Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இராணுவத்திலும் மேசமாக நடந்த தாதிய உத்தியோகத்தர்
#1
யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் இலங்கை இராணுவத்திலும் பார்க்க மிகவும் மோசமான நடவடிக்கையில் நோயாளர்களுடன் நடந்து கொண்டுள்ளார்

4 ம் இலக்க நோயாளர் விடுதியில் கடமையாற்றும் குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர் அதிகாலை 2.45 மணியளவில் தனது பணம் மூவாயிரம் ரூபா களவு போய்விட்டதாகக் கூறி அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நோயாளர்கள் உட்பட நோயாளர்களபை; பார்வையிட நின்றவர்களையும் உடல் பரிசோதனை உட்பட அவர்களுடைய மேசைகளின் லாச்சிகள் என பலவற்றையும் சோதனை செய்துளார்.

இதே நேரம் குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர் திடீரென இத்தகைய செயல்பாட்டில் ஈடுபட்டமையால் நோயாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றார்கள்.

குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர் சிலருடைய உள்ளாடைகள் உட்பட அனைத்தது உடைகளையும் கூட கழற்றிப்பார்த்துள்ளார் இது சம்பந்தமாக குறிப்பிட்ட இரவு வையித்திய சாலையில் காவல் கடமையில் இருக்கும் ஊழியர்களையும் நள்ளிரவு நேரம் பெண்கள் விடுதிக்கு வந்து சோதனையிடும் படியும் வேண்டுதல் விடுத்த போதிலும் பாதுகாப்பு ஊழியர்கள் செல்ல முறுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் இதனையிட்டு வையித்திய சாலையின் நிர்வாக உத்தியோகத்தருக்கு தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

விடுதியின் பொறுப்பதிகாரியான பெண் வைத்திய கலாநிதியுடன் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக கேட்க முற்பட்ட போது அந்த நடவடிக்கை சரியென அவருடைய பதில் அமைந்திருந்தமையும் மற்றும் இதெல்லாம் சகஐம் என்ற நிலையிலும் அவருடைய பதில் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
pathivu
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)