Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோப்பாயில் கைக்குண்டுத் தாக்குதல்
#1
<b>கோப்பாயில் கைக்குண்டுத் தாக்குதல்: 2 படையினர் படுகாயம் </b>
[ஞாயிற்றுக்கிழமை, 8 சனவரி 2006, 18:36 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
யாழ். கோப்பாயில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 2 சிறிலங்கா படையினர் படுகாயமடைந்துள்ளனர்.


கோப்பாயில் யாழ். - பருத்தித்துறை வீதியில் உள்ள வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் சார் அலுவலகம் அருகே சுற்றுக்காவல் பணியில் நின்று கொண்டிருந்த படையினர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இன்று பிற்பகல் 1.15 மணிக்கு இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் 2 படையினர் படுகாயமடைந்தனர். இருவரும் பலாலி இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இருவரில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலின் போது தாக்குதலை மேற்கொண்டோர் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் அவர்கள் தப்பியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து கோப்பாயில் அனைத்து வாகனப் போக்குவரத்துக்களும் 2 மணி நேரத்துக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டது. இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனிடையே கோப்பாய், நல்லூர் ஆகிய இடங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் வெள்ளைக் கொடிகளை கட்டாயப்படுத்தி வீடுகளில் கட்ட வைத்துள்ளதாக முறைப்பாடுகள் கூறப்பட்டது தொடர்பில் யாழ். நீதிபதி சிறிநிதி நந்திசேகரன் விசாரணை நடத்தினார்.

பொதுமக்கள் தாங்களாகவே வீடுகளில் வெள்ளைக் கொடி ஏற்றியதாக தம்மிடம் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி கூறியதாக அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.


Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)