01-13-2006, 01:20 PM
உலக மகா வல்லாதிக்கத்திடம் நீதி கோரும் தமிழர் தரப்பு
"வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது' போல நொந்து போன தமிழர் மனங்களை மேலும் நோகடித்திருக்கின்றார் கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர்.
இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் நியாயம் கூறு வதாக நினைத்துக் கொண்டு, ஒரு தலைப்பட்சமாகக் கருத்து வெளியிட்டதன் மூலம் அமைதி நிலைக்கு மேலும் ஆப்பு வைத்திருக்கிறார் அவர்.
"தீண்டத் தகாதவர்கள்' ஆகப் புலிகளைக் கருதிக் கொண்டு, வெறுத்து ஒதுக்கி ஒதுங்கி நடக்கும் அமெரிக்கா, அதன் மூலம் புலிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களை ஒதுக்கியது மட்டுமல்லாமல் நீதியையும், நியாயத்தையும் கூட அடியோடு ஒதுக்கியிருக்கின்றது.
இலங்கையில் யுத்தநிறுத்தம் இன்று கேள்விக்குறியாகி யுள்ளது என்பது அப்பட்டமான உண்மை. அதில் சந்தேகமே இல்லை. ஆனால், யாரால் அந்த நிலைமை ஏற்பட்டது என் பதே இன்றைய கேள்வி.
இலங்கை அரசும்,அதன் படைகளும் அவற்றின் புலனாய் வுப் பிரிவுகளும் ஏதோ பௌத்த சீலர்கள் போலவும், ஆக தமிழர் தரப்பே விடுதலைப் புலிகளே வன்முறைகளையும் யுத்தத்தையும் விரும்புகின்ற காட்டுமிராண்டிகள் போலவும் புதிய தத்துவம் உரைத்திருக்கிறார் "சர்வதேசப் பொலீஸ் காரனாகிய' அமெரிக்காவின் இலங்கைத் தூதுவர்.
இப்போது நடைமுறையில் இருக்கும் யுத்தநிறுத்தம் முறிந்து விடக்கூடாது என்பதற்காக அதிகளவில் "கரிசனை' காட்டி, அதனால் புலிகள் மீது பாய்ந்திருக்கின்றார் அவர். வெடிக்கப் போகும் யுத்தத்தின் பேரழிவைத் தவிர்க்க வேண்டும் என்ற ஆதங்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
நல்லது. ஏற்கனவே மோசமான யுத்தம் இந்த நாட்டில் நிகழ்ந்துகொண்டிருந்தபோது, பேரழிவுகளை மக்கள் சந் தித்து, பெருமளவு உயிரும், உடைமைகளும் அழிந்து கொண் டிருந்தபோது தமிழர் தரப்பின் போராட்ட சக்திகளாகிய விடுதலைப் புலிகள் ஒரு தலைப்பட்சமாகப் பலதடவைகள் யுத்தநிறுத்தத்தை அறிவித்து, அமைதி வழியில் தீர்வு காண் பதற்கு வாய்ப்பளித்து, சமாதான சமிக்ஞை காட்டி நின்றார் களே, அப்போதெல்லாம் அந்த அழைப்புகளை இலங்கை அர சுத் தரப்பு நிராகரித்து யுத்த சன்னதம் கொண்டு நின்றதே, அவ்வேளையில் இன்று நியாயம் விளக்கும் உங்களின் கரி சனை எங்கே ஜயா போனது, அமெரிக்கத் தூதுவரே!...?
அன்று, இராணுவப் போரியல் வல்லமையில் தான் விஞ்சி நிற்பதாக நினைத்துக் கொண்டு இலங்கை அரசு, தமிழர் தேசம் மீது கொடூரப் போரைத் தொடுத்திருந்த வேளையில் இலங்கை அரசுத் தலைமையைப்போல நீங்களும் உங்கள் அமெரிக்க அரசும் கூட புலிகள் பலவீனப்பட்டு விட்டார்கள், அதனால்தான் ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தங் களை அறிவிக்கின்றார்கள், எனவே இலங்கை அரசு யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தி புலிகளை அடக்கட்டும் என்று எண்ணி னீர்கள். அதனால்தான் கொடூர யுத்தம் நடந்த அந்த வேளை யில் யுத்த நிறுத்தத்திற்குக் கிடைத்த வாய்பை சரியாகப் பயன்படுத்தும்படி இப்போது யுத்த நிறுத்தத்தைப் பேணும் அவாவில் புலிகளைத் தாக்கிப் பகிரங்கமாகக் குரல் கொடுத்தமை போன்று அப்போது யுத்தநிறுத்தத்துக்குப் போகும்படி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து, பகிரங்க அறிவிப்புகளை நீங்கள் விடுக்கவில்லை.
இன்று நிலைமை அப்படியல்ல. இலங்கைத் தீவில் இரா ணுவ போரியல் வல்லமைகளின் கள நிலைமைகள் உங்களுக் குப் புரிகின்றது. அதனால், எதிர்காலத்தில் நொந்து போகப் போகின்ற தரப்பின் கையைத் தூக்கிவிடத் துடிக்கின்றீர்கள் நீங்கள் என்பதும் புரிகின்றது.
ஜயா அமெரிக்கத் தூதரே! பிரஸ்ஸல்ஸில் நடந்த உதவும் நாடுகளின் இணைத்தலைமைகளின் மாநாடு குறித்து உரைத் திருக்கின்றீர்கள். அந்த மாநாட்டின் முடிவில் நீங்களும் சேர்ந்து விடுத்த கூட்டறிவிப்பை ஒருதடவை பாருங்கள். இன்று யுத்தநிறுத்தத்தையே குழப்பியடிக்கக்கூடிய நிலை மையை ஏற்படுத்தியிருக்கும் வன்முறைகளுக்கான காரணம் குறித்து நீங்களே அதில் குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.
இலங்கையில் அமைதி நிலைமை மோசமடைந்து வருவ தற்கு இராணுவத் துணைப்படைகளின் நடவடிக்கைகளும் காரணம் என்று மூன்று வாரங்களுக்கு முன்னர் நீங்களே அந்த அறிக்கையில் ஒப்புக் கொண்டிருந்தீர்கள்.
ஆனால், இப்போதோ அமைதி நிலைமை மோசமடைந்து யுத்தம் வெடிக்குமானால் புலிகளுக்கு எதிராக அமெரிக்க ஆதர வுக்கரம் நீளும் என்று கடும்தொனி எச்சரிக்கையை விடுக் கின்றீர்கள். இந்த எச்சரிக்கை மூலம் ஒட்டு மொத்தத்தில் நீங்கள் சாதித்திருப்பது என்ன?
சம்பந்தப்பட்ட தரப்புகளில் ஒன்றை நேரடியாகக் கடிந்த தன் மூலம் மற்றத் தரப்பை உற்சாகப்படுத்தி, அதன் போர் நிறுத்த மீறல்களை ஊக்குவிக்கும் பணியையும், அதன் மூலம் போர்நிறுத்தம் மேலும் நலிவடையும் நிலையையுமே நீங்கள் ஏற்படுத்தியிருக்கின்றீர்கள்.
ஐயா, இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் உங்கள் வல்லா திக்க நாடு இழைத்த மாபெரும் தவறாக ஈராக் மீதான படை யெடுப்பை உலகம் உங்களுக்கு எதிராகச் சுட்டிக்காட்டி நிற் கின்றது. மனித குலத்துக்குப் பேரழிவு தரும் ஆயுதங்களை ஈராக் தயாரித்து வைத்திருக்கின்றது என்ற பூச்சாண்டியை உலகுக்குக் காட்டிக் கொண்டு இறைமையுள்ள ஒரு நாட்டை ஆக்கிரமித்தீர்கள். இன்று நீங்களே உங்களின் புலனாய்வுத் தகவல்களின் முழுத்தவறை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் இழிநிலைக்கு வந்திருக்கின்றீர்கள்.
அதேபோல, இலங்கைத் தீவிலும் தனித் தேசிய இனமான ஈழத் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை அநியாய மான முறையில் குறைகூறி அநீதி இழைக்காதீர்கள்.
இந்த மண்ணில் இடம்பெறும் ஒரு நியாய வேள்வியை ஓர் அரசுக்கு இன்னொரு அரசு உதவும் சர்வதேசக் கோட் பாட்டுக்குள் பொருத்திப் பார்த்து குழப்பி விடாதீர்கள்.
நியாயமான உரிமைகளும், விடுதலையும் வேண்டி நிற் கும் தனித்துவமான ஓரினம் உலக மகா வல்லாதிக்கத்திடம் நீதி கோரி முன்வைக்கும் வேண்டுகோள் இது
உதயன்