Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெனீவா பேச்சுக்களில் பங்கேற்பதை மறுபரிசீலனை செய்ய நேரிடும்:
#1
ஜெனீவா பேச்சுக்களில் பங்கேற்பதை மறுபரிசீலனை செய்ய நேரிடும்: விடுதலைப் புலிகள் எச்சரிக்கை!
[சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2006, 01:04 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் நிலைமைகள் மோசமைடைந்தால் ஜெனீவா பேச்சுக்களில் பங்கேற்பது குறித்து பரிசீலிக்க நேரிடும் என்று விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அரசியல் துறை பொறுப்பாளர் தயாமோகன் எச்சரித்துள்ளார்.


இது தொடர்பாக அசோசியேட்டெட் பிரஸ_க்கு தயா மோகன் அளித்த நேர்காணல்:

அமைதிப் பேச்சுக்களில் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் சிறிலங்கா இராணுவத்தினர் அதனுடன் சேர்ந்தியங்கும் குழுக்களுடன் இணைந்து மறைமுக செயற்பாட்டில் இறங்கி உள்ளனர்.

ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்த ஒப்புக்கொண்ட பின்னர் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவரை எமது பொறுப்பிலிருந்து நல்லெண்ண நடவடிக்கையாக விடுதலை செய்தோம். ஆனால் அதே நாளில் அரச படைகளுடன் சேர்ந்தியங்கும் துணைக் குழுவினர் எமது போராளி ஒருவரை படுகொலை செய்தனர்.

அதேபோல் தற்போது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 10 பணியாளர்களையும் துணை இராணுவக் குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர்.

நிலைமைகள் தொடர்ந்து இப்படி மோசமடைந்து வரும்போது ஜெனீவா பேச்சுக்களில் பங்கேற்பது குறித்து நாம் மறுபரிசீலனை மேற்கொள்ள நேரிடும் என்றார் தயாமோகன்.


நன்றி:புதினம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)