Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தமிழர் தொடர்பான தார்மீக கடமையை செயற்படுத்த தயாராகின்றன த
#1
ஈழத்தமிழர் தொடர்பான தார்மீக கடமையை செயற்படுத்த தயாராகின்றன தமிழகக் கட்சிகள்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவிப்பு

ஈழத்தமிழர் போராட்டம் புதுவடிவம் எடுத்திருக்கின்ற இந்நேரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் தார்மீக கடமையை செயற்படுத்த தயாராகி வருகின்றோம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரனுடனான சந்திப்பின்போதே டாக்டர் ராமதாஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர் போராட்டத்தில் அக்கறை கொண்டுள்ள தமிழக அமைப்புகள் மட்டுமல்லாது, முழு இந்தியாவிலும் உள்ள சகல அமைப்புகளையும் அணிதிரட்ட வேண்டிய கட்டாயத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

இலங்கை இனப்பிரச்சினை என்பது வடக்கு, கிழக்கு என்ற எல்லை கோட்டுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அது இந்திய வம்சாவளி தமிழர்களின் எதிர்காலத்தையும் உள்ளடக்கியதே என்பதை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வதற்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மலையகத்தில் பிரதான அரசியல் அமைப்புகளான மலையக மக்கள் முன்னணியும், இ.தொ.கா.வும் புரிந்துணர்வோடு ஒன்றிணைந்து வடக்கு, கிழக்கு அமைப்புகளோடு கைகோர்க்க முன்வந்திருப்பது நல்ல ஒரு அடையாளம் மட்டுமல்ல, காலத்தின் கட்டாயமும் ஆகும்.

பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பம் முதலே இலங்கை விவகாரத்தில் தனது அக்கறையை ஒளிவு மறைவின்றி துணிச்சலாக வெளிப்படுத்தி வந்துள்ளது. தற்போது தமிழக அமைப்புகள் பலவும் மீண்டும் இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்ற வரலாற்று கடமை எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிடாமல் இருக்கவும் முடியாது. அதேநேரம் இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கியோ, பயிற்சி அளித்தோ நிலைமையை மேலும் சிக்கலாக்கவும் கூடாது என்பதை இந்திய அரசுக்கு இடித்துரைக்க நாங்கள் உறுதியுடன் இருக்கின்றோம்.

இலங்கை இனவாத அரசியல்வாதிகளின் கபட நாடகத்தை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பை உணர்ந்து நாங்கள் செயற்படுவோம் எனவும் அக்கலந்துரையாடலில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

இக்கலந்துரையாடலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜீ.கே.மணி எம்.பி., ஏ.கே.மூர்த்தி எம்.பி., மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

http://www.thinakural.com/New%20web%20site...y/08/news-3.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
செய்திக்கு நன்றி!
[size=14] ' '
Reply
#3
[size=18]<b>அமெரிக்காவைக் கண்டித்து சன. 28. தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள்: 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் கூட்டு அறிவிப்பு! </b>

சிங்கள அரச பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து ஈழத் தமிழர்களை மிரட்டும் வகையில் அமெரிக்கத் தூதுவர் ஆற்றிய உரைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழக நகரங்களில் எதிர்வரும் சனவரி 28 ஆம் நாளன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளதாக 30-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளை உள்ளடக்கிய தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.


இது தொடர்பில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அவசரக் கூட்டம் கடந்த புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் பெ. மணியரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ்-தமிழர் இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் வன்னியரசு, மார்க்சிய- பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி சார்பில் வாலாசா வலல்வன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் கா. பரந்தாமன், கி.த. பச்சையப்பன், மு. அந்தாலனார், தமிழப்பன், செவ்வியன், ம.இலெ.தங்கப்பா, முகம் மாமணி, நா.வை. சொக்கலிங்கம், அரங்க. குணசேகரன், புரசை கோ.தமிழேந்தி, அன்பு. தென்னரசன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்:

1. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. மறைந்த தலைவருக்கு தனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.

2. கடந்த சனவரி 11 ஆம் நாளன்று இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லான்ஸ்டெட் தேவையற்ற வகையிலும், ஆதிபத்திய நோக்கிலும் ஈழத் தமிழர்களுக்கு மிரட்டல் விடுத்திருப்பதற்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

சிங்களப் பேரினவாதிகள் நடத்தி வரும் அரச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்கா தொடர்ந்து செயற்பட்டு வருவதும் தென்னாசியப் பகுதியில் காலுன்ற முயலுவதும், ஈழத் தமிழர்களின் நலன்களுக்கு மட்டுமல்ல. இந்தியாவின் நலன்களுக்கும் எதிரிடையானது என்பதை உணர்ந்து அமெரிக்காவின் வல்லாதிக்கப் போக்கைக் கண்டிக்க ஆர்த்தெழுமாறு அனைவரையும் இக்கூட்டம் வேண்டிக் கொள்கிறது.

வருகிற 28.1.06 சனிக்கிழமையன்று காலை 11 மணிக்கு சென்னை, தஞ்சை, மதுரை, சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ள "அமெரிக்க வல்லாதிக்க எதிர்ப்பு" ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் இக்கூட்டம் அழைப்பு விடுக்கிறது.

3. தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து சிங்களக் கடற்படையினர் சுட்டுக் கொல்வதும், படகுகளையும் மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்துவதும், பிடிக்கப்பட்ட மீன்களைக் கொள்ளையடிப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய இந்தியக் கடற்படை செயலற்று இருப்பதற்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

தமிழக மீனவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்குப் பயிற்சியும், ஆயுதங்களும் கொடுத்துதவ இந்திய அரசு முன்வர வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

இந்திய அரசு கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதொன்றே, சிங்களக் கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்க நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதை இக்கூட்டம் சுட்டிக்காட்டுறது.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் தமிழக மீனவர்கள் பாதுகாப்பு மாநாட்டினை பிப்ரவரித் திங்களில் மதுரையில் நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

4. இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இதுவரை குறைந்த விலையில் வழங்கப்பட்டு வந்த அரிசியை நிறுத்துவது என்று இந்திய அரசு செய்துள்ள முடிவை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. மீண்டும் குறைந்த விலையில் தமிழ் அகதிகளுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இக்கூட்டம் வேண்டிக் கொள்கிறது.

ஈழத் தமிழ் அகதி மாணவர்க்ளுக்கு கல்வித் துறையில் அளிக்கப்பட்டிருந்த இடஒதுக்கீட்டை மீண்டும் அளிக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது என்று அந்த அறிக்கையில் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்

<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)