01-17-2006, 11:40 PM
நோர்வே தூதுவர் ஊடாக அரசு புலிகளுக்கு விசேட தகவல்
அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சமரச பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கான இடம் குறித்து அரசாங்கம் விஷேட தகவல் ஒன்றை புலிகள் இயக்கத்திற்கு நோர்வே தூதுவர் ஊடாக அனுப்பி வைத்துள்ளது.
அரசாங்கத்தின் விசேட தகவலை வன்னி சென்ற இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹென்ஸ் பிரஸ்கர் புலிகளுக்கு தெரிவித்துள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதியை பொறுத்தவரையில் சமரச பேச்சுவார்த்தையை ஐரோப்பிய நாடு ஒன்றில் அல்லது புலிகள் இயக்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நோர்வே நாட்டில் நடத்த விருப்பம் கொண்டுள்ளார். அதனை நோர்வே தூதுவர் ஊடாக புலிகளுக்கு தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் கொலைகள், வன்செயல்களை நிறுத்த சமரச பேச்சுவார்த்தையை கூடிய விரைவில் ஆரம்பிக்க ஜனாதிபதி அக்கறை கொண்டுள்ளார் என்றும் அந்த அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.
தூதுவரின் வன்னி விஜயம் குறித்து இலங்கைக்கான நோர்வே தூதுவர் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர் டொட் கிரஸ்கொப் தெரிவிக்கையில், நோர்வே அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான விசேட தூதுவருமான எரிக் சொல்ஹெய்மின் இலங்கை விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவே தூதுவர் வன்னி சென்றுள்ளார்.
சொல்ஹெய்ம் எதிர்வரும் திங்கட் கிழமை இலங்கை வருகிறார். வியாழக்கிழமை வரை கொழும்பில் தங்கி இருப்பார். வன்னி செல்லும் தினம் குறித்து இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் அவர் வன்னி செல்வார். கொழும்பில் ஜனாதிபதி உட்பட ஏனைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திப்பார்.
ஜே.வி.பி. பிரதிநிதிகளை சந்திக்க மாட்டார் என்றும் டொம் தெரிவித்தார்.
இணைப்பு : : kugan
Tue, 17 Jan 2006, 19:08:01 GMT
<< Back