Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போரை முன்னெடுக்க மகிந்தராஜபக்ச திட்டம்
#1
ஞாயிறு 15-01-2006 20:31 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்]

பயங்கவாதத்திற்கான ஒழிப்புப் போர் என்ற தலைப்பில் போரை முன்னெடுக்க மகிந்தராஜபக்ச திட்டம்.
தமிழர்களுடைய தேசிய விடுதலைப் போராட்டத்தை வேரோடு சாய்க சிறீலங்கா அரசும், சிங்கள பேரினவாத சக்திகளும் சமாதானத்திற்கா போர் எனக் கூறிக்கொண்டு இருவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் இனிவரும் காலத்தில் பயங்கவாதத்திற்கான ஒழிப்புப் போர் என்ற தலைப்பில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கு சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.

இதன் அடிப்படையிலேயே சர்சதேச நாடுகளின் ஆதரவைப் பெற்று தமிழீழ விடுதலைப் புலிகளை மீது யுத்தம் ஒன்றை வலிந்து முன்னெடுக்க ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக ஜேபிவி கட்சியின் பொறுப்பு வாய்ந்த நபர் கொழும்பு ஊடகவிலாளர் ஒருவருடன் உரையாடியுள்ளார்.

குறித்த நபர் ஊடகவியாளருக்கு மேலும் தெரிவிக்கையில்…

ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச படையினர் எக்காரணத்தைக் கொண்டும் விடுதலைப் புலிகள் மீது போரை வலிந்து முன்னெடுக்கக்கூடாது என்றும் மார்ச் மாதத்திற்கு பின்னர் அதற்கான கட்டளைகள் பிறப்பிக்கப்படும் முப்படைத் தளபதிகளுக்கும் அறிவித்துள்ளார்.

தற்பொழுது விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசாங்கத்திற்குமான ஆட்டிலறி பீரங்கிகளுக்கான சமவலு குறைந்து காணப்படுவதால் போரை முன்னெடுக்க முடியாது என்றும் மூன்று மாதங்களுக்குள் ஆட்டிலறி பீரங்கிகள் இலங்கையை வந்து சேர்ந்துவிடும் என்றும் அதற்குப் பிற்பாடு பயங்கரவாதத்திற்கான ஒழிப்பு போர் என்ற தலைப்பில் போரை முன்னெடுக்க ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக ஜேவிபி முக்கிய புள்ளி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு போரை முன்னெடுக்கும் போது சர்வதேச ரீதியிலும் ஐரோப்பிய ரீதியிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை இலகுவில் கொண்டுவரவும் மகிந்தராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என ஜேவிபி கட்சியின் பொறுப்பு வாய்ந்த நபர் தெரிவித்துள்ளார்.



Pathivu
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)