Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்ப்பாணத்து வருசப்பிறப்பு
#1
தமிழ் வருசப்பிறப்பு வரப்போகுதெண்டால் சின்னனுகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.

முழுப் பதிவிற்கும்

http://kanapraba.blogspot.com/2006/04/blog-post.html
Reply
#2
நீர் அதிஸ்டசாலி பிரபா, யாழ் மண்ணில் இருந்து அதுவும் ஆங்கிலேயர்கள் மருத்துவமனை, ஆங்கில(சினிப்)பள்ளிக்கூடம் என்று கட்டியும் 100% வீதமக்களும் மதம் மாறாத இணுவில் மண்ணில் இருந்து கொண்டு புது வருடத்தினைக் கொண்ட்டாட அதிஸ்டம் வேண்டும்.
,
,
Reply
#3
நாங்கள் முன்பு யாழில் கொண்டாடிய வருசப்பிறப்புகள் நினைவுக்கு வருகிறது. அந்த நினைவுகள் சந்தோசத்தையும் ஒரு புறம் கவலையையும் தருகிறது. எல்லாம் ஒரு முடிவுக்கு வர ஆண்டவன் அருள்புரியட்டும்
Reply
#4
இந்தமுறை சிட்னி முருகன் கோவில் வருசப்பிறப்பன்று போனனான். சிட்னியில் காலை 9.10க்கு வருசம் பிறந்தது. சனம் வந்து வந்து போனது. அன்னதானம் 1 மணி என்று சொன்னார்கள். அன்னதானத்துக்கு நிக்கவில்லை. சிட்னியில் வருசப்பிறப்புக்கு 'திருப்பதி','அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' என்ற படங்களினைத்திரையிட்டார்கள். சிலர் போய் திருப்பதிக்கு டிக்கெற் கிடைக்காமல் வந்தார்கள். சிகரம் தொலைக்காட்சியில் சிட்னியில் எடுத்த 10 நிமிடக் குறும்படம் காட்டினார்கள். நல்லமுயற்சி. நன்றாக இருந்தது. என்றாலும் ஊரில இருக்கிற மாதிரி வராது. கானாபிரபா யாழ்ப்பாணத்தில் நல்லாய்க் கொண்டாடியிருப்பார்.
! ?
'' .. ?
! ?.
Reply
#5
வருஷம் பிறந்த நாளிலாவது வேளைக்கு எழும்புவமென்றில்லை குப்புறபடுத்திருக்கிறீயே ...இண்டைக்குவாது நேர காலத்துக்கு...என்று சொல்லிய படி .....அப்பம்மா.....விடிந்தும் விடியாத நேரத்திலையும் ஏதோ அவசரமாய் விடியமுந்தி முடிக்கோணுமென்றமாதிரி கிச்சினுக்கம் அறையுக்குமாய்..பம்பரமாய்..நடந்தெண்டு இருக்கு.... உந்த மனிசி.... இண்டைக்கெல்ல..எப்பவுமே வெள்ளன எழும்பியுடும்.......எங்கடை வீடு றோட்டுக்கரையில.இருக்கிறதாலை...கோழி கூவ முந்தமே... விடிய நாலுமணிக்கு முந்தியே கிடுகு மட்டை தேங்கை வண்டில்கள் அதாலை வர தொடங்கிடும் ..மாட்டின் சலங்கை சத்தமே உதுகளுக்கு அலராம் மாதிரி முழிச்சிடுங்கள்....எங்களுடய காலை சுகமான நித்திரை களை குழப்பி கொண்டு...
தட்டி வானுகளும் லொறிகளும் சுன்னாகம் கொடிகாமம் சாவகச்சேரி கிளிநொச்சி என சந்தைகளுக்கு வியாபரத்துக்கு போற பெண்டுகளை ஏத்திறதுக்காக அதாலை நாலு மணிக்கே ஓட தொடங்கிடும்........இரவிலை கூட செக்கன் ஷோ படம் முடிந்து கதைத்து வருபவர்களின் சத்தம் தூரத்தில் மெதுவாக கேட்டு கிட்ட வர பலத்து கேட்டு பின் தூரத்தில் மெதுவாக சென்று அடங்கும்........எங்க வீட்டு பெரிசுகளுக்கு...... உவையே இரவு தாலாட்டாகவும்..விடிய சுப்பிரபாதமாகவும் அமையும்...பின் முத்தத்திலுள்ள மாமரத்தில் நித்திரை கொள்ளும் எங்கடை வீட்டு சேவல் ஒன்று.....ஏனோ தெரியவில்லை சில நேரத்தில் நடு சாமத்திலும் கூவும்.....அதனால் ..அதை கணக்கில் எடுக்கிறோலை உவை........
ஏழு மணியாச்சு.....உந்த அப்பப்பா மணிக்கூட்டை பார்க்காமால் கூரை நிழலை வைச்சு சொல்லும்....வீட்டுக்கு பின் பக்கம் தோட்ட கிணறுகளிலெல்லாம் ஆக்கள் கதைக்கிற சத்தம்....இண்டைக்கு வருசமென்ற படியால் ஒரே நேரத்தில் குளிக்க முழுக வந்தபடியால் கிணறுகள் ஒரே பிசி ...மற்றம்படி உப்படி இருக்கிறேல்லை ஒருவர் காலமை குளிபபினம் மற்றவை மதியம் பின்னேரம் இரவு என நினைச்ச நேரம் குளிப்பினம்..கொஞ்சப்பேர் நாட்கணக்கிலையும் பஞ்சிப்பட்டு குளிக்காமலும் இருப்பினம்
தூரத்திலை இருக்கிற தோட்டத்திலை வாட்டர் மிசின் பூட்டி இறைக்கும் சத்தம் கேட்டது...இன்றைக்கும் தம்பர் மிளகாயையுக்கு
தண்ணி மாறார் போலை....எனக்கு அதிலை குளிக்கிறதிலை அலாதி சந்தோசம்.....தண்ணிமட்டம் வத்த முந்தி போய் குளித்துடோனும்......அல்லாட்டில் கல்லுமண்ணு சாடையா சேறு வந்து பாசி மணமடிக்க தொடங்கிடும்......................கடைசி இரண்டு தமபி மாரும் வேளைக்கு எழும்பி குளிச்சு முழுகி...புது உடுப்பு போட்டுக்கொண்டு சீன வெடி போட்டு வெடித்து கொண்டு இருந்திச்சினம்......வெள்ளன எழும்பியிட்டாங்கள் போலை........இவங்களுக்கும் பெரிசுகள் போலை ராத்திரி நித்திரை வந்திருக்காது.....விடிய வருசப்பிறப்பு கொண்டாட்டத்தை நினைத்து........பிள்ளையார் கோயில் மணி அடிக்கிற சத்தம் கேட்டது....வழமையா இந்நேரத்தில் அடிக்கிறமணி தான் இன்றைக்கென்னவோ வித்தியாசமான ராகத்தில் ஒலிப்பது போல் உணர்வை ஏற்படுத்தியது .... ஏன் அன்றைய காலைமையும் வழமையானது மாதிரி இல்லாமால் வித்தியாசமான விளங்கமுடியாத புதிய ஓவியமாய்தானிருந்தது......
எங்கட சைற் வேலியோட ஒரு குறுக்கு பாதை பிள்ளையார் கோயிலுக்கு போறதாலை ....பெண்டு களும் ஆம்புளையளும்..... குஞ்சு குருமெனுமெல்லாம் அரக்க பரக்க கோயிலுக்கும் போய்கொண்டிருந்தினர் ஊரிலை ஒரு நாளும் கனநாள் காணாத ஆட்களெல்லாம் போய் கொண்டிருந்தினம்....கண்டி கதிர்மாமம் பக்கம் கடை தண்ணி வைச்சிருக்கிறவையும்..உந்த கொழும்பு பக்கமிருக்கிறவையும் வருஷத்தை சாட்டி தான் வாறவை.......அது தான் அவையை பார்க்கக்கை எங்களைப்போல காஞ்சு கறுத்து இல்லாமால்...தளுக்கி மினுக்கி தான் இருக்கினம்.......
அப்பர் அம்மாவும் முத்தத்தில் பொங்கிற ஆயத்தத்துடன் என்னவோ ஏதோ செய்து கொண்டிருந்தினர்....வழமையாக நிக்கிற காகங்களை கூட காணவில்லை ...வெடிசத்தம் காதை பிழந்து கொண்டிருந்தது....வீம்பு காட்டி குரைத்து அட்டாகசம் காட்டுற எங்க வீட்டு நாய் வீமன் கூட ...தம்பி மாரின் வெடி விளையாட்டின் அட்டகாசம் தாங்காமால் மூலையில் வாலை சுருட்டி பதுங்கி கொண்டது...
றோட்டில் கூப்பிட்டு கேட்டது...கண்ணனின் குரல் தான்...பின்னேரம் வண்டில் சவாரியாம் வாறியே பார்க்கபோவம் ....அட நாங்களில்லாமாலா....என்று அவனுடன் கதைத்து கொண்டிருக்க ....வீட்டு முத்த்தில் பொங்கல் பொங்கியது....வெடி வெடித்து அடங்க நேரமெடுத்து கொண்டிருந்தது

நன்றி...... சின்னக்குட்டி

http://sinnakuddy.blogspot.com/2006/04/blo...8767889882.html

இந்த பதிவு என்னவோ இடையிலை தொக்கிநிக்கிறமாதிரி ஒரு உணர்வு. முதல்ல இருந்து வாசிச்சுகொண்டு வர நீங்கள் கனக்க சொல்லபோறியள் எண்டு ஆர்வமா வசிச்சுகொண்டு போனா இடையில நிப்பாட்டி போட்டியள்..... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#6
தங்கள் பின்னூட்டத்தை அளித்த அரவிந்தன், அதீபன், கந்தபு, குளக்காடானுக்கு என் நன்றிகள்.

குளக்காடான்,

இங்கிருக்கும் நேரச்சிரமங்கள் போன்றவற்றால் விரிவாக எழுதமுடியவில்லை.
Reply
#7
மருந்து நீர் போத்தலை கூட ஞாபகப்படுத்திய கானாபிராபாவிற்கு நன்றிகள்.

Reply
#8
RaMa Wrote:மருந்து நீர் போத்தலை கூட ஞாபகப்படுத்திய கானாபிராபாவிற்கு நன்றிகள்.
சிட்னி முருகன் கோவிலிலும் மருத்து நீர் கொடுத்தார்கள்.
! ?
'' .. ?
! ?.
Reply
#9
எதுக்கெடுத்தாலும் கடவுளைக் குறை சொல்லாமல், அங்கு தருகின்ற புக்கை, வாழைப்பழம், மோதகத்தை ஒரு பிடிபிடிக்கின்றதை விட்ட சும்மா புலம்பிக் கொண்டிருக்கின்Pர்கள்இ

எங்கள் நாய் யகம் கூட இந்த மோதகத்துக்காகத் தான் இந்து அமைச்சை வாங்கினவர்
<span style='color:blue'> !!
!! </span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)