Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யுத்த நிறுத்தம் அமுலில் உள்ளதா?: கண்காணிப்பு குழு காட்டமான
#1
<b>யுத்த நிறுத்தம் அமுலில் உள்ளதா?: கண்காணிப்பு குழு காட்டமான கேள்வி </b>
[வெள்ளிக்கிழமை, 13 சனவரி 2006, 15:15 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]
சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதா? அப்படியானால் தற்போது இடம்பெற்று வரும் தொடர் படுகொலைகள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் ஆகியவை தொடர்பில் இருதரப்பினதும் பதில்தான் என்ன என்று இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு காட்டமாக கேட்டு அறிக்கை விடுத்திருக்கிறது.


வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் சம்பவத்தை அடுத்து கண்காணிப்புக்குழு விடுத்துள்ள இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தொடரும் தாக்குதல் சம்பவங்கள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியவண்ணமுள்ளன. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் சுமார் 100 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அரைவாசிப்பேர் பொதுமக்களே ஆவர். இந்த நிலை தொடருமேயானால் விரைவில் நாடு யுத்தத்தை எதிர்நோக்க நேரிடும்.

பாதுகாப்பு நடைமுறைகள் என்ற பெயரில் பொதுமக்கள் அரச படையினரால் துன்புறுத்தப்படுகின்றனர். அப்பாவிப் பொதுமக்களை கைது செய்யும் நடைமுறை இயல்பு வாழ்க்கையில் பாரதூரமான இடையூறுகளை ஏற்படுத்துகிறது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி அரசைக் கோருகிறோம்.

கிழக்கில் அரச கட்டுப்பாட்டுப்பகுதியில் இடம்பெற்று வரும் மாற்று ஆயுதக்குழுக்களின் நடவடிக்கை குறித்து இங்கு அவசியம் குறிப்பிட்டேயாக வேண்டும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்ததின் பிரகாரம் ஆயுதங்கள் களையப்பட வேண்டிய இந்த மாற்றுப்படைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் அரசு தனது பொறுப்பை செவ்வனே நிறைவேற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

சம்பவங்கள் தொடர்பில் இருதரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சுமத்துவதை விடுத்து அவை தொடர்பில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து சிந்திக்க வேண்டும். சொல்லிலும் விட செயலில் கவனம் செலுத்துவதன் மூலம் அமைதியை நோக்கிய நம்பிக்கை தரக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நாடு மீண்டும் யுத்தத்துக்கு திரும்பாமல் பாதுகாக்க வேண்டியது இரு தரப்பினரதும் பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)