Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப்புலிகளின் தலைவருடன் ஐரோப்பிய ஒன்றியக்குழு சந்திப்பு
#1
<span style='color:green'><b>விடுதலைப் புலிகளின் தலைவருடன் ஐரோப்பிய ஒன்றியக் குழு அடுத்த மாதம் சந்திப்பு? </b>

ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையாளர் தலைமையிலான இணைத் தலைமை நாடுகளின் குழுவினர் பெப்ரவரி மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்திக்க உள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.


கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ஐரோப்பிய ஒன்றியப் பேச்சாளர், விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் ஏற்படாத நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவருடன் நேரடியாக பேச ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது என்றார்.

இதனிடையே ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் இலங்கை அமைதி முயற்சிகள் தொடர்பாக உறுப்பினர் சஜ்ஜித் கரீம் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் லஸ்லொ கோவக்ஸ் கூறியதாவது:

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 4 ஆம் ஆண்டையொட்டி அடுத்த இணைத் தலைமை நாடுகள் கூட்டம் இலங்கையில் நடைபெற உள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டுதான் இலங்கை அமைதி முயற்சிகளில் மிக மோசமான ஆண்டு.

கதிர்காமர் படுகொலை, தேர்தல் புறக்கணிப்பு, வடக்கு - கிழக்கில் பாரிய எண்ணிக்கையில் படுகொலைகள் என நடந்துள்ளன. விடுதலைப் புலிகள் மற்றும் முஸ்லிம்களை உள்ளடக்கிய ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பை அரசாங்கம் செயற்படுத்தியத் தவறியமை பாரிய பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளின் மறைமுகத் தாக்குதலில் 60 அரச படையினர் உயிரிழந்துள்ளனர். எதிர்வரும் காலங்களில் அமைதி முயற்சிகளில் இணைத் தலைமை நாடுகளின் பங்களிப்பு அதிகூடியதாக இருக்கும் என்றார்.</span>

<i><b>தகவல் மூலம்- புதினம் .கொம்</b></i>
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)