01-15-2006, 12:09 PM
<b>சொல்ஹெய்மின் வருகை யுத்தத்தை தடுக்குமா?
* தினமும் நடைபெறும் சம்பவங்களானது முழு அளவிலான போரை நோக்கியே செல்கின்றது
நாட்டில் முழு அளவிலான போர் இதுவரை வெடிக்காத போதிலும், பாரிய மோதலைத் தோன்றுவிப்பதற்கான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தினமும் நடைபெறும் சம்பவங்கள் முழு அளவிலான போரை நோக்கியே செல்கின்றன.
புதிய ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷவும், புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவும் பதவியேற்றது முதல் நிலைமை தலைகீழாகிவிட்டது. நிழல் யுத்தம் உச்சமடைந்து நிஜயுத்தமாகிக் கொண்டிருக்கிறது. இதனைத் தடுக்க நோர்வே அமைச்சரும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான எரிக் சொல்ஹெய்மின் வருகை உதவுமா என்பதுதான் மிகப்பெரும் கேள்வியாகும்.
தற்போதைய சூழ்நிலையில் தினமும் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. பொதுமக்களும் படையினரும் கொல்லப்படுகின்றனர். ஊடுருவல் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. பாரிய மோதலொன்றுக்கான மிக மோசமான தாக்குதல்களெல்லாம் இடம் பெற்றுவிட்டதால் முழு அளவிலான போர் எப்போது வெடிக்கப் போகின்றது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுப்பப்படுகிறது.
படையினர் மீதான தாக்குதல்களை மக்கள் படையே மேற்கொள்வதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர். ஆனால், மக்கள் படையென்ற பெயரில் புலிகளே இந்தத் தாக்குதல்களை நடத்தி வருவதாக படைத் தரப்பு கூறுகின்றது.
கிழக்கில் கருணா குழுவென்ற பெயரில் இராணுவமே தங்கள் மீது தாக்குதலை நடத்துவதாகப் புலிகள் கூறிவந்த போதெல்லாம் அதனை முற்றாக மறுத்து வந்த இராணுவம், தற்போது மக்கள் படையே படையினர் மீது தாக்குதல் நடத்துவதாகப் புலிகள் கூறும்போது அதனை ஏற்க மறுக்கிறது.
கிழக்கில் தொடங்கிய நிழல் யுத்தம் தற்போது வடக்கில் முழு அளவில் மோதலாகிவிட்டது. கிளேமோர் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதுடன் துப்பாக்கிச் சூடுகளும் கைக்குண்டுத் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இவற்றுக்கெல்லாம் பதிலடியாக படையினர் அப்பாவிப் பொது மக்களையே தாக்குகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் படையினரின் தாக்குதல்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் பாரிய இராணுவ நகர்வுகளின் போதே மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறினர். ஆனால், இன்றோ யுத்த நிறுத்தம் அமுலிலிருக்கையில் வடக்கிலிருந்து தினமும் பெருமளவு மக்கள் பாதுகாப்புத் தேடி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்கின்றனர். மீண்டும் தமிழகம் நோக்கியும் அகதிகள் செல்லத் தொடங்கிவிட்டனர்.
இந்தச் சூழ்நிலையிலேயே எரிக் சொல்ஹெய்மின் வருகைக்காக அரசு காத்திருக்கிறது. ஆனாலும், அவரது வருகை சமாதானத்தை ஏற்படுத்துமா அல்லது முழு அளவில் போரைத் தொடக்கிவிடுமா என்ற அச்சமும் அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் மிக மோசமானதொரு உறவு நிலையே உள்ளது. நிழல் யுத்தமும் பொதுக் கட்டமைப்பு நிராகரிப்பும் அரசுக்கும், புலிகளுக்கும் இடையிலான உறவை மிக மோசமாகப் பாதித்த அதேநேரம், நோர்வே அனுசரணையாளர்களுக்கும், புதிய அரசுக்குமிடையிலான உறவு நிலையும் மிகவும் மோசமடைந்துள்ளது.
மோதலில் ஈடுபடும் இரு தரப்புகளுக்கும் இடையே சமரச முயற்சியில் ஈடுபடும் மூன்றாந் தரப்பின் நெருங்கிய உறவு நிலையே சுமுகமானதொரு சூழ்நிலையைப் பேண உதவும். நீண்டகாலப் போரில் ஈடுபட்ட இரு தரப்பும் மிகச் சிறியகால சமாதான முயற்சிகள் மூலம் நெருக்கமாகிவிடக்கூடிய சாத்தியமில்லை.
ஆனாலும், மோதலில் ஈடுபட்டவர்களின் வேண்டுகோளின் பேரில் சமரச முயற்சிக்கு வந்த அனுசரணையாளருடன், மோதலில் ஈடுபட்டவர்கள் சிறப்பான உறவைக் கொண்டிருக்க வேண்டும். அதுதான் சமரச முயற்சிக்கு மிக அவசியம்.
சம்பந்தப்பட்ட இரு தரப்பினரதும் வேண்டுகோளின் பேரில்தான் சமரச முயற்சிக்கு நோர்வே வந்தது. நோர்வேயை அழைத்த இரு தரப்பும் கூறினால் மட்டுமே அனுசரணை முயற்சியிலிருந்து நோர்வே வெளியேறும். ஒரு தரப்பின் வெறுப்புக்காக நோர்வே இங்கிருந்து வெளியேறுமென எதிர்பார்க்க முடியாது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையில் ஆட்சிமாற்றங்கள் அடிக்கடி ஏற்படுவதால் அரசு தரப்பும் அடிக்கடி மாறுகிறது. ஆனால், புலிகள் தரப்பில் மாற்றமெதுவுமில்லை. எனினும் அரச தரப்பில் மாற்றங்கள் வரும்போது அவர்கள் அனுசரணையாளர்களையும் தங்கள் விருப்பு வெறுப்புக்கேற்ப மாற்ற முயல்வதால் அரசு தரப்புக்கும், அனுசரணையாளர்களுக்கும் இடையிலான உறவு வலுவற்றதாயுள்ளது.
அதேநேரம், தமிழர் தரப்பு நியாயங்கள் சமாதானப் பேச்சுகளின் போது முன்னிலைப்படுத்தப்பட்டு அதற்கான நீதியான தீர்வு வலியுறுத்தப்படும்போது உரிய தீர்வை முன்வைக்குமாறு அனுசரணையாளர்கள் அழுத்தம் கொடுப்பர். ஆனாலும், நியாயமான தீர்வுக்குச் செல்லாது அதனைத்தட்டிக் கழிக்க வேண்டுமானால் அனுசரணையாளர்களின் அழுத்தத்திலிருந்து விடுபடவேண்டிய தேவை அரசுக்கு ஏற்படும்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் அனுசரணையாளர்களை மாற்றி நியாயமான தீர்வுக்கு அழுத்தம் கொடுக்காது, இலங்கையில் சமஷ்டி முறையிலான தீர்வு ஏற்பட்டால் அது தங்களது நாட்டில் பிரச்சினையைத் தோற்றுவித்து விடுமெனக் கருதி இங்கு நியாயமான தீர்வு எட்டப்படுவதை விரும்பாத ஒரு நாட்டை அந்த இடத்தில் அனுசரணையாளராக்கி பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விடவே இலங்கை அரசு முயல்கிறது.
தற்போதைய நிலையில் இலங்கையின் புதிய அரசுக்கும் நோர்வே அனுசரணையாளர்களுக்கும் இடையில் மோசமான உறவே நிலவுகிறது. சில அழுத்தங்களால் தான், அனுசரணைப் பணியைத் தொடருமாறு நோர்வேயை புதிய ஜனாதிபதி மகிந்த அழைத்துள்ளார். இவ்விருதரப்புக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பாரிய விரிசல் தற்போதைய மோதல் நிலைக்கு முடிவு கட்ட உதவாதென்றே கருதப்படுகிறது.
நாட்டில் மீண்டும் பெரும் போர் வெடிப்பதைத் தடுக்க வேண்டுமானால் அரசுக்கும் புலிகளுக்கும் இடையே உடனடியாக சந்திப்பொன்று நடைபெறவேண்டும். அந்தச் சந்திப்பானது போர்நிறுத்த உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்துவதற்குரியதாயிருக்க வேண்டும். ஆனாலும், பேச்சுகள் ஆரம்பமாவதற்கு இலங்கை அரசின் நிலைப்பாடு பெரும் தடங்கலாயுள்ளது.
அரசுக்கும் புலிகளுக்குமிடையே மோசமான உறவு நிலை, அரசுக்கும் நோர்வேக்குமிடையே மிக மோசமான உறவு நிலை, போர்நிறுத்த உடன்பாட்டை அமுல்படுத்தும் பேச்சுகளை விடுத்து போர்நிறுத்த உடன்பாட்டில் திருத்தங்களை செய்யும் பேச்சுகளே நடைபெற வேண்டுமென்ற அரசின் நிலைப்பாடு, பேச்சுகளை ஐரோப்பிய நாடுகளில் நடத்துவதற்கு சம்மதிக்காது ஆசிய நாடுகளிலேயே நடத்த வேண்டுமென்ற அரசின் நிலைப்பாடு என்பவையே பேச்சுகள் மீண்டும் ஆரம்பமாகுமா என்ற பெருங் கேள்வியை எழுப்பியுள்ளன.
அரசுக்கும் புலிகளுக்குமான உறவு நிலையையும் அரசுக்கும் அனுசரணையாளர்களுக்குமிடையிலான உறவு நிலையையும் ஒரு புறம் வைத்தாலும் போர்நிறுத்த உடன்பாட்டில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்பதிலும் பேச்சுகளை ஆசிய நாட்டிலேயே நடத்த வேண்டுமென்பதிலும் கடுமையாகவிருக்கும் இலங்கை அரசின் நிலைப்பாட்டில் தளர்வு ஏற்படுமா என்பது பெரும் கேள்வியாகும்.
நாடு மிக மோசமான நிலையிலிருக்கையிலும் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் மிக முக்கியமான சந்திப்புக்காக வரவுள்ள சூழ்நிலையிலும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லன் ஸ்ரெட்டின் கருத்து, பேச்சுக்கான வாய்ப்பை பெருமளவில் குறைத்து விட்டதோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
சமாதான முயற்சிகளைக் கைவிட்டு புலிகள் மீண்டும் போருக்குச் செல்வார்களேயானால் அதற்காக அவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்குமெனவும், புலிகள் எதிர்பாராதளவுக்கு மிகவும் வலிமைமிக்கதொரு இலங்கைப் படைகளையே அவர்கள் சந்திக்க வேண்டியிருக்குமெனவும் எச்சரித்ததன் மூலம், போருக்குச் செல்வதன் மூலம் புலிகளைத் தோற்கடிக்க அமெரிக்கா முழு உதவியையும் வழங்குமென்றதொரு வலுவான உணர்வை இலங்கைக்கு ஏற்படுத்தி விட்டது.
இது சமாதானப் பேச்சுக்கான வாய்ப்பை பெரிதும் குழப்பி விடக் கூடியதென்பதை அமெரிக்கா உணரத் தவறிவிட்டதா அல்லது, மிக மோசமடைந்து வரும் இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க முயலும் நோர்வேக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் முயற்சியா என்பது தெரியவில்லை.
வடக்கு-கிழக்கில் தற்போது நடைபெறும் தாக்குதல் சம்பவங்களில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்படுவதை அமெரிக்கா அறியத் தவறிவிட்டது. படையினர் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக அப்பாவிப் பொதுமக்களே தினமும் படையினரால் கொல்லப்படுகின்றனர். பல்கலைக்கழக சமூகம் உட்பட அப்பாவிகளே தினமும் இலக்கு வைத்து தாக்கப்படுகின்றனர்.
படையினர் மீதான தாக்குதல்களை பெரிதுபடுத்திதும் சிங்கள, ஆங்கில ஊடகங்கள், அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு புலிச் சாயம் பூசுகின்றன. திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும் புலிகளே எனக்கூற இன்றும் இந்த சிங்கள, ஆங்கில ஊடகங்கள் முயல்கின்றன. அப்பாவித் தமிழர்களையெல்லாம் படையினர் கொன்று குவிக்கும் போது, அவர்களையெல்லாம் புலிகளென்றே இவர்கள் கூறுகின்றனர்.
யுத்தநிறுத்த காலத்தில் கூட பொதுமக்கள் உயிர் காக்கத் தப்பியோடுவது பற்றி எந்தவொரு ஊடகமும் தெரிவிக்க முன்வருவதில்லை. நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் பற்றி சிங்கள, ஆங்கில ஊடகங்கள் ஒருவிதமாகவும் தமிழ் ஊடகங்கள் வேறுவிதமாகவும் செய்திகளைப் பிரசுரிக்கும் நிலைமையே இந்த நாட்டில் நிலவுகிறது. இந்த உண்மைகளையெல்லாம் அமெரிக்கா உணரத் தவறிவிட்டது.
இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஆழ ஊடுருவும் படையணிகள் ஊடுருவித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளது. வன்னியிலும் திருகோணமலை தம்பலகாமத்திலும் புலிகளின் பகுதிக்குள் ஆழ ஊடுருவிச் சென்ற படையணிகள் தாக்கியதில் மூன்று புலிகள் கொல்லப்பட்டனர்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலை கடவானைப் பகுதியில் ஊடுருவிச் சென்ற இராணுவ அணியொன்று தங்களது முகாமொன்றின் மீது பலத்த தாக்குதலை நடத்தியதில் பல போராளிகள் காணாமல் போய்விட்டதாகப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரிவித்துள்ளார். இது மிக மோசமானதொரு தாக்குதலெனவும் முகாமொன்றை தாக்குமளவிற்கு படையினர் ஊடுருவி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறுசிறு தாக்குல்கள், கைக்குண்டு வீச்சுகள், துப்பாக்கிச் சூடுகள், கிளேமோர் தாக்குதல்கள், ஆழ ஊடுருவித் தாக்குதல் என்ற நிலைமைகள் மாறி புலிகளின் பகுதிக்குள் பெருமளவில் ஊடுருவி அவர்களது முகாமை தாக்கியழிக்கும் நிலைக்கு இன்று நிலைமை சென்றுவிட்டதால், தாக்குதல் பதில் தாக்குதலென பெரும் மோதல் வெடிக்கும் நிலைமை தோன்றிவிட்டது.
கடற்படையின் டோரா படகை திருமலைக் கடலில் புலிகள் மூழ்கடித்துவிட்டதாக அரசும் படைத் தரப்பும் குற்றஞ்சாட்டினாலும் அதனை முற்றாக மறுக்கும் எழிலன், கிழக்கில் கடல் வலயத்தடையை அமுல்படுத்துவதற்காக படையினரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கதையே டோரா மீதான தாக்குதலென கூறியுள்ளார்.
திருமலை துறைமுகத்திற்கு சமீபமாக இந்த டோரா மீது புலிகளின் கரும்புலிப் படகே தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக படைத்தரப்பு கூறுகிறது. இந்தச் சம்பவத்தில் சிதறிய படகின் சிதைவுகளெதுவுமே இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காணாமல் போனதாகக் கூறப்படும் 13 கடற்படையினரும் உயிரிழந்திருந்தால் அவர்களது சடலங்கள் எங்கே என்ற கேள்வியும் எழுகிறது.
டோராவிலிருந்து இரு கடற்படையினர் சிறு சிறு காயங்களுடன் தப்பினார்களென்றால் ஏனைய கடற்படையினரின் சடலங்கள் சின்னாபின்னமாகிப் போகக்கூடிய வாய்ப்பில்லை. ஆனாலும், அவர்களது சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாததுடன் சிதறிய டோராவின் எதுவித சிதைவையும் கூட கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் உண்மையிலேயே அங்கு என்ன நடந்ததென்ற கேள்வி போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில்தான், ஆசிய நாடொன்றை தவிர வேறு எங்கும் பேச்சுகளை நடத்தக்கூடாதென ஜே.வி.பி.யும், ஜாதிக ஹெல உறுமயவும் வலியுறுத்தியுள்ளன. இவ்விரு கட்சிகளினதும் பிடியில்தான் தற்போதைய அரசு உள்ளதால் இவர்களது அழுத்தத்தையும் மீறி ஜனாதிபதி மகிந்தவால் ஆசியாவிலிருந்து ஐரோப்பா செல்ல முடியாது. இதனால் பேச்சுக்கான வாய்ப்பும் உடனடியாக இல்லாது போய்விடப் போகிறது.
எரிக் சொல்ஹெய்மும் இலங்கை வரும்போது முழு அளவிலானதொரு போர்ச் சூழ்நிலையே இருக்குமே தவிர, சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிக்கக் கூடியதொரு சூழ்நிலை இருக்கமாட்டாதென்பது இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் மட்டுமல்லாது, நோர்வேக்கும் நன்கு தெரிந்திருக்கும்.
இதனால் எரிக் சொல்ஹெய்மின் வருகையின் மூலம் முழு அளவிலான போருக்கான திகதியை நிர்ணயித்து விடலாமென்ற ஆபத்தான நிலையுமுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சமாதானப் பேச்சுக்கான புறச்சூழ்நிலை அடியோடு கெட்டுவிட்டது. இலங்கையில் போர்நிறுத்தமென்று ஒன்று அமுலிலிருக்கிறதா என போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவே கேள்வியெழுப்புமளவிற்கு புறச்சூழ்நிலை இல்லாது பெரும் போர் வெடிக்கும் சூழ்நிலை தோன்றிவிட்டது.
சொல்ஹெய்ம் இரு தரப்பையும் சந்திக்க இன்னும் ஒருவாரமிருப்பதால் நாட்டில் அடுத்து என்ன நிகழப் போகின்றது என்பதை பெரும்பாலும் இந்த வாரம் நிர்ணயித்துவிடும். எனவே, சொல்ஹெய்மினது இலங்கை விஜயம் தோல்வியடைந்தால்....?</b>
http://www.thinakural.com

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>