01-24-2006, 08:53 AM
திருமலையில் சுடரொளி பத்திரிகையின் நிருபர் சுட்டுக்கொலை
திருகோணமலையில் சுடரொளி பத்திரிகையின் நிருபரான சுப்ரமணியம் சுகிர்தராஜன் (வயது 35) இன்று செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
திருமலை துறைமுகத்தில் பணியாற்றும் இவர், வழமை போன்று தொழிலுக்கு செல்வதற்காக தனது வீட்டிற்கு அண்மையில் உள்ள பேரூந்து தரிப்பிடத்தில் காத்திருந்த வேளையில் காலை 6 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர்.
ஓதியமலையை வதிவிடமாகக் கொண்ட இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார்.
வடக்கு - கிழக்கு ஆளுநரின் செயலாளரின் இடத்திற்கு அண்மையில் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருமலை சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதினம்

" "