Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முழு நாட்டையுமே புலனாய்வுப் பிரிவாக மாற்ற வேண்டும்
#1
<b>நாட்டில் இருவாரம் விடுமுறை வழங்கி புலிகளின் அடாவடித்தனங்களுக்கு யுத்தம் மூலம் தீர்வு காண்க இனப்பற்றுக்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு கோரிக்கை
நாட்டில் இருவார கால கட்டாய விடுமுறையை அமுல்படுத்தி புலிகளின் அடாவடித்தனத்திற்கு யுத்தத்தின் மூலம் முடிவு கட்டுங்கள் என்று இனப்பற்றுக் கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.மேற்கத்தேய ஊடகங்களும் சமாதான வியாபாரிகளும் எவ்வளவுதான் ஊதிப் பெரிதுபடுத்தினாலும் பிரபாகரன் தோற்கடிக்க முடியாத அசகாய சூரனல்ல. எனவே நாம் அனைவரும் தமிழ் இனவாதத்தை யுத்த ரீதியில் தோற்கடிக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் அந்த கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
புலிகளின் அடாவடித்தனத்?தை முடிவுக்குக் கொண்டு?வர மேற்படி இனப்பற்றுக் கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ள யோசனைகளாவன: இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்ற போதிலும், இனப்பிரச்சினை என்று இவர்கள் எதனைக் கூறுகிறார்கள் என்று புரியவில்லை. தமிழர்கள் தமிழர்களாக இருப்பதனால் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தான் என்ன என்பது குறித்தும் அவர்கள் எதுவும் கூறுகிறார்கள் இல்லை. இன்று நாட்டில் தமிழ் இனவாதத்தினால் போஷிக்கப்பட்ட தீவிரவாதப் பிரச்சினையே உள்ளது.
இந்த நாடு ஒற்றையாட்சி கொண்டதாகவும், தேரவாத பௌத்தத்தைக் கொண்டதாகவும் தொடர்ந்து நிலைபெற வேண்டுமாயின் தமிழ் தீவிரவாதத்தை யுத்தத்தினால் தோற்கடிக்க வேண்டும். முடிந்தவரை வெகு விரைவில் பிரபாகரனையும் அவரது ஆதரவாளர்களையும் அழித்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் உண்மை நிலையைப் பற்றி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அபிவிருத்தி பணிகளைக் கைவிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு குழுக்களை அமைத்து முழு நாட்டையுமே புலனாய்வுப் பிரிவாக மாற்ற வேண்டும். நாட்டு மக்கள் தமது அன்றாட பணிகளைக் கைவிட்டு நாட்டிற்காக போராட முன்வர வேண்டும். இவ்வாறு நாட்டை உஷார்படுத்துவதன் மூலம் பிரபாகரனுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று மேற்படி கூட்டமைப்பு யோசனைதெரிவித்துள்ளது. </b>

நன்றி:லங்காசிறி
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)