01-10-2006, 01:14 PM
செவ்வாய் 10-01-2006 17:13 மணி தமிழீழம் [கனடா நிருபர்]
<span style='font-size:25pt;line-height:100%'>சர்வதேசமே விழித்துக்கொள்!</span>
<b>ஈழத் தமிழ் மாணவர்கள் மீது இலங்கை இராணுவத்தினரால் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வரும் மனித உரிமை அத்து மீறல் நடவடிக்கைகள் குறித்து கால்ற்றன் பல்கலைக் கழக தமிழ் மாணவர் அமைப்பு பெரும் விசனத்துக்கு உள்ளாகி இருப்பதுடன் தமது கடும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறது. இந்த ஜனநாயக அத்து மீறல்களை இலங்கை அரச படைகள் உடனடியாக நிறுத்த வேண்டும். இது சார்ந்த அழுத்தத்தினை கனேடிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று எமது கோரிக்கையினையும் இப்பிரசுரம் வழியாக சர்வதேச சமூகத்திற்கு புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களாகிய நாம் முன் வைக்கின்றோம்.
இலங்கை இராணுவத்தினரின் வன்முறைகளில் இருந்து எமைப் பாதுகாத்து கொள்ளவே நாம் புலம் பெயர் அகதிகளாய் இங்கு தஞ்சம் புகுந்தோம். கனேடியத் தமிழர்களாய் நாம் இங்கு வளர்க்கப்பட்டிருந்தாலும் எமது இரத்த உறவுகளில் பலர் இலங்கையில் மாணவர்களாய் கல்வி பயில்கின்றனர். அவர்கள் நாளாந்தம் எதிர் நோக்கும் பிரச்சினைகளை அவர்களுடனான நேரடித் தொடர்புகள் எமக்குப் பகிரங்கப்படுத்துகின்றன.
எம் தாயகத்தில் எமது மாணவ சகோதரர்களுக்கு எதிராக நடாத்தப்படும் கைது நடவடிக்கைகள், தாக்குதல்கள், சித்திரவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள், மற்றும் ஈவிரக்கமற்ற கொலை நடவடிக்கைகள் என்பன புலம் பெயர் மாணவர் சமூகத்திற்கு பெரும் அதிர்ச்சியை தரும் அதே வேளை எமை விரக்தியின் விளிம்பிற்கே இட்டுச் செல்கின்றன. எமது சகோதரர்களில் யாரேனும் எப்போதாவது கொல்லப்படலாம் என்கின்ற வேதனை எமை ஆழ்ந்த மன உளைச்சலுக்கும், ஆத்திரத்திற்கும் உள்ளாக்கி இருக்கிறது. கனேடியப் பல்கலைகழகங்களில் பட்டதாரி கல்வியினை மேற்கொண்டிருக்கும் நாம் இந்நிகழ்வுகளால் பெரும் மனச் சஞ்சலத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம். தொடரும் இவ் மன அழுத்தங்களால் எமது கல்வி சார் திறன்கள் மழுங்கடிக்கப்பட்டு சமுதாயத்தில் எமது அங்கீகாரமும் மட்டுப்படுத்தப்படுகிறது. கனேடிய பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு செய்து வரும் கனேடிய தமிழ் மாணவர்களாகிய எமது நிலைப் பாட்டினை கனேடிய அரசு புரிந்து கொள்ளும் என நாம் திண்மையாக நம்புகிறோம். எமது முற்று முழுதான திறனை கனேடிய அரசு உள்வாங்கிக் கொள்ள வேண்டுமெனில், எமது மன உளைச்சலுக்கு அடிவேராய் இருக்கும் ஈழத் தமிழ் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும். இதற்கு கனேடிய அரசு எமக்கு உதவ முன்வர வேண்டும்.
'கல்வித்தரப்படுத்தல்' என்கிற பெயரில் ஈழத்தமிழ் மாணவர்கள் மீது ஆரம்பிக்கப்பட்ட அடக்கு முறையானது அண்மைக் காலங்களில் காட்டு மிராண்டித்தனத்தின் உச்சக்கட்டத்தை எய்தியுள்ளது. இலங்கை அரச படைகளின் மிலேச்சத்தனதிற்கு ஆதாரமாக பின்வரும் சமீபத்திய நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
1) இளையதம்பி தர்சினி (வயது20) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை.
2) யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் அமைதிப் பேரணியில் இலங்கை இராணுவம் நடாத்திய துப்பாக்கிச் சூடு.
3) அருள் அஜந்தன் (வயது16) கொடூரமாகச் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை.
4) திருகோணமலையில் அராஜகமான முறையில் ஐந்து மாணவர்கள் காடைத்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டமை.
மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் குறுகிய காலத்தில் இலங்கைக் கண்காணிப்புக் குழுவினர் தொழிற்பாட்டில் உள்ள பொழுது நடந்துள்ளதுடன் இதில் சம்மந்தப் பட்ட கயவர்கள் மீது எந்த விதமான சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இவ்விடயங்கள் தொடர்பாக தகுந்த தீர்வினை ஏற்படுத்தக் கூடிய திறமையும், ஆளுமையும் கனேடிய அரசிற்கு முழுமையாக இருக்கிறது என்பதை நாம் ஆணித்தரமாக நம்புகின்றோம். உலக சமாதானத்தின் மீதும் தனிமனித உரிமைகள் மீதும் ஆழ்ந்த ஈடுபாட்டினையும் அது சார்ந்த செயல்திட்டங்களையும் அமுல் படுத்தும் கனேடிய அரசானது எம் சார்பில் ஈழத்தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் நடவடிக்கைகளிலும், செயல் திட்டங்களிலும் ஈடுபட வேண்டும் என நாம் வேண்டி நிற்கின்றோம்.
எமது ஈழத்தமிழ் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு குறைந்த பட்ச கோரிக்கைகள் சிலவற்றை கனேடிய அரசுக்கும் சர்வதேசத்திற்கும் முன் வைக்கின்றோம். இக்கோரிக்கைகளை அமுல் படுத்துவதற்கான அழுத்தங்களை கனேடிய அரசும், சர்வதேசமும் இலங்கை அரசுக்குக் கொடுக்க வேண்டும் என்பதனை புலம் பெயர் மாண்வர் சார்பில் நாம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
எமது கோரிக்கைகளாவன:
1) எமது மாணவச் சகோதரிகள் மீது தொடரும் பாலியல் துன்புறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு, அவர்கள் விரும்பும் முழுப்பாதுகாப்பு நடவடிக்கைகளும் வழங்கப்பட வேண்டும்.
2) கல்விச் சாலைகள் சார்ந்திருக்கும் சுற்று வளாகத்தினுள் எந்த ஒரு இராணுவப் பயிற்சி முகாமோ, இராணுவக் காவலரண்களோ, இராணுவ நடமாட்டமோ இருக்கக் கூடாது.
3) தொடர்ந்து மாணவர்களைக் கைது செய்தல், சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்குதல், அவர்களின் தனிமனித சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை ஆகியவற்றை ஒடுக்குவதன் மூலம் அவர்களை ஆழ்ந்த மன உளைச்சலுக்குள்ளாக்கி அவர்களின் திறன்களை அழித்தொழித்தல் ஆகிய நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.
4) ஒரு தனி மனித ஆளுமையை நிர்ணயிக்கும் கல்விக்கு ஊறு விளைவிக்கும் வண்ணம் எந்த ஒரு அரசியல் யாப்புகளோ,அரசியல் திட்டங்களோ,அரசியல் அழுத்தங்களோ செயல்ப்படுத்தப்படக் கூடாது.
5) வடகிழக்குத் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு சர்வதேசத்தின் சார்பில் பொது நபர் ஒருவர் போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவினருள் இடம் பெற வேண்டும்.
மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளாவன ஒரு தனி மனிதனின் மனித உரிமைகளின் அத்தியாவசிய செயல்பாடுகளே என்பதை சர்வதேசம் புரிந்து கொள்ளவேண்டும். இது தவிர, இடம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழ் மாணவனும் மாணவியும் தாயகத்தில் அவதியுறும் தமது சகோதரங்களுக்காய் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறாக தாயக தமிழ் மாணவர்கட்கு உதவும் சர்வதேச தமிழ் மாணவர் சமூகத்துடன் கால்ற்ரன் தமிழ் மாணவர் அமைப்பு இணைந்து நிற்கிறது. இது குறித்து தகுந்த தீர்மானமான பதிலை சர்வதேசத்திடம் நாம் எதிர்பார்க்கும் அதேவேளை, கனேடிய அரசும் சிறந்த வகையில் தமது நகர்வுகளை மேற்கொள்ளும் என நாம் திடமாக நம்புகின்றோம்.</b> "மாணவர் சக்தி, மாபெரும் சக்தி"
¿ýÈ¢: À¾¢×

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>