Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்காவில் இரு இலங்கைப் பெண்கள் சுட்டுக் கொலை.
#1
ஞாயிறு 08-01-2006 22:20 மணி தமிழீழம் [அமெரிக்க நிருபர் ]

அமெரிக்காவில் இரு இலங்கைப் பெண்கள் சுட்டுக் கொலை.

அமெரிக்காவின் சண்ரைஸ் பிரதேசத்தில் இரு இலங்கைப் பெண்களது சடலங்கள் அப்பிரதேச காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சொர்ணமணி முத்துலிங்கம்(வயது 63) அவரது மருமகள் ரசேல் லவன் (வயது 43) ஆகிய இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டவர்களாவர். இவர்களது சடலங்களுக்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ரசேல் லவன் கணக்களாராக மியாமி-டேட் காவல்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அவரது மாமியார் தனது பேரப்பிள்ளைகளை பராமரிப்பதற்காக அன்மையில்தான் இலங்கையிலிருந்து வருகைதந்திருந்தார். விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து உள்வீட்டு தகராறு காரணமாக இந்த இரட்டைக் கொலை இடம்பெற்றிருக்கலாமென அவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். அயலவர்களின் தகவல்களின்படி எந்தவொரு குடும்ப சச்சரவுகளும் கடந்த காலத்தில் இடம்பெற்றிருக்கவில்லை என தெரியவருகின்றது.

ரசேல் லவன் இனது கணவர் ரசேல் முத்து சடலங்களை கண்டெடுத்தார். காவல்துறையினர் அவரிடம் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டபோதும் அவர் மீது எந்த குற்றச்சாட்டுக்களையும் இதுவரை சுமத்தவில்லை. ஆனால் அவர் துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை மறைத்து வைத்திருந்தமை தெரியவந்திருக்கின்றது. இவர்களது 3 குழந்தைகளும் இப்போது காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள்.



Pathivu
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)