முடிச்சதும் கிராமங்களில் போய்ச் சேவை செஞ்சு நன்றிக்கடனாத் திருப்பித் தரணும். அப்படி ஒவ்வொரு துறையையும் ஒழுங்காக்க நிறைய விஷயங்கள் மனசில் வெச்சிருக்கேன்.

மிக முக்கியமா, இனிமேல் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரணும்... வரும். இதுதான் என் முதல் சவால்!


<b>என்னது... வீடு தேடி ரேஷன் வருமா? ரமணா பட டயலாக் மாதிரி பேசறீங்களே?</b>

கிண்டலாத்தான் தோணும். கேலி பேசக்கூட வசதியா இருக்கும். நான் ஆட்சிக்கு வந்தால், என் கைக்கு பொறுப்பு வந்தால், ஒரு வருஷத்துக்குள் ரேஷன் பொருட்களை வீடு தேடிக் கொண்டுவந்து தருவேன். ஏங்க, வீடு தேடி நியூஸ் பேப்பர் வருது, பால் வருது, கேஸ் சிலிண்டர் வருது, ரேஷன் மட்டும் வராதா? வரவைப்பேன். தரவைப்பேன். இது சத்தியம்!

<b>திடீர்த் தலைவர், அம்மாவின் கடைக்கண் பார்வைக்காகக் காத்து நிற்பவர் என்கிற அரசியல்ரீதியான விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?</b>

முரசொலியில் எழுதறதைப் பத்தி கேக்கிறீங்களா?

அப்துல் கலாமைப் பார்க்க சோனியாவும் மன்மோகன்சிங்கும் சேர்ந்துதான் போனாங்க... வெளியே வந்தபோது மன்மோகன்சிங்தான் பிரதமர்னு அறிவிச்சாங் களே...அவர் திடீர் பிரதமர்தான். இங்கேயிருந்து டெல்லி போன இரண்டு பெரிய வீட்டுப் பிள்ளைகள் மறுநாளே மத்திய மந்திரிகள் ஆனாங்களே, அவங்களும் திடீர் மந்திரிகள்தான். அதையெல்லாம் விட்டுட்டு என்னை மட்டும் திடீர் தலைவர்னு சொல்றாங்க... பிரமாதம்!

நாற்பது எம்.பிக்கள் என்ன பண்ணாங்க?னு கேட்டேன் தான். சேது சமுத்திரம், செம்மொழினு என்னென் னவோ சொல்றாங்க. வெள்ள நிவாரணத்துக்கு என்ன செஞ்சீங்க, எவ்வளவு நிவாரண நிதி வாங்கிக் கொடுத்தீங்க?னு கேட்டால், ஒரு குழந்தை உளர்ற மாதிரி என்னைப் படம் போட றாங்க. அரசியல்ல நான் குழந்தைதான். ஆனா, ஞாபகம் வெச்சுக்குங்க... குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னு சொல்ற ஊர் இது!

நான் நாகரிகமா அரசியல் பண்ண ஆசைப்படறேன். என்னை விமர்சனம் பண்றவங்களுக்கு மட்டும்தான் பதில் சொல்றேன். ஆனா, என் நியாயமான பேச்சைக்கூட ட்விஸ்ட் பண்ணி, ஏதோ நான் தி.மு.க&வுக்கு எதிரி மாதிரியும் அ.தி.மு.க&வுக்கு ஆதரவு மாதிரியும் ஒரு இமேஜை உருவாக்கப் பார்க்கிறாங்க. நான் ரெண்டு கட்சியையுமே சம தூரத்தில் வெச்சுத்தான் பார்க்கிறேன்.

<b>இருக்கட்டும், ஒரு விஷயமாக என்னைச் சந்திக்க வந்த விஜயகாந்த், வெளியே போய் எதற்காக என்னைச் சந்தித்தாரோ அதை அப்படியே மறுத்தார் என தி.மு.க. தலைவர் கருணாநிதி, நீங்கள் பொய் சொன்னதாகச் சொல்கிறார். உங்கள் பதில் என்ன?</b>

படிச்சேன், சிரிச்சேன்! கலைஞரை பல முறை பல விஷயங்களுக்காகச் சந்திச்சிருக்கேன். ஆனால், இந்த முறை மட்டும் வீடு தேடி வந்தவனை, போட்டோ எடுத்து, அதை பிரஸ் நியூஸா கொடுத்து அரசியல் ஆக்கியது அவர்தான். நான் பொய் சொல்லலை. இன்னமும் நாகரிகம் கருதி, சில உண்மைகளைச் சொல்லாமல் இருக்கேன் என்பதுதான் உண்மை!

<b>கோயம்பேட்டில் மேம்பாலம் கட்டுவது தொடர்பாக உங்களின் ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம் இருக்கும் நிலத்தையும் மத்திய அரசு கையகப்படுத்து வதில்தானே பிரச்னை ஆரம் பிக்கிறது. மண்டபம் இடிபடு வதில் உங்களுக்கு வருத்தமா?</b>

நான் பதில் சொல்ல வேண்டிய கேள்விதான் இது... சில விஷயங்களைத் தெளிவுபடுத்திடற வேண்டியதுதான். பாலத்துக்காக அரசு கையகப்படுத்தும் இடங்களைச் சேர்ந்தவங்களில் 161 பேர் எங்க சொத்துக்களை இடிக்கக் கூடாதுனு கேட்கிறாங்களாம். அந்தப் பட்டியல்ல என் பெயர் இல்லை சார். மண்டபத்தை இடிக்கிறாங்களா... இடிக்கட்டும், எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனா, அதை வெச்சு என்னை அசிங்கப்படுத்த முயற்சி பண்ணா, நான் என் கச்சேரியை ஆரம்பிச்சிருவேன்.

என் மண்டபம் இருக்கிற இடத் தில் பாலம் வரலை. பாலத்துக்கான தரைவழிப் பாதைதான் வரப்போகுதாம்னு சொல்றாங்க. அதையும்கூட மண்டபத்துக்குப் பெருசா சேதம் வராம, முன்னாலேயோ பின்னாலேயோ பக்க வாட்டிலேயோ கொண்டு போக முடியும்னு அந்தத் துறை அதிகாரிகளா இருக்கிற சில நண்பர்களே சொன்னாங்க. மண்டபத்தைச் சுற்றி இருக்கிற இடங்களைத் தர்றோம்னு சொன்னால், மண்டபம் தான் வேணும்னு கேட்கி றாங்க. ரைட்டு, நான் அவங்க ரூட்டில் இடிச்சிருவேனோனு, அதுக்கு முன்னால் என் மண்டபத்தை இடிச் சுடணும்னு பார்க்கி றாங்களோ என்னவோ?

<b>கிட்டத்தட்ட இருபது கோடி ரூபாய் சொத்து என்கிறார்கள். இழப்பின் வலியை எப்படித் தாங்குகிறீர்கள்?</b>

வாழ்க்கையில் பல இழப்புக்களைச் சந்திச்சுப் பழக்கமாகிருச்சு. ஒரு கல்யாண மண்டபத்தை வெச்சு என்னை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. மக்கள் எனக்குக் கொடுத்த காசை மக்களுக்கே திருப்பித் தர்றதா நினைச்சுட்டுப் போயிருவேன். நான் சின்ன வயசிலிருந்தே கொடுத்துப் பழக்கப்பட்டவன் சார். இரண்டரை ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிட மக்களுக்காக இலவசமாகக் கொடுத்தேன். வருஷத்துக்கு 25 லட்ச ரூபாயை இல்லாதவங்களுக்குக் குடுக்கிறதுக்காகவே சம்பாதிக்கிறவன். நான் என் சொத்துக்களை வித்துதான் மாநாடு நடத்தினேன். என்னைப் பார்த்து பொது வாழ்க்கைக்கு வந்த விஜயகாந்த் கல்யாண மண்டப விவகாரத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாதுனு புத்திமதி சொல்றார் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு.

ஹலோ, நான் அரசியலுக்கு வர்றப்பவே காசோட வந்தவன். ஆனா, அரசியலுக்கு வந்து சம்பாதிச்சவங்க எனக்கு அட்வைஸ் பண்றாங்க. என் சொத்தை இதோ நான் சந்தோஷமா தர்றேன். மக்களுக்கு நல்லதுன்னா, என் மண்டபத்தை விட்டுக்கொடுக்கிறேன் சார் பெருமையா!

<b>இது அரசியலாக்கப்படுவதுதான் வருத்தமா? </b>

ஆமா, அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கல்யாண மண்டபத்துக்கு கார் பார்க்கிங் எங்கேனு கேட்டப்போ முன்னாடி இருக்கிற இடத்தைக் காட்டினாங்க. அப்புறம் மாநகராட்சி அந்த இடத்தைப் பூங்காவாக்கணும்னு பிரச்னையை ஆரம்பிச்சதும் சினிமாவில் செட் போடற மாதிரி திடீர்னு ரெண்டு சேர் போட்டு, கொஞ்சம் பூச்செடிகள் வெச்சு அதில் சாயங்காலம் ஆட்களை உட்காரவெச்சு அது ஒரு பூங்காவாதான் இயங்குதுனு காட்டினாங்களே. அரசாங்கம் கேட்டதும் அந்த இடத்தைத் தூக்கிக் கொடுத்திருக்க வேண்டியதுதானே. அவங்ககிட்ட இல்லாத சொத்து சுகமா... காசு பணமா? அறிவாலயத்துச் சொத்துக்கு ஆபத்துனா மட்டும் சட்டப்படி சந்திப்பாங்களாம். என் மண்டபத்துக்கு பிரச்னைனா, பெருசா எடுத்துக்கக் கூடாதாம். நல்ல காமெடிங்க இது!

போக்குவரத்து வசதிக்காக கோயம்பேட்டில் பாலம் கட்டணும்னு கல்யாண மண்டபத்தை இடிக்கப்போறீங்க, சரி. அதே மாதிரி சென்னையில் கோடம்பாக்கம் மேம்பாலம்னு ஒண்ணு இருக்கே... தினம்தினம் டிராஃபிக்கில் திணறுதே. அதை ஏன் சின்னதா கட்டினாங்கனு விசாரிச்சுப் பாருங்க, ஒரு வரலாறு இருக்கும். ஏன், ஸ்டாலின் மேயரா இருந்தப்போ அதை இடிச்சு இன்னும் பெருசா கட்டியிருக்கலாமே. பாலத்துக்குக் கீழே முரசொலி இருக்கு, அதனால்தான் அதைத் தொடலைனு மக்கள் சொல்றாங்களே, அது உண்மையா... பொய்யா? கோயம்பேடு பாலமா, கோடம்பாக்கம் பாலமா எது சென்னைக்கு முதலில் முக்கியம்னு மக்களிடம் கேளுங்க சார், அவங்க பதில் சொல்வாங்க! பொது வாழ்க்கைக்கு வர்றவங்க எப்படி இருக்கணும், இருக்கக் கூடாதுனு எனக்கு சில பேர் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. நானும் சொல்றதுக்கு நிறைய இருக்கு... ஒவ்வொண்ணா மக்கள் மன்றத்தில் எடுத்துவைக்கிறேன். எனக்கு எஜமான், மக்கள்தான்!

<b>திமு.கவையும் மத்திய மந்திரிகளையும் தாக்குகிற அளவுக்கு, ஏன் தமிழக அரசின் செயல்பாடுகளையும் முதல்வர் ஜெயலலிதா வையும் நீங்கள் விமர்சிப்பதில்லை? ரகசிய அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறதா? ஏன்... ஜெயலலிதா ஆட்சியில் ஊழேலே இல்லையா? நிர்வாகத்தில் குளறுபடிகளே இல்லையா?</b>

தமிழக அரசைப் பற்றியும் அதன் ஊழலைப் பற்றியும் ஏன் பேசலைன்னா, இந்த முறை என்ன பெரிசா தப்பு நடந்திருக்கு? ஊழல் நடந்திருக்கு?

இந்தத் துறையில் இத்தனை கோடி ஊழல்னு எத்தனை நியூஸ் வந்திருக்கு? பொத்தாம்பொதுவா மணல் அள்ளுவதில் கொள்ளை, மதுக் கடைகளில் கொள்ளைனு மேடை அலங்காரத்துக்காக அடிச்சுவிட என்னால் முடியாது. ஆனா, அதுக்காக இதுதான் காமராஜர் ஆட்சினு சர்டிபிகேட் கொடுக்கவும் மாட்டேன்.

எனக்கும் அ.தி.மு.க& வுக்கும் இடையில் எந்த ரகசிய உறவும் இல்லை. வெளியூர் சுற்றுப்பயணத்தில் மக்களைச் சந்திக்கும்போது இரண்டு கட்சிகளையுமே கடுமையாகப் பேசறேன். அ.தி.மு.க&வுக்கு ஆதரவாக இருக்கணும்னா, நான் ஏன் தனிக் கட்சி ஆரம்பிக்கணும். அவங்க மேடையில் ஏறி நின்னு கூட்டத்தைப் பார்த்துக் கும்பிட்டாலே போதுமே!

<b>தனித்துப் போட்டி என்று சொல்லிவிட்டு, கடைசியில் அ.தி.மு.க. கூட்டணியுடன் ஐக்கியமாகி விடுவார் என்று பேச்சு கிளம்பி இருக்கிறது. உங்கள் பதில் என்ன?</b>

கூட்டணி வைக்கணும்னா, நான் எதுக்கு சார் தனியா கட்சி ஆரம்பிச்சேன்.? தனியாகத் தான் ஒரு கை பார்க்கிறதுனு முடிவா இருக்கேன். கும்பலில் கோவிந்தா போடற வேலை எனக்குப் பிடிக்காது.

<b>விஜயகாந்த்தின் ஈர இதயம் தமிழகத்துக்குத் தெரியும். ஆனால், அரசியல், நிர்வாகம் என வரும்போது தேவைப்படும் புத்திசாதுர்யம் தங்களுக்கு இருப்பதாக நம்புகிறீர்களா? உங்கள் கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதிலேயே குளறுபடியாமே?</b>

ஆஸ்பத்திரிக்கு செக்அப் போனாலே, நெஞ்சுவலினு நியூஸ் பரவுற ஊரு இது. அதனால, மீடியா சொல்ற விஷயத்துக்கெல்லாம் பதில் சொல்ல நினைச்சா, அதுக்கே 24 மணி நேரமும் சரியாப்போகும்.

சாதாரணமா ஒரு அப்ளிகேஷனை எழுதிக் கொடுத்தா, அதில் ஒண்ணு ரெண்டு சந்தேகங்கள் இருந்தா கேட்பாங்கதானே. அப்படித்தான் எங்களையும் தேர்தல் கமிஷன்ல கேட்டாங்க... அதுக்கான விளக்கங்களைக் குடுத்துட்டோம். அதெல்லாம் நல்லபடியா நடக்கும்!

<b>என்னதான் இருந்தாலும் அரசியல் என்பது உங்களுக்கும் உங்கள் ஆதரவாளர்களுக்கும் முதல் அனுபவமாச்சே... கட்சிக்காரர்களுக்கு என்ன சொல்லிக்கொடுத்திருக்கிறீர்கள்? </b>

டிசிப்ளின்! பொதுவாழ்க்கையில் ஒழுக்கமும் கட்டுப்பாடும்தான் ரொம்ப முக்கியம். நாம நடந்துக்கிற விதத்தை வெச்சுதான் மக்களுக்கு நம்ம மேல மரியாதை வரும்னு சொல்லிச்சொல்லி வளர்க்கிறேன்.

பத்து கேஸ் போட்டா இந்த ஆளு தாங்குவானா?னு என்னைப் பத்தி ஒரு தலைவர் சொன்னாராம். ஒண்ணே ஒண்ணு புரிஞ்சுக்குங்க, என் ஆட்கள் இள ரத்தம். வம்பு பண்ண நினைச்சு யாராச்சும் கை வெச்சீங்க, தொட்டவங்க தான் மாட்டிப்பீங்க. இதை எச்சரிக்கையா இல்லை, நிஜமாவே அன்போட... அக்கறையோட சொல்றேன்! என்கிற விஜயகாந்த்

உழைக்கிறவன் உழைச்சுக்கிட்டே இருப்பான், ஏமாத்திப் பிழைக்கிறவன் பிழைச்சுக்கிட்டே இருப்பான்னா இது என்ன அரசியல்?னுதான் கேட்கிறேன். என் கேள்விக்கு நிச்சயம் பளிச்சுனு பதில் சொல்வாங்க தமிழ் மக்கள்! சிவந்த விழிகளில் கனவுகள் மிதக்கச் சிரிக்கிறார் பிரகாசமாக! </span>



ரா.கண்ணன், மை.பா.நாராயணன்
படங்கள்: என்.விவேக்

-விகடன்
Reply
#19
இந்த காமெடியன்லாம் அரசியலுக்கு வந்து.... எல்லாம் தமிழகத்தோட நேரம்....
,
......
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)