01-01-2006, 04:38 AM
மலர்ந்தது புத்தாண்டு !!
காலமகள் பெற்றெடுத்தாள் மீண்டும்ஒரு மழலை - நம்
கண்ணெதிரே தவழவிட்டாள் புதியதொரு வரவை!
ஞாலமெலாம் மகிழ்ந்திருக்க மலர்ந்தது புத்தாண்டு - எழு
ஞாயிறுபோல் உதித்ததம்மா நம்மையெலாம் ஆண்டு!
ஆண்டுதொறும் அவனிதனை ஆண்டுகொள்வ தால்தான் - இதை
"ஆண்டு"எனநாம் அழைத்தோமோ! அரியதொரு பேர்தான்!
மீண்டுமொரு படிக்கல்லைத் தாண்டுகின்ற தால்தான் - நாம்
மென்மேலும் புத்"தாண்டு"என் றழைத்தோமோ? நேர்தான்!...
வான்புகழ்சால் தமிழா,நீ தாண்டுவதற் கென்று - இவ்
வையகத்து வாழ்க்கைதனில் எத்தனையோ உண்டு!
தான்பிறந்த மண்சிறக்க, தடைகளெலாம் வென்று - நீ
தாண்டிடுவாய்! தழைத்திடுவாய், சாதனைகள் கண்டு!
சாதியென்னும் சாக்கடையை நீதாண்ட வேண்டும்! - வெறும்
சதிமிகுந்த மதவெறியின் மதில்தாண்ட வேண்டும்!
நீதிமின்னும் மனிதநேய ஒளிதோன்ற வேண்டும்! - உன்
நிழல்கூட கொடுமைகட்குக் குழிதோண்ட வேண்டும்!
புறமுதுகு காட்டாமல் போர்க்கோலம் பூண்டு - நீ
பொய்ம்மைகளைத் தாண்டு!புகழ் முகடுகளைத் தீண்டு!
அறமதனை வளைத்திருக்கும் அகழிகளைத் தாண்டு! - நீ
அச்சமுறின், மெச்சுவ(து)ஆர்? தமிழினத்தை ஈண்டு!
தாண்டுகின்ற கொள்கையிலே தளர்ந்திடாமை வேண்டும் - சிறு
தவறுகூட தரணியிலே நிகழ்ந்திடாமை வேண்டும்!
வேண்டுவ(து)இப் புத்தாண்டில் விலகிடாமை வேண்டும் - அது
மெய்ப்படுங்கால், நமக்கினிமேல் வேறு என்ன வேண்டும்?
தென்னிலங்கைச் சோதரர்க்குத் தீர்ப்புஒன்று வேண்டும் - அவர்
தேடுகின்ற அமைதியென்ற தென்றல்வீச வேண்டும்!
மண்ணில்எம்கை ஓங்கிடும்நாள் மலர்ந்திடத்தான் வேண்டும் - தமிழ்
மாதரசி ஊட்டியபால் வென்றிடத்தான் வேண்டும்!
வருகைதரும் புத்தாண்டே, வளமையுடன் தோன்று - உன்
வரவினில்எம் நம்பிக்கை விழுதுகளை ஊன்று!
இருகரங்கள் நீட்டியுனை வரவேற்றோம் இன்று - நீ
எம்மைவிட்டுத் தாண்(டு), எம்மவர்க்(கு) ஏற்றம்ஒன்றே தந்து!!..
தொ. சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com )

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->