Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாதுகாப்பில் விழிப்புடன் இருக்குமாறு புலிகள் அறிவுறுத்தல்
#1
<b>பாதுகாப்பில் விழிப்புடன் இருக்குமாறு விடுதலைப் புலிகள் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.</b>



<b>இராணுவத்தின் கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதையடுத்து தமிழ் மக்களையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரையும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள், எந்நிலையிலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தோன்றியிருப்பதால் பாதுகாப்பில் கவனம் செலுத்தும்படியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கோரியுள்ளனர்.

பளையிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட நிர்வாக சேவை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வன் கலந்துகொண்ட இந்த சந்திப்பில் யாழ். குடாநாட்டில் எழுந்துள்ள நெருக்கடிநிலை குறித்தே அதிகம் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக இளைஞர், யுவதிகளின் பாதுகாப்பு குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மிகவும் விழிப்புடன் செயற்படுவது குறித்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி சந்தித்து மக்களின் குறைபாடுகளை ஆராய்ந்து அவர்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது </b>


நன்றி:வீரகேசரி
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)