Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சில உதவிக் குறிப்புகள்
#1
பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
________________________________________
வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
________________________________________
சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.
________________________________________
சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
________________________________________
தேங்காய்த் துருவல் மீதியானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
________________________________________
உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால் வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
________________________________________
கேசரி பால்கோவா தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளறலாம்.
________________________________________
ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.
________________________________________
தோசை மாவு பொங்கல் போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாக இருக்கும்.
________________________________________
பாகற்காயுடன் உப்பு மஞ்சள்தூள் வெல்லம் எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால்இ கசப்பு காணாமல் போய்விடும்.
________________________________________
இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.
________________________________________
தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.
________________________________________
மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.
________________________________________
பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.
________________________________________
வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.
________________________________________
தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.
________________________________________
எலுமிச்சை தேங்காய் புளி தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.
________________________________________
உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.
________________________________________
தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும் குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.
________________________________________
துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன் வரமிளகாய் பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால் பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

நன்றி: www.chennainetwork.com
<i><b> </b>

</i>
Reply
#2
றொம்ப றொம்ப நன்றி தகவலுக்கு

Reply
#3
அட நானும் வசம்பு அண்ணா ஏதோ புதுசா கண்டு பிடிச்சுட்டார் என்று பார்த்தன். சரி சரி குறிப்புக்கு நன்றீ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#4
வசம்பு நன்றி தகவலுக்கு.......கடைசிலை நம்மடை குரூப்புக்கிலை வந்ததுக்கு சந்தோஷம் இப்ப சமையல் குறிப்புகள் படிக்கிறபடியாத்தான் களத்திலை காணக்கிடைக்கிறேலை.. . . . .என்ன
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
குறிப்புக்கு நன்றி வசம்பு
.....
முகத்தார் நீங்கள் களத்திலை தக்காளி சாதம் செய்யிற குறிப்பு எழுதின்னீங்கள் எண்டு நினைக்கிறன். அத தேடுறன் காணலை. உங்களுக்கு எங்க எழுதின்னீங்கள் எண்டு ஞாபகம் வந்தா லிங்க ஒருக்கா தாங்க.
Reply
#6
<!--QuoteBegin-yarlpaadi+-->QUOTE(yarlpaadi)<!--QuoteEBegin-->முகத்தார் நீங்கள் களத்திலை தக்காளி சாதம் செய்யிற குறிப்பு எழுதின்னீங்கள் எண்டு நினைக்கிறன். அத தேடுறன் காணலை. உங்களுக்கு எங்க எழுதின்னீங்கள் எண்டு ஞாபகம் வந்தா லிங்க ஒருக்கா தாங்க.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதுவா?

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#7
நன்றி ராகவா இது தான்.
Reply
#8
<b>முகத்தார் எழுதியது:</b>

வசம்பு நன்றி தகவலுக்கு.......கடைசிலை நம்மடை குரூப்புக்கிலை வந்ததுக்கு சந்தோஷம் இப்ப சமையல் குறிப்புகள் படிக்கிறபடியாத்தான் களத்திலை காணக்கிடைக்கிறேலை.. . . . .என்ன

ஆமாம் முகத்தார் இடைக்கடை எமது ஆண் சகோதர்களுக்காக உதவி செய்வது நல்லதுதானே :roll: Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<i><b> </b>

</i>
Reply
#9
Vasampu Wrote:<b>முகத்தார் எழுதியது:</b>

வசம்பு நன்றி தகவலுக்கு.......கடைசிலை நம்மடை குரூப்புக்கிலை வந்ததுக்கு சந்தோஷம் இப்ப சமையல் குறிப்புகள் படிக்கிறபடியாத்தான் களத்திலை காணக்கிடைக்கிறேலை.. . . . .என்ன

ஆமாம் முகத்தார் இடைக்கடை எமது ஆண் சகோதர்களுக்காக உதவி செய்வது நல்லதுதானே :roll: Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

:roll: :roll: :roll: ம்ம்ம்... புரியுறமாதிரி புரியல
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
விஷ்ணு

இப்ப புரியிறமாதிரி இருக்கின்ற பல விடயங்கள் திருமணமானபின் தானாக புரிந்துவிடும். அதுவரை பொறுத்திருங்கள். :roll: :?: Idea
<i><b> </b>

</i>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)