Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நோர்வேயில் பேச்சில்லை ஜனாதிபதி திட்டவட்டம்
#1
<b>நோர்வேயில் பேச்சில்லை
ஜனாதிபதி திட்டவட்டம்
புலிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து
எதையும் செய்யவே மாட்டாராம்</b>


""விடுதலைப் புலிகளுடனான உத்தேச சமாதான பேச்சுகளின் முதலாவது சுற்றை விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டபடி நோர்வேயில் நடத்தமுடியாது. எக்காரணம் கொண்டும் ஒஸ்லோவில் பேச்சுக்களை நடத்த இணங்கமாட்டேன். அப்படி ஒஸ்லோ வில் நடத்த நாம் இணங்கினால் அது புலிகளின் தாக்குதல்களுக்கு அஞ்சி நாம் அடி பணிந்ததாகவே அமைந்துவிடும். புலிகளின் மிரட்டல்களுக்குப் பயந்து எந்த நடவடிக் கையையும் நான் எடுக்க மாட்டேன்.'' இவ்வாறு திட்டவட்டமாக உறுதியாக கூறி யிருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
ஆங்கில, சிங்கள செய்திப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்றுக்காலை அழைத்து அவர்களுக்குக் காலைப் போசன உணவளித்து அவர்களுடன் உரையாடிய சமயமே அவர் இவ்வாறு தெரிவித்தார் என அறியவந்தது.
இந்தச் சந்திப்புக்கு கொழும்பு தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் அழைக்கப்பட வில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
அமைதி முயற்சிகளை முன்னெடுப்பது தொடர்பாக ஒரு முக்கியமான திருப்புமுனை யில் நாடு இருப்பதால் பொறுப்புணர்வோடு செய்திகளை வெளியிடுமாறு பத்திரிகை ஆசிரியர்களை இச்சந்திப்பில் உரிமையோடு கேட்டுக்கொண்டார் ஜனாதிபதி.
""தாக்குதல்களை நடத்தி, அழிவுகளை ஏற்படுத்தி, அதன் மூலம் அரசுத் தலைமையை அடிபணிய வைக்கலாம் எனப் புலிகள் எண்ணுகின்றனர். அவர்களின் அச்சுறுத்தலுக்கு எக்காரணம் கொண்டும் நாம் விட்டுக் கொடுத்துக் கீழிறங்க மாட்டோம். எனவே, புலிகளின் தாக்குதல் செய்திகளுக்கு அள வுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து நிலைமையைக் குழப்பாதீர்கள்'' என்று இச் சந்திப்பின்போது பத்திரிகை ஆசிரியர்களை ஜனாதிபதி கோரினார் எனத் தெரியவருகிறது.
""புலிகள் அரசுப் படையினர் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் சூழ்நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று நோர்வேயில் பேசுவதற்கு இணங்கினால், அது, புலிகளின் அச்சுறுத்தலுக்கு நாம் பயந்து அடி பணிந்ததாகிவிடும். ஆகவே, நாம் எக்காரணம் கொண்டும் முதல் சுற்றுப் பேச்சை நோர் வேயில் நடத்தவேண்டும் என்ற புலிகளின் கோரிக்கைக்கு இணங்கவே மாட்டோம்.''
இவ்வாறு அங்கு உறுதியாகத் தெரிவித் திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
தமிழர் பிரதேசத்தில் படையினரால் தமிழ் மக்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர் என்று கூறப்படுவது குறித்தும்,அதற்கு ஜனாதி பதி எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன வென்பது குறித்தும் பத்திரிகை ஆசிரியர்கள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பினர்.
தேடுதல் மற்றும் பொதுமக்களோடு படை யினர் நேரடியாகத் தொடர்புபடும் சமயங்க ளில் சிவில் பிரதிநிதிகளும் அங்கு பிரசன்னமாக இருக்கும் ஒரு முறையை அறிமுகப் படுத்துவதன் மூலம் இப்பிரச்சினையைச் சமாளிப்பதற்குத் தாம் திட்டமிட்டிருக்கின்றார் எனப் பதிலளித்தார் ஜனாதிபதி.
இச் சந்திப்பின் இடையே ஒரு சில பத்தி ரிகையாளர்களோடு தனியாக உரையாடும் சந்தர்ப்பத்தில் நோர்வேயின் விசேட பிரதிநிதி யும் அந்த நாட்டின் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் குறித்துத் தமக்குத் தொடர்ந்து அதிருப்தி இருப்பதை அவர் வெளிப்படுத்தத் தவறவில்லை என அறிய முடிந்தது.
பல விடயங்கள் குறித்து சிங்கள, ஆங்கி லப் பத்திரிகைகளின் ஆசிரியர்களோடு மனம் திறந்து உரையாடிய ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ, படைகளுக்கு ஆயுதங்கள் கொள்வனவு செய்த விவகாரங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து, நீதி முறையின் படி தாம் கடும் நடவடிக்கை எடுப்பார் எனக் குறிப்பிட்டார் என்றும் அறிய வந்தது.(ஐக)

நன்றி: உதயன் நாளிதழ் http://www.uthayan.com/pages/news/today/01.htm
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)