01-22-2006, 03:11 PM
*தினமும் காலையில் அருகில் உள்ள பார்க்குக்குச் சென்று வாக்கிங் மேற்கொள்ளுங்கள். பூங்கா இல்லாவிட்டாலும் பாதுகாப்பான இதரப் பகுதிகளை தேர்ந்தெடுத்து நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். இந்த பயிற்சி உங்கள் வாழ்க்கையில் பல்வேறு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.
* உணவுக்கட்டுப்பாட்டை தவறாமல் மேற்கொள்ளுங்கள். கொரிக்கும் உணவுகள், மில்க்ஷேக், வேகவைத்த உருளைக்கிழங்கு, காரம் நிறைந்த மசாலாக்கள் போன்றவைகளை, சுவைக்கு அடிமையாகி தினமும் சுவைக்காதீர்கள்.
* எப்போது எந்த செயலை செய்வதற்கு முன்னாலும் அந்த செயல் தனிப்பட்ட முறையில் உங்களுக்கோ, உங்கள் கவுரவத்திற்கோ எந்தவிதத்திலும் இழுக்கை ஏற்படுத்துமா? என்று ஆராயுங்கள். நீங்கள் இன்றல்லது நாளை வெட்கப்படும் அளவுக்குரிய எந்த செயலையும் செய்துவிடவேண்டாம்.
* நீங்கள் செலவிடும் ஒவ்வொரும் ரூபாயும் மதிப்புமிக்கது என்று உணருங்கள். அதே நேரத்தில் தேவையான செலவுகளை செய்வதற்கும் தயங்காதீர்கள். சிலர் நல்ல உழைப்பாளியாக இருப்பார்கள். ஆனால் அந்தப் பணத்தை அவர்களுக்கு சேமிக்கத்தெரியாது. சேமிப்பும் அவசியம் என்பதை உணருங்கள். கிரடிட் கார்டு இப்போது எல்லோருடைய கைகளிலும் இருக்கிறது. அதனைக் கண்டபடி செலவிட பயன்படுத்திவிடக்கூடாது. அது போல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடன் வாங்கிவிடவேண்டும் என்றும் நினைக்காதீர்கள். கடன் கிடைக்கிறது என்பதற்காக தேவையற்ற ஒரு பொருளை வாங்கிவிட வேண்டும் என்று ஒரு போதும் திட்டமிடக்கூடாது.
* குழந்தைகளிடம் கோபத்தைக்காட்ட வேண்டாம். அவர் களிடம் முடிந்த அளவுக்கு பொறுமையை கடை பிடியுங்கள்.
* கணவரோடு உங்களுக்கு நிறைய கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், அவரை குற்றவாளி போல் மற்றவர்கள் முன்னால் சித்தரிக்க முயற்சிக்கவேண்டாம். முடிந்த அளவு அவரோடு பொருந்தி வாழ முயற்சி செய்யுங்கள்.
* மாதத்திற்கு ஒரு புதிய புத்தகம் படிப்பதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். அதன் மூலம் அறிவை புதுப்பித்துக்கொள்ளமுடியும்.
* விளையாட்டில் ஆர்வம் காட்டுங்கள். அதன் மூலம் உடல் ஆரோக்கியம், நட்பு வளரும்.
* தினசரி வாழ்க்கையில் பெரும் பகுதி நேரத்தை புன்னகையுடன் செலவிடுங்கள். புன்னகை வாழ்க்கைக்கு மிகத்தேவையானது. அது உங்களைப்பற்றி மற்றவர்கள் மனதில் ஈர்ப்பை உருவாக்கிக்கொண்டே இருக்கும்.
* அடுத்தவர்களைப் பற்றி முதுகுக்குப்பின்னால் பேசும் பழக்கத்தை அடியோடு கைவிட்டுவிடுங்கள். அக்கம் பக்கத்தினரைப் பற்றி கிசுகிசு பரப்பும் செயலையும் அடியோடு விட்டொழியுங்கள்.
* எப்போதும் மனதை சந்தோஷ மாக வைத்திருங்கள். உங்களையே நீங்கள் நம்புங்கள். வெற்றிகரமாக ஒரு செயலை செய்து முடிக்கும் போது, குடும்பத்தினரோ, நண்பர்களோ உங்களை பாராட்டாவிட்டாலும் உங்களையே நீங்கள் பாராட்டிவிட்டு அடுத்த செயலில் தீவிரமாக இறங்கிவிடுங்கள்.
Thanks:Thanthi...........

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->