Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
No Aryan Invasion---New and recent genetic proof.
கலிபோனியாவில் பாடசாலை பாடவிதானத்தில் மாற்றங்களைக் கொண்டுவர இந்துதுவ சக்திகள் முயன்ற வேளை அதனை எதிர்த்த கார்வார்ட் பல்கலைக் கழகப் பேராசிரியருக்கும் பாடவிதானக் குழுவுக்கும் ஒரு கொம்ப்ரமைஸ் ஏற்படுத்தப்பட்டது அதன் படி இன்வேசென் என்பது மைக்ரேசன் என்று மாற்றப் பட்டது.அதன் அர்த்தம் ஆரியர் வெளியில் இருந்து இந்தியா வந்தார்கள் என்பதயோ அல்லது ஆரியர் இந்தியாவில் உருவான பூர்வ குடிகள் என்பதுவோ நிருபணமாக வில்லை.இதற்கு ஒரு படி மேலே போய்த் தான் சந்திரக் காந் பன்சல் என்னும் இந்துதுவ வாதி ராஜாதிராஜ போட்ட கட்டுரையை ஆரச்சிக் கட்டுரை போல் எழுது ஆரியர் வெளியில் இருந்து வரவில்லை அவர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் என்று நிறுவ முயன்றார்.இதை நீர் எவ்வாறு திரித்து உள்ளீர் ?ஏன் ?என்பதை வாசிப்பவர்களின் பார்வைக்கு விட்டுவிடுகிறேன்.
Reply
At a special meeting held by the Board of Education on Jan. 6, to which Witzel and Prof. Shiva Bajpai, whose views the Hindu groups support, were invited, a compromise was hammered out and accepted by both sides. The textbooks would reflect both views, and the word "invasion" would be replaced by migration.

http://www.sepiamutiny.com/sepia/archives/002849.html

நாரதரே உங்களிடம் நியாயம் என்பதே எப்போதும் இருந்ததில்லை..! நாங்கள் இருதரப்பு வாதங்களையும் வைத்துக் கொண்டுதான் இருக்கிறோம்..! உங்களைப் போல.. உங்களுக்கு சார்ப்பில்லாதவற்றை உங்கள் அறிவுக்கு எட்டியபடி மறுதலிப்பது போல நாம் மறுதலிக்கப் போவதில்லை.

ஆரிய - திராவிட வேற்றுமைக்கும் ஈழத்தமிழரின் தமிழ் தேசியதுக்கும் முடிச்சுப்போடும் நீங்கள்..அதன் தொடர்பைக் கொஞ்சம் விளக்குவீர்களா..! சும்மா உளறாமல் சான்றுகளில் உள்ள உண்மைகளை விளங்க உணர முயலுங்கள்..! சில உண்மைகள் உள்வாங்க கசப்பாக இருப்பினும் உங்களுக்காக அவை மாற்றமைடையப் போவதில்லை. நீங்கள் மறைத்து விட்டால் அது மற்றவர்களுக்கு வெளிப்படாது என்றும் கனவு காணாதீர்கள். உள்ளதை உள்ளபடி உணர விடுங்கள்..! விளங்கி தீர்மானிக்கிறவை தீர்மானிப்பினம்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kurukaalapoovan Wrote:படையெடுப்பை (invasion) அய் குடிப்பெயர்வாக (migration) ஆக வரலாற்றை மாத்தி எழுதுவம் என்று யார் பரிந்துரை செய்திருக்கிறார்கள்?

என்ன புதுகதை ஒன்று தொடக்குறீர் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நான் விற்பன்னராக கதைக்கவில்லை. நீர்தான் புரதம் இழைமணி என்று எழுதினனீர் அய்ய. ஏதே இந்தத்துறை சம்பந்தப்பட்டவர்களோடு இங்கு விவாதிப்பது போன்று தொழில்நுட்பச்சொற்களால் பூச்சுத்திக் கொண்டு இந்தப்பகுதியில் ஆரம்பிச்சீர். இப்ப சாதாரணமானவர்களுக்கு விளங்கிற நிலையில் விவாதம் போகுது..

உங்களுக்கு எப்படி ஆராய்ச்சி நடந்தது என்பதே புரியவில்லை..! அதனால் எழுந்ததே அந்தக் கேள்வி..! சரி சின்னக் கேள்வி.. ஏன் இழைமணியும் வை குறோமோசோமும் மாதிரிகளில் இருந்து ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது..! ஏன் மற்றைய டி என் ஏக்கள் எடுக்கப்படவில்லை..!

எல்லா விடயங்களையும் எல்லோருக்கும் விளங்க சொல்ல முடியாது. எல்லோருக்கும் விளங்கும் வகையில் இயன்றவரை சொல்லக் கூடியவற்றை சொல்ல முனைகின்றோம்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
narathar Wrote:கலிபோனியாவில் பாடசாலை பாடவிதானத்தில் மாற்றங்களைக் கொண்டுவர இந்துதுவ சக்திகள் முயன்ற வேளை அதனை எதிர்த்த கார்வார்ட் பல்கலைக் கழகப் பேராசிரியருக்கும் பாடவிதானக் குழுவுக்கும் ஒரு கொம்ப்ரமைஸ் ஏற்படுத்தப்பட்டது அதன் படி இன்வேசென் என்பது மைக்ரேசன் என்று மாற்றப் பட்டது.அதன் அர்த்தம் ஆரியர் வெளியில் இருந்து இந்தியா வந்தார்கள் என்பதயோ அல்லது ஆரியர் இந்தியாவில் உருவான பூர்வ குடிகள் என்பதுவோ நிருபணமாக வில்லை.இதற்கு ஒரு படி மேலே போய்த் தான் சந்திரக் காந் பன்சல் என்னும் இந்துதுவ வாதி ராஜாதிராஜ போட்ட கட்டுரையை ஆரச்சிக் கட்டுரை போல் எழுது ஆரியர் வெளியில் இருந்து வரவில்லை அவர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் என்று நிறுவ முயன்றார்.<b>இதை நீர் எவ்வாறு திரித்து உள்ளீர் ?ஏன் ?என்பதை வாசிப்பவர்களின் பார்வைக்கு விட்டுவிடுகிறேன்</b>.

நீங்கள் ஏன் விடனும்..நாங்களே தான் இணைப்புக்களையும் வழங்கியுள்ளோம். நாம் ஒரு பக்கத்தை மறைத்து வைத்துக் கொண்டு நியாயம் கற்பிக்கவில்லை. இரு தரப்பு வாதங்களையும் முன்வைக்கின்றோம். நீங்கள் இடையில் புகுந்து திரிபு..சித்தரிப்பு என்று ஏதோ புதிசா வைக்கிறாப் போல போலித் தோற்றம் காட்டாதீர்கள். இதுதான் களம் பூரா நீங்கள் செய்து வருவது. எங்களை கூகிளில் தேடிப் பெற்றது எங்கிறீர்கள்..நீங்களா சுயமா எழுதிய ஒரு ஆக்கத்தை இக்களத்தில் எங்காவது காட்ட முடியுமா....??? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
அய்யா குருவியாரே நான் மரபண விற்பன்னராக கதைக்கவில்லை என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகிறேன். அந்தத்துறையில் உள்ளவர்களின் கருத்துக்களை ஆதாரமாக வைத்துத்தான் இங்கு கருத்தாடல் நடக்கிறது. தமிங்கிலத்தில் <b>இன்வாஷன் என்பது மைக்கிரேஷன் என்ற நிலைக்கு வரலாற்றில் மாற்றப்படலாம்</b> என்று பந்தாபண்ணியது நீர் நான் அல்ல. அவற்றிற்கு முறையே படையெடுப்பு குடிபெயர்வு என்று தமிழ் சொற்களை போட்டு விளக்க முயற்சித்தனான். ஏன் அதற்கு முதல் டிஸ்புரூவ் என்று தமிங்கிலத்தில் பந்த பண்ணத் தொடங்கினதும் நீர்தான்.

இந்த ஒரு பக்கத்தில் நீர் காட்டின பந்தாவை முழுப்பூசனிக்காயை சோத்துக்கை புதைக்கிற மாதிரி நான் பந்தா காட்டுறன் என்று குற்றம்சாட்டிற கேவலமான நிலையில் நீர் இருக்குறீர்.
Reply
யாரும் எனக்குக் கட்டுப்படுவதாக நான் எங்கும் கூறவில்லை, நான் சொல்லாததை எழுதி அதற்கு விளக்கம் அளிப்பது கருத்துத் திரிப்பு அல்லது மோசடி.

களத்தில் பல காலமாக கருத்தியல் வன்முறயில் ஈடுபட்டு வருவது நீர் , நான் அல்ல.உமது தனி நபர் தாக்குதலால் களத்தில் இருந்து பலர் விலகி உள்ளனர்.உமது கருத்தாடல் பாணி என்பது தலைபோடு கருத்துக்களை முன்வைக்காது ,கருத்தாளன் மேலான தனி நபர் தாக்குதல் ஆகும். கருத்துக்களைத் திரித்து கூறாத கருதுக்களைக் கூறி அவற்றிற்கு விளக்கம் எழுதுவது, சம்பந்தம் இல்லாத விடயங்களைக் கொண்டு வந்து விவாத்ததைத் திசை திருப்புவது பின்னர் அவற்றை தனி நபர் தாகுதல்களாக மாற்றி தலைப்பை பூட வைப்பது.உமது கருத்தாடலால் பூட்டப்பட்ட தலைப்புக்கள் அதற்கு சான்று பகிரும். நீர் எனக்கு எதிராக எவ்வளவு தனி நபர் தாக்குதல்களை நடாத்தி உள்ளீர்.உமது இந்த தாக்குதலால் விலகிச் சென்ற எழுத்தாளர்கள் உணர்வாளர்கள் பலர்.மேலும் உமது இந்தக் கருதியல் வன்முறயால் என்ன செய்து கொண்டிருகிறீர் என்பதை இன்னும் கொஞ்சம் விரிவாக விளக்க வேணும் என்று நினைக்கிறேன்.

அதற்கு முதலில் உமது கருத்தியல் தளத்தின் அடிப்படைகள் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.
இவை எல்லாம் உமது யாழ்க் கள கருத்துக்களின் அடிப்படையிலேயே எடுக்கப் பட்டன மற்றப் படி உமது தனிப்பட்ட விபரங்களின் அடிப்படயில் அல்ல.அதற்கான தேவையும் எனக்கில்லை.

உமது கருத்தியல் தளத்தின் அடிப்படைகள் என்ன?
நான் ஒரு பார்ப்பனன் ஆகவே இங்கே தமிழரின் கலைய பார்ப்பனர் உருமாற்றினர் என்று ஒருவர் கூறுவாராகில் அவருக்கு எதிராக என்ன எதிர்த் தாக்குதலை மேற்கொள்ள வேண்டும், அதற்கான எல்லா வழிமுறைகளையும் பாவிக்க வேண்டும் .இணயத்தில் இருந்து எங்கெல்லாம் தேடி இதை இல்லை என்று நிருபீக்கலாம் என்று கூகிழ் தேடற் பொறியில் பார்க்க வேண்டும்.இவ்வாறு ஏன் செயற்படுகிரீர்? நீர் முதலில் உம்மை ஒரு பார்ப்பனனராகவே கருதிகிறீர்,தமிழராக அல்ல.மேலும் ஆரியர்-திராவிடர் என்கின்ற நிலை வரும் போது நான் ஒரு பார்ப்பனர் நான் ஒரு ஆரியர் .ஆகவே வரலாற்று ரீதியாக ஆரியர் வெளியில் இருந்து வந்தவர்கள் அவர்கள் இங்கே வந்த ஆக்கிரமிப்பாளர் என்கின்ற வராலாற்று உண்மையை மறுதலித்து எழுத வேண்டும் என்ற நோக்கில் ,இந்துதுவ வாதிகளினால் நடத்தப் படும் பிரச்சாரத்திற்கு வலிமை சேர்ப்பதற்காக அவர்களுடன் இணைகிறீர்.

இவ்வளவையும் சொல்லிக் கொண்டு தமிழர் ஆல் இவை ஒன்றுமே முடியாது என்று சொல்லிக் கொண்டு , நான் ஒரு ஈழத் தமிழன்,ஈழத் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரளவாளன் என்று சொல்லுகிறீர்.
எது ஏன்?அதற்குக் காரணம் இன்று ஈழத் தமிழரின் தேசியம் என்பது அசைக்க முடியாத ஒரு அரசியற் சக்தியாக பலம் பெற்று இருப்பதே.ஆனால் அந்த ஈழத் தமிழ் தேசியம் என்பது என்ன? அதன் அரசியற் அடிப்படைகள் எங்கிருந்து வருகின்றன அதன் கருத்தியல் இயங்கு தளம் தான் என்ன?

நாம் முதலில் தமிழர் ,எமது பண்டய வரலாறு தமிழ் நாட்டுடன், தமிழ் அரசர்களான சேர சோழ பாண்டியருடன் பின்னிப் பிணைந்தது.ஆகவே தமிழ் நட்டின் வரலாற்றையும் எமது வரலாற்றையும் இரு வேறு வரலாறுகளாகப் பிரிக்க முடியாது.அடிப்படையில் நாம் ஒரே அடியில் இருந்தே வருகிறோம் .அந்த அடி எது , அது திராவிடர் என்னும் அடியே ஆகும்.

ஆகவே பிரித்தானிய வருகையின் பின் இரு வேறு நாடுகளில் நிலை கொண்ட ஈழத் தமிழரும் இந்தியத் தமிழருக்குமான தமிழ்த் தேசிய அடிப்படை என்பது பல் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று மூலாதாரங்களில் இருந்தே வருகிறது.

ஆரியர்-திராவிடர் என்னும் கருத்தியலை மறுப்பதன் மூலம் அதைச் சிதைப்பதன் மூலம் நீர் தமிழ்த் தேசியத்தின் வரலாற்று மூலாதாரங்களைத் திருக்க விரும்புகிறீர்,இதன் நோக்கம் தான் என்ன?

ஈழத்திலே இப்போது ஆரியர் திராவிடர் என்னும் முரண் இல்லைத் தான் ஆனால் ஆரியரின் எச்சமான சாதியம் இருக்கிறது .அது சிங்களத் தமிழ் முரணால் அமிழ்ந்துள்ளது ஆனால் ஈழ விடுதலைப் போராட்டத்தில் சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டமும் இணைந்துள்ளது.இங்கே வருகிறது உமது அடுத்த சாதிய அனுதாபதின் பாற்பட்ட திரிப்பு.இனப் பிரச்சினை கூர்ப்படய முன் நிகழ்ந்த சாதியப் போரட்டங்களை நீர் மறுதலித்துள்ளீர்.அத்தோடு பார்ப்பனீயம் சாதிய வேறுபாடுகளுக்கு அடிப்படை அற்றது என்று வாதிட்டுளீர்.ஆகவே இங்கே நீர் வரலாற்று ரீதியாக நிகழ்த்தப் பட்ட நிகழ்ந்து கொண்டிருகிற அடக்குமுறைகளை இல்லை என்று நிறுவி, தமிழர்கள் அடக்கப்படக் கூடியவர்கள் அவர்களை அடக்கக் கூடிய திறமை சாலிகள் பார்ப்பனர், என்று உமது சாதீயச் செருக்கை வெளிக்காட்டி உள்ளீர் .

ஆனல் இதற்கு எதிர்மறையாக தமிழ்த் தேசியம் என்ன கூறுகிறது அது சாதிய வேறு பாடுகள் அற்ற தேசியத்தை உருவாக்க விரும்புகிறது அது நீங்கள் நாங்கள் என்ற வேறுபாட்டை மறுதலிக்கிறது.தமிழரில் ஒரு பிரிவினரே பார்ப்பனர் என்கின்ற உமது கருத்தியலை நிராகரிக்கிறது. சாதியம் அற்று எல்லோரும் தமிழரே என்பதையே கூறி நிற்கிறது. நீர் அந்த வேறு பாடுகளைத் தொடர்ந்தும் பேண முயற்ச்சிகிறீர்.பார்ப்பனத்தின் வரலாற்று ஆதிக்க நிலையை மறுதலித்து பார்ப்பனியத்தை ஒரு அடக்குமுறைக் கருத்தியலாக அடயாளம் இட்டு நிராகரிப்பதை மறுதலிக்கிறீர்.அதற்காகவே நான் தேவைக்கு ஏற்ற மாதிரி உரு மாறுவேன் என்று கூறுகின்றீர். நீர் தமிழன் எனில் இவ்வாறு உருமாற வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ்த் தேசியத்திற்கு எதிரான இந்த கருதியல் தளத்தில் நின்றே நீர் சாதியத்தை,பார்ப்பணரின் உயர்வை (மரபணு ரீதியான ஆரச்சிகளை இதற்கு ஆதரமக இனி இங்கே இட்டாலும் ஆச்சரியப் பட முடியாது)
பார்ப்பனீயத்தின் வரலாற்று ரீதியான அடக்குமுறயய் மறுதலித்து உமது கருதியல் வன் முறயைக் கட்டவிழ்த்து விடுகிறீர்..

ஈழ விடுதலைப் போருக்கு எதிரான தமிழ் நாட்டுப் பார்ப்பனரின் எதிர்ப்பு தற்செயல் ஆனது அல்ல,அது ஈழ விடுதலையால் ,தமிழ்த் தேசியம் தமிழ் நாட்டில் எழுச்சி பெற்று விடும் என்ற அச்சத்தின் காரணமாகவே எழுகிறது.ஈழ விடுதலைக்கு மிக மோசமான முறையில் எதிர்ப் பிரச்சாரம் செய்யும் அதே பார்ப்பனர்கள் இங்கே வந்து தமிழ் தேசியத்தின் கருதியல் அடிப்படைகளைச் சிதைக்கும் நோக்குடன் இடும் கட்டுரைகளுக்கு நீர் முண்டு கொடுகுக்கிறீர்,இதற்கு அடிப்படைக் காரணம் உமது கருதியல் தளம்,விசுவாசம் தமிழ்த் தேசியதின் மீது அல்லாமல் உமது சாதிய அடிப்படயில் இருந்தே பிறக்கிறது.இதனயே நான் அடையாளம் காட்டி உள்ளேன்.உமது இந்த கருதியல் தளதில் நின்று கொண்டே நீர் ஆருரன்,தம்பியுடயான் போன்ற தமிழ்த் தேசிய வாதிகளுக்கு எதிரான உமது கருதியல் வன்முறையை நடத்திக் கொண்டிருகிறீர்.அதற்கு நீர் பல வழிகளையும் ஏர்படுத்தி உள்ளீர்.

உமது நட்பின் அடிப்படயில் தமிழ்த் தேசியதின் அரசியல் அடிப்படைகளை விளங்காத அரசியல் அடிப்படைகள் புரியாதவர்களை ,ஆருரன் போன்றோரை பிழயான கருதியல் வாதிகளாக அவர்கள் சளைக்காமல் மேற் கொள்ளும் தமிழ்த் தேசியத்திர்று ஆதரவான பிரச்சாரத்தை ,இனவெறியர் என்று இனங் காட்டி அவர்களை இங்கே தனிமைப் படுத்த விரும்புகிறீர்.ஏனெனில் நீரும் உமது நண்பரும் இது எமது களம் என்றும்,இங்கே வந்து குப்பை கொட்டாதீர்கள் என்றும் ,இங்கே பெண்கள் இருகிறார்கள் என்றும் ,எதோ ஆருரன் போன்றவர்கள் குப்பை கொட்டுபவர்கள் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயலுகிறீர்கள். இது உங்களின் களம் அல்ல ,இது தமிழ்த் தேசியத்தின் களம்.இங்கே நீர் உமது கருதியல் வன்முறைகளால் ,தமிழ்த் தேசியதிற்கு எதிராக சூட்சுமமாக நிகழ்த்தும் சிதைவை தொடர்ந்தும் அடயாளம் காட்டுவேன்.இதுவே இங்கே மிகத் தேவயானதாக எனக்குப் படுகிறது.

தமிழ் நாட்டில் தமிழ்த் தேசியத்திற்கான அரசியல் அடிப்படைகள் சிதந்தமையால் தான் இன்று திராவிட இயக்கங்கல் பார்ப்பனரிண் பிடியில் சிக்குண்டுள்ளன.தமிழ்த் தேசியதிற்கு அடிப்படை அதன் வரலாற்று மூலாதாரங்களும் அதன் பால் எழுந்த கருதியல்களுமே,அவை சிதைக் கப்படால் இன்று இனமுரண்பாட்டால் கூர்படைந்திருக்கும் தேசியம் பின்னர் நிலை மாற்றம் அடந்து உருமாறி விடும்.எப்போதுமே அரசியற் சிதைவு என்பது கருதியல் சிதைவில் இருந்தே ஆரம்பிக்கிறது.

தமிழ்த் தேசியம் என்பது சில கருதியல் அடிப்படைகள் வரலாற்று மூலாதாரங்களில் இருந்தே உருவானது. அவை என்றுமே பாதுகாகப் பட வேண்டியவை.அவற்றிற்காக கருத்து எழுதுபவர்களும் இங்கே வரவேற்க்கப் பட வேண்டியவர்கள்.
Reply
வெல்டன்...! கம்மோன் இன்னொரு ரவுண்டு..! ராஜாதிராஜாவின் கட்டுரை உறுதிப்படுத்தப்பட்டால் அது நிச்சயம் பலரின் அடிப்படை ஆதாரங்களையே தகர்க்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே அது யதார்த்தப் புறநிலைகளைக் கடந்து எதிர்க்கப்படுகிறது இங்கு..என்ற உண்மை அவரவர் வாயாலேயே வந்திருக்கிறது. இதுதான் இங்கு நாம் காட்ட முனைந்ததும்..! கமோன்..தொடர்ந்து எழுதுங்கோ..உங்கள் வேசங்கள் உங்களாலேலே களையப்படட்டும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ஆய்வுக் கட்டுரைகள் எல்லாம் உண்மையாகிவிடமுடியாது. தென் கொரிய விஞ்ஞானி மனிதரைக் "குளோனிங்" செய்தேன் என்று பல கட்டுரைகள் படைத்தார். என்னவாயிற்று?

மேலும் 5000 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த ஆரியர் வருகையை எவரும் தனியே ஜீனோமை வைத்து மட்டும் மறுதலிக்கமுடியாது. சமூக, பண்பாட்டு, கலாச்சார, மொழி மாற்றங்கள் மிகவும் சிக்கலானவை. இலகுவான முறையில் எளிமையான தரவுகளைக் கொண்டு எதையும் நிறுவமுடியாது. புள்ளிவிபரவியல் என்பதே uncertainity பற்றிய கணித ஆராய்ச்சி. இதை வைத்து எதையும் certain என்று சொல்லமுடியாது.
உ.ம். MMR குழந்தைகளுக்கு autism ஏற்படுத்தும் என்று கூறியது.
<b> . .</b>
Reply
ராஜாதிராஜ மற்றும் குருவியார் இட்ட புனைகதைகள் எல்லாமே அம்பலப்படுத்தப்பட்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி நடந்த கலந்துரைஆடலின் பின் கலிபோனிய பாடவிதனக் குழுவினரால் எடுக்கப் பட்டு விட்டன.இந்த வேலையைச் செய்த இந்துதுவக் குழுவினர் அடயாளம் காட்டப் பட்டு இவர்களின் மோசடி அமெரிக்க பதிரிகைகளில் இப்போது வரத் துவங்கி உள்ளது.இதற்கான ஆதாரங்கள் எல்லாம் கிழே உள்ள இணைப்பில் உள்ளன.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=9111
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)