Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சோல்ஹம்முடனான சந்திப்பை அடுத்து முக்கியஅறிவிப்பு
#1
<b>சோல்ஹம்முடனான சந்திப்பை அடுத்து புலிகளின் முக்கிய அறிவிப்பு வெளிவரும் </b>

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்மின் இலங்கை விஜயத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளனர் என்று விடயமறிந்த வட்டாரங்கள்கூறுகின்றன. இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வுத் திட்டத்தை ஜனாதிபதி விரைவில் வெளியிட வேண்டுமென கடந்த மாவீரர் தின உரையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வலியுறுத்தியிருந்தபோதும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இது வரை தீர்வுத்திட்டம் குறித்து புலிகளின் தலைமை விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதிலை வழங்கவில்லை. அதேநேரம், வடக்கு கிழக்கு உட்பட தமிழர்கள் செறிந்து வாழும் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் கண்மூடித்தனமாக இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதோடு, இராணுவ கெடுபிடிகளும் நெருக்குவாரங்களும் அதிகரித்துள்ளன. போர்க்காலச் சூழலை விட மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் தமிழ் மக்கள் தற்போது இருப்பதால் புலிகளின் தலைமை கடும் விசனமடைந்திருப்பதாகவும் இதன் வெளிப்பாட்டை எரிக்சொல்ஹெய்மின் இலங்கை விஜயத்தின் போது புலிகளின் தலைமை அறிவிக்குமென்றும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கை வரவுள்ள நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் ஜனாதிபதியையும் அரசாங்கத் தரப்பு பிரநிதிகளையும், விடுதலைப் புலிகளையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். முதலில் அரச தரப்பை சந்தித்துவிட்டே எரிக்சொல்ஹெய்ம் வன்னி செல்வாரென வெளியான தகவல்களை அரசு தரப்பு உறுதிப்படுத்தவில்லை. 24 ஆம் திகதி அவர் வன்னி சென்று புலிகளைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நூலிழையில் தொங்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் ஸ்திரப்படுத்தும் நோக்கில் எரிக்சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளபோதும், இராணுவ கெடுபிடிகள், நெருக்குவாரங்கள் அதிகரித்து போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கும் போது எரிக்சொல்ஹெய்மின் விஜயம் தக்க பலனைத் தருவது சந்தேகமே என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் விடுதலைப் புலிகளின் தலைமை இது விடயத்தில் உறுதியானதும் இறுதியானதுமான தமது நிலைப்பாட்டை எரிக்சொல்ஹெய்மிடம் தெரிவிக்கக்கூடுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, எரிக்சொல்ஹெய்மின் விஜயத்தின் பின்னர் இனப்பிரச்சினை விவகாரத்தில் முக்கிய திருப்புமுனையான அடுத்த கட்ட நகர்வை விடுதலைப் புலிகள் மேற்கொள்ளக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இணைப்பு : kugan
Saturday, 07 Jan 2006 USA

http://www.toplankasri.com/index.php?subac...t_from=&ucat=1&
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)