Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போரூட்டின் அவசர வேண்டுகோள்
#1
புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தலுக்கு நோர்வே அரச சார்பற்ற நிறுவனம் கண்டனம்

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தப்பட்டமைக்கு நோர்வே அரச சார்பற்ற நிறுவனமான 'போரட்' கண்டனம் தெரிவித்துள்ளது.


போரட் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

இலங்கையின் கிழக்குப் பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 10 பணியாளர்கள் கடத்தப்பட்டமைக்கு போரட் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

கடத்தப்பட்டோரில் 5 பேர் கிளிநொச்சியில் போரட் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இருந்தவர்கள்.

இதுவரை விடுவிக்கப்படாத அனைவரையும் உடனே விடுவிக்குமாறு போரட் அமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது. இந்தக் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு சிறிலங்கா காவல்துறை முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நோர்வே அகதிகள் சபை மற்றும் சேவ் சில்ரன் அமைப்பினரது திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்கான கிளிநொச்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் செவ்வாய்க்கிழமையன்று போராட் அமைப்பு நடத்திய இந்தக் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதையடுத்தே அவர்கள் காணாமல் போன செய்திகள் தெரிய வந்தது.

சர்வதேச மற்றும் உள்ளுர் மீளமைப்புப் பணியாளர்கள் மீதான தாக்குதல்களை போரட் வன்மையாகக் கண்டனம் செய்கிறது. ஆழிப்பேரலை, யுத்தம், வெள்ளப் பாதிப்புப் பகுதிகளில் பணியாற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தாருக்கு அளிக்கப்படுகிற அதே பாதுகாப்பு உள்ளுர் பணியாளர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

விடுவிக்கப்படாத 8 பணியாளர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோருகிறோம். அவர்கள் துன்புறுத்தப்படக் கூடாது என்று நோர்வேயில் தற்போது உள்ள போரட் அமைப்பின் சிறிலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி டெர்ரி ஹெக்கென்ஸ் தெரிவித்துள்ளார்.

வன்முறைகள், பழிக்கு பழிவாங்கல்கள் நடைபெற்று யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மோசமடையச் செய்வதற்கு இத்தகைய குற்றச் செயல்கள் காரணமாக அமைந்துவிடக் கூடாது. ஆகையால் கடத்தப்பட்டோர் தொடர்பாக முன்னுரிமை விசாரணை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கத்தை போரட் கேட்டுக்கொள்கிறது.


நன்றி: புதினம்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)