Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"மஹிந்த சிந்தனை' யிலிருந்து வெளியே வர மஹிந்தர் தயாரா?
#1
அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்குரிய வழிவகைகளை ஆராய்வதற்காக நோர்வே அனுசரணைக்குழுவின் பொறுப்பாளரும், அந்த நாட்டு அமைச்சருமான எரிக்சொல்ஹெய்ம் நாளைமறுதினம் கொழும்பு வருகின்றார்.
சொல்ஹெய்முக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் இடையில் வன்னியில் நடைபெறக்கூடிய உத்தேச சந்திப்பின்போது தலைவர் பிரபாகரனுக்கு உதவுவதற்காக புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கமும் அதேநாள் அதா வது நாளைமறுதினம் இலங்கை வருகின்றார்.
இந்த இருவரின் வருகையையும் ஒட்டி அமைதி முயற்சிகளில் நல்ல திருப்பம் கிட்டும் என்றும்
சமாதான நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தடங்கல்களை முறியடிக்கும் திடீர் நகர்வு இந்த வருகையை ஒட்டி ஏற்படும் என்றும்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட் டிருக்கின்றார். இது பற்றிய தகவலை அவரின் சார்பில் அவரது அரசின் அமைச்சரவைப் பேச்சாளர் நிமால் ஸ்ரீபால டி சில்வா வெளி யிட்டுள்ளார்.
இதேசமயம், தம்மை சந்திக்கும் அரசியல் பிரமுகர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு விடயத்தைத் திரும்பத்திரும்பக் கூறிவருகின்றார். அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை இரண்டு தடவைகள் சந்தித்த போதும் அந்தக்கருத்தையே அவர் கூறியிருந்தார்.
""வன்னிக்குச் சென்றும் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்'' என்பதுதான் அந்தத் தக வலாகும்.
இலங்கைத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புலி களின் தலைவர் பிரபாகரனும் நேரடியாகப் பேசவேண்டும் என்று தற் போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினரும் ஐரிஸ் புரட்சிகர இராணுவத்தின் முன்னாள் போராளி யுமான மார்டின் மெக்கினாஸும் கூடத் தெரிவித்திருக்கிறார்.
அனுசரணையாளர்கள் மற்றும் மதியுரைஞரின் வருகைகளி னாலும் அல்லது உயர் தலைவர்கள் மட்டத்தில் நடைபெறக்கூடிய நேரடியான சந்தப்புக்களினாலோ மட்டும் தீர்வுக்கு வழி பிறந்து விடும் என்று கருதுவதும், கூறுவதும் வெறும் அபத்தமாகும்.
ஏதோ உயர்மட்ட அனுசரணையாளர்கள் வராததாலும் உயர்தலைவர்கள் நேரில் சந்திக்காததாலும்தான் தீர்வு முயற்சி முன்நக ராமல் தேங்கிக் கிடக்கின்றது என்ற அர்த்தத்தையே இக்கருத்துகள் தரும்.
தீர்வு முயற்சி முன்நகர வேண்டுமானால், அதற்கு முதலில் உரிய சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும்; தீர்வு காணும் நோக்கம் உண்மையாக இதய சுத்தியாக தங்களுக்கு உள்ளது என்பதை வெளிப் படுத்தும் விதத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் செயற்பாடுகள் அமையவேண்டும்.
ஆனால், அத்தகைய நிலைமையோ, வெளிப்படுத்தல்களோ தமிழர் தாயகத்தில் தோற்றவே இல்லை என்பதுதான் மெய்மை நிலையாகும்.
ஒரு பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தின் கொடூரப் பிடிக்குள் சிக்குண்டு தமிழ் மக்கள் அல்லல்பட்டு, அந்தரித்துக்கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சமயத்தில் அமைதி முயற்சிகள் முன்நகரும் என்ற நம்பிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசுத்தரப்பும் வெளியிடுகின்றமை, அந்த நம்பிக்கை வெறும் பகல் கனவே என்ற எண்ணத்தையே தமிழர் தரப்புக்கு தருகின்றது.
ஈழத்தமிழ் மக்கள் தமது போராட்ட இலட்சியத்தை அடையும் அணுகுமுறை குறித்து ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டிய வரலாற்றுத் திருப்பு முனையில் உள்ளனர் என்பதை தமது கடந்த மாவீரர் தின உரையில் வெளிப்படுத்திய தலைவர் பிரபாகரன், ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப் பட்ட சிந்தனைகளை ஆழமாக அலசிப்பார்க்கும்போது தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையின் அடிப்படைகளையோ, அதன்மூலக் கோட்பாடுகளையோ அவர் புரிந்துகொண்டார் எனத்தெரியவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
கொள்கை ரீதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமி ழர்களின் அபிலாஷைகளுக்கும் உள்ள இடைவெளி மிகப்பெரியது. எனினும், அவர் (ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ) சமாதான வழி முறையை எவ்விதம் கையாளப்போகின்றார் என்பதையும் தமிழ் மக் களுக்கு எவ்விதம் நீதி வழங்கப்போகின்றார் என்பதையும் முதலில் அறிந்துகொள்வது அவசியம் என்று குறிப்பிட்ட தலைவர் பிரபா கரன், அதற்காக அவர் (ஜனாதிபதி மஹிந்த) மேற்கொள்ளும் நட வடிக்கைகளைச் சிறிது காலம் பொறுத்திருந்து பார்ப்பதற்குத் தாங் கள் (விடுதலைப் புலிகள்) முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை யும் தெளிவுபடுத்தியிருந்தார்.
அந்தப் பொறுத்திருந்து பார்க்கும் இடைவெளிக்குள் மேற்கொள்ளப்படும் அரசியல் நகர்வே இப்பொழுது இடம்பெறுகின்றது என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசுத்தரப் பும் புரிந்துகொள்வது நல்லது.
தென்னிலங்கை சிங்கள, பௌத்த பேரினவாத சக்திகளையும் மேலாண்மைப்போக்கு உணர்வுகளையும் தூண்டிவிட்டு அதன்மூலம் இனவாதத்தைக் கிளப்பி, அந்த எழுச்சியில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டு வெற்றியீட்டும் இலக்கிலேயே தமது தேர்தல் விஞ்ஞாபனமாக மஹிந்த சிந்தனையை மஹிந்தர் முன்வைத்தார்.
தலைவர் பிரபாகரன் தெட்டத்தெளிவாகச் சுட்டிக்காட்டியிருப்பதுபோல "மஹிந்த சிந்தனை' க்கும் தமிழர்களின் நியாயமான அபிலாஷை களுக்கும் இடையில் இட்டு நிரப்பமுடியாத பெரிய வெளி உண்டு.
அதை நிரப்புவதாயின் தமிழர்களின் நியாயமான அபிலாஷை களை நிறைவுசெய்யக்கூடிய ஒரு நிரந்தர, நீடித்து நிற்கக் கூடிய, நிலையான தீர்வை எட்டுவதாயின் பேரினவாத சட்டகத் துக்குள் அமைந்த "மஹிந்த சிந்தனை'யிலிருந்து ஜனாதிபதி மஹிந்த வெளிவரவேண்டும்.
அதைவிடுத்து, சொல்ஹெய்ம், மதியுரைஞர் பாலசிங்கம் போன் றோர் இலங்கை வருவதனாலேயோ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைவர் பிரபாகரன் நேரில் சந்திப்பதாலேயொ தீர்வு வந்துவிடாது.
ஆகவே, பிரமுகர்களின் வருகைகள், விஜயங்களைக் காட்டி, அதன்மூலம் திருப்புமுனை ஏற்படும் என நம்பிக்கையை வெளி யிட்டு, மக்களை ஏமாற்றுவதை விடுத்து
"மஹிந்த சிந்தனை' போன்ற மேலாண்மைப்போக்குக் கொள்கைகளிலிருந்து வெளிவந்து, தமிழர்களுக்கு நீதி வழங்கும் நியாயப்போக்குக்குத் தாங்கள் தயாரா என்பதை அரசுத்தரப்பு அறிவிப்பதே பொருத்தமானது. அப்படியான உண்மை மனமாற்றம் நீதியின் பாலான எண்ணக்கரு தென்னிலங்கைச் சிங்களத்தலைமைகளின் அடிப்படைப்போக்கில் கருக்கொள்ளுமானால், அது நிச்சயம் ஒரு திருப்புமுனையாக அமையும்; நம்பிக்கை தருவதாக இருக்கும்.
""தீர்வுக்காக தேவைக்கு மேலதிகமாக மேலும் ஒரு மைல் செல் லத் தயாராக இருக்கிறேன்'' என்று ஜனாதிபதி மஹிந்தர் கூறினார். "மஹிந்த சிந்தனை' என்ற கடும் இனவாதக் கோட்பாட்டிலிருந்து முற்றாகத் தம்மை விடுவித்து, அதிலிருந்து அவர் வெளியே வரு வதுதான் இன்றைய நிலையில் அமைதி முயற்சிகளுக்காக அவர் மேலும் அதிகமாகச் செல்லவேண்டிய முக்கிய தூரமாகும். அதற்கு அவர் தயாரா?

http://www.uthayan.com/editor.html
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)