Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜோக்குகள், 2006
#1
""எந்தவிதமான ஆத்திரமூட்டல் நடவடிக் கைகளாலும் தடம்புரளாத நாம், சமாதானம் மற்றும் ஐக்கியத்தை நோக்கிப் பயணிப்பதற் கான திடசங்கற்பத்தை இந்தத் தைப்பொங்கல் தினத்தில் எடுத்துக் கொள்வோம்.''
இவ்வாறு தமது தைப்பொங்கல் செய்தி யில் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
அவர் தைப்பொங்கலை ஒட்டி விடுத்த செய்தி வருமாறு :
நான் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின் உதயமாகும் முதலாவது தைப்பொங்கலின் போது உங்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். "தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற முது மொழிக்கமைய இந்தத் தை மாதத்தை ஒரு அதிஷ்ட மாதமாக நீங்கள் கருதுகின்றீர்கள்.
உண்மையிலேயே இந்தத் தை மாதத்துடன் ஆரம்பிக்கின்ற வருடம் உங்களுக்கு நன்மை தரும் அதிஷ்ட வருடமாக அமையக்கூடிய தாக இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்தவிதமான ஆத்திரமூட்டல் நடவடிக்கை களாலும் தடம்புரளாத நாம் சமாதானம் மற்றும் ஐக்கியத்தை நோக்கிப் பயணிப்பதற்கான திட சங்கற்பத்தை இத் தைப்பொங்கல் தினத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உரிய நேரத்தில் மழை பொழிந்து வயல் கள் செழிப்பதற்கு உதவியதற்காக எங்கள் மூதாதையர்கள் சூரிய தேவனுக்கும், கால்நடை களுக்கும் தைப்பொங்கல் தினத்தன்று நன்றி செலுத்துவது போல, சமாதானத்துக்காகப் பொறுமை காத்துச் செயற்படும் சகலருக்கும் நாம் நன்றி செலுத்த வேண்டும். ஏனென்றால், சமாதானம் நிலைபெறும் பட்சத்திலேயே விவசாயிகளைப் போல அனைவரும் செழிப் பையும், சௌபாக்கியத்தையும் அடைய முடி யும். யுத்தத்தினால் அழிந்துபோன அனைத்தையும் மீண்டும் நாங்கள் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு நாங்கள் கடமைப்பட் டுள்ளோம்.
வாக்குறுதிகளை உடன்படிக்கைகளுள் உள்ளடக்குவதோடு நிற்காது அவற்றை நடை முறைப்படுத்துவதையே எங்கள் கொள்கை யாக நாங்கள் மேற்கொள்ளவேண்டும் என் பதை உங்களுக்குக் கூற விரும்புகிறேன். எங்கள் அனைவருக்குமிடையே அந்நி யோன்யமான புரிந்துணர்வு நிலவும் பட்சத்தி லேயே உடன்படிக்கைகளைப் பாதுகாக்க முடி யும். இந்தத் தைப்பொங்கல் தினத்தில் ஆரம் பிக்கின்ற வருடம் உங்கள் மொழியைப் பொறுத்தவரையில் நீங்கள் அனுபவிக்கின்ற இடர்கள் அனைத்தும் நீங்கும் வருடமாக அமையும். சிங்கள மொழி மூலம் நிர்வாகம் செய்யப்படுகின்ற பிரதேசங்களில் தமிழ் மொழி மாத்திரம் தெரிந்தவர்கள் முகங்கொடுக்கின்ற இடர்களை நீக்கும் வகையில் அரசகரும மொழிகள் ஆணைக்குழு செய்த சிபார்சுகளை விரைவாக நடைமுறைப்படுத்தி இனங்களுக்கிடையே புரிந்துணர்வுகளை வலுப்படுத்துவோம். எங்களின் இந்த எதிர்பார்ப்பை நீண்ட காலத்துக்குத் தள்ளிப்போட மாட்டோம். அடுத்த தைப்பெங்கல் தினத்தின்போது இப்போதையதிலும் பார்க்கக் கூடுதலான சௌபாக்கிய பொங்கலை நீங்கள் அனுபவிக்க முடியும் என்ற நம்பிக்கையுடனேயே இத்தைப்பொங்கல் தினத்தில் இவற்றை நான் கூறுகின்றேன்.
தைப்பொங்கல் தினத்தில் பொங்கல் பானையில் இடப்படும் பால் கிழக்குப் பக்கமாகப் பொங்கிச் சரிவது அதிஷ்டமானது என்ற நம்பிக்கை உங்களிடம் இருப்பது எனக்குத் தெரியும். அதன்படி, உங்கள் அனைவரினதும் வீடுகளில் பொங்கல் பானையில் இடப்படும் பால் கிழக்குப் பக்கமாகப் பொங்கிச் சரிய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் வளம் நிறைந்ததாக அமைய எனது வாழ்த்துக்கள் என்று உள்ளது.
enrum anpudan
Reply
#2
இன, மத, மொழி பேதங்களை மறந்து ஒற்றுமையாகக் கைகோர்த்துச் செயற்படுவ தன் மூலம் நிரந்தர சமாதானத்தை உருவாக்க முடியும்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜென ரல் சரத் பொன்சேகா விடுத்திருக்கும் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
பலாலி படைத்தலைமையகம் இந்த வாழ்த்துச் செய்தியை நேற்றிரவு ஊடகங்க ளுக்கு அனுப்பிவைத்தது.
இராணுவத் தளபதியின் செய்தியில்
மலர்ந்துள்ள 2006ஆம் ஆண்டின் ஆரம் பத்திலேயே உலகமெங்கும் பரந்துவாழும் இந்து மக்கள் மிகவும் பயபக்தியுடன் அனுஷ் டிக்கும் தைப்பொங்கல் தினத்தையொட்டி அனைவருக்கும் வாழ்த்துச் செய்தியொன் றைத் தெரிவிப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன்.
இலங்கையர்களாகிய நாம் அனைவரும் இனம், மதம், மொழி ஆகியவற்றினால் வேறு பட்டிருந்தாலும் கூட எங்கள் அனைவரினதும் எண்ணங்களும் எதிர்பார்ப்புக்களும் ஒன்றா கும். இன்று நீங்கள் அனுஷ்டிக்கும் சூரியபக வான் எங்களுக்கும் மிக முக்கியமானதா கும். அவ்வாறே ஒரே சூரிய ஒளியின் கீழ் வாழும் நமக்கும் அவரது பார்வையும் அரு ளும் ஒரேவிதத்தில்தான் கிடைக்கின்றன. எனவே, நம்மில் எவ்வித வேற்றுமைகளும் இருக்கக்கூடாது. இவ்வாறான முக்கியமான தினத்தில் நாம் அனைவரும் இன, மத, மொழி வேறுபாடுகளின்றி பேதங்களை மறந்து ஒற்றுமையாகக் கைகோர்த்து சேர்ந்து வாழ்வதன் மூலம் இலங்கை வாசிகளான நாம் நிரந்தர சமாதானத்தை உருவாக்கமுடி யும். இதற்காக நாம் அனைவரும் இந்தத் தினத்தில் பிரார்த்தனை செய்வோம்.
உங்களது எதிர்கால வாழ்வில் சகல எதிர் பார்ப்புகளும் நிறைவேறி சாந்தியும், சமாதா னத்துடனும், சௌபாக்கியத்துடனும் வாழ வும், கமத்தொழில் வெற்றிகரமாக அமைய வும் எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.

---------------
www.uthayan.com
enrum anpudan
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)