Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிதாய் சிந்திப்போம்...
#1
<b>புதிதாய் சிந்திப்போம்...</b>

வணக்கம் அனைவருக்கும்...

புதிய தலைப்பில், அதுவும் உருவல் ஊடுருவல் பகுதியில் புதுசா எதை எழுதப் போகிறேன் என்று யோசிக்கிறீர்களா? யோசியுங்கள். தனிய ஒரு பகுதியைப் பிரித்து எழுதவம் என்றுதான் யோசித்தேன்... ஆனாலும், முதலில் இதனுள் எழுதியபின் உங்கள் கருத்துக்களையும் பார்த்துவிட்டு செய்வோம் என்று தான் இப்போது இங்கிதனை எழுதுகிறேன்.

வலைத்தளத்தில் நாங்கள் எல்லோரும் தனித்தனியே இணையப்பக்கங்கள் அமைத்து வைத்திருக்கிறோம். ஆனாலும் எத்தனை காலத்துக்குத்தான், ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிந்திப்பது? செயற்படுவது? நாம் ஒரு தேசிய இனம் என்று அடிக்கடி மார்தட்டிக்கொள்கிறோம், ஆனால் ஒரு தேசிய இனமாக இருந்து எம்மை நாம் எப்படி வளர்த்தெடுக்கப் போகிறோம்? நமக்குத் தேவையானது என்ன?

1. ஒருங்கமைப்பு
2. ஒழுங்கமைப்பு
3. கூட்டுமுயற்சி
4. தேடல்/இலக்கு

எந்த ஒரு நாட்டு வலைத்தளத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரு நிறுவனமாகத்தான் அநேகமாக செயற்படுகிறார்கள். ஆனால் நம்மைப் பொறுத்தவரை நாங்கள் இன்னமும் சிறுபிள்ளைத்தனமாய் ஒவ்வொருவரும் (எல்லோருமல்ல, ஆனால் அநேகமானோர்) தமது தனிப்பட்ட விருப்பத்துக்காய் இணையத்தளம் வைத்திருக்கிறோம். இணையத்தில் மட்டுமல்ல, வேறெந்தத் துறையை எடுத்தாலும் நிறுவனமாக இயங்க எங்களால் முடிவதில்லை, அல்லது நாங்கள் முயற்சிப்பதில்லை.

இந்தியத் தமிழ் இணையத்தளங்களை எடுத்தால், அவர்கள் ஒரு கூட்டுமுயற்சியாக பலதையும் செய்கிறார்கள். ஆனால் நம்மிடையே அது இல்லை. எப்போது வளர்த்துக் கொள்ளப் போகிறோம். இனியும் நாம் மற்றையவர்களிடம் தங்கிநிற்கப் போகிறோமா? சுயமாக சிந்திக்கமாட்டோமா?

இதன் அடிப்படையில் எனக்குத் தோன்றிய ஒரு எண்ணக் கருவைத்தான் இங்கே முன்வைக்கிறேன்:

<b>4ஆம் தமிழ் - 4th tamil </b>

இணையத்தில் ஓருளவு எங்கள் எல்லோருக்கும் அனுபவம் உள்ளது. நாங்கள் எல்லோரும் கூட்டாக இணைந்து ஒரு இணையத்தளத் தமிழ் ஒருங்கமைப்பை நிறுவி அதன் மூலம் பல இணையம் சார் செயற்திட்டங்களை முன்னெடுத்து நமது தேசியத்தையும் மொழியையும் கட்டியெழுப்புகின்ற முயற்சிக்கு துணைநிற்பது தான் இதன் நோக்கம்.

மோகன் அண்ணா - யாழ் இணையத்தைக் கட்டியெழுப்பி இணையம் சார்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்த அனுபவம் இருக்கிறது.

சுரதா அண்ணா - தமிழ் எழுத்துருக்களில் கவனம் செலுத்தி அதில் தொடர்ந்தும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். எனவே எழுத்துரு சார்ந்த அனுபவங்கள் இவருக்குண்டு.

கண்ணன் அண்ணா - வலைப்பக்கங்களில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடிக்கக்கூடியவர். எனவே பாரதுகாப்பு சம்பந்தமான அனுபவம் இவருக்கு இருக்கிறது.

சந்திரவதனா அக்கா - யாழ் இணையத்தில் தனது ஆக்கங்கள் பலவற்றை ஆர்வத்தோடு இணைத்தவர், இணைப்பவர். அதேபோல் தனியாகவும் பல வலைப்பூக்களை ஆர்வமாக உருவாக்கி வருபவர்.

இதுபோன்று ஆர்வம் உள்ளவர்களையும் திறமையுள்ளவர்களையும் ஒன்றிணைத்து ஒரு இணையக்குழுவை உருவாக்கி பயனுள்ள பல செயற்பாடுகளை முன்னெடுப்பது நம்மினத்திற்கு பலனளிக்கும்! இதுதான் எனது எண்ணம். இதனை மேலும் மெருகூட்டி எப்படி எப்படியெல்லாம் செய்யலாம், என்னென்ன செய்யலாம் என்று கலந்தாலோசிப்போம்.

சில உப எண்ணங்கள்:
1. உலகம் முழுதும் பரந்துவாழும் தமிழ் இலக்கியம் சார்ந்தவர்களுக்கான ஒரு இணையத்தளம்.
2. குழந்தைகளுக்கான இணையத்தளம்.
3. இணையத்தில் இன்று வலைத்தள வடிவமைப்பில் நம் இளைஞர்கள் சிறந்து நிற்கிறார்கள். ஆனாலும் சினிமா என்னும் குறுகிய வட்டத்துள் நிற்கின்ற அவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கான சரியான வழியைக் காட்டுதல்.
4. தமிழ் மென்பொருள் உருவாக்கங்களை ஊக்குவித்தல். (உதாரணம்: Unicode, வலைத்தள Scriptகளுக்கான தமிழாக்கம்)

குற்றம் குறை இருப்பின் சொல்லுங்கள்.
என்னுடைய எண்ணக்கருவை முன்வைத்துள்ளேன்,
இணைந்து செயற்பட யார் தயார்?

பிகு: தொடக்கி வைப்பது என் வேலை, தொடர வேண்டியது உங்கள் வேலை <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Reply
#2
இந்த தமிழ் தேசியம் என்ற சொல்லை கேட்டாலே அருவருப்பாக இருக்கிறது.

உங்கள் விடயத்திற்கு பிறகு வருகிறேன்.
Reply
#3
வணக்கம் இளைஞன்.
நல்லதொரு கருத்து.ஆனாலும் செய்வதற்கு நிறையவே இருக்கின்றன.தெரிந்தோ தெரியாமலோ பல விடயங்கள் ஏற்கனவே கூட்டாகத்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
எனினும் இப்போதைக்கு தனித்தனியே விடயங்களை ஆக்கி கூட்டாக முன் கொண்டு செல்வதே சிறந்தது என்பது என் அபிப்பிராயம்.

இப்போதுதான் எங்களவர்கள் தமிழ்க்கணனி விடயத்தில் மிகக்குறைவாகவெனினும் இறங்கியுள்ளார்கள்.

சுhரியன் கொம் கூட இந்த யுூனிக்கோட் விடயத்தில் எல்லா ஈழத்து தளவாளர்கள் சேர்ந்து இயங்குவோமோ எனக்கேட்டிருந்தார்கள்.
யுூனிக்கோட் எழுத்துருக்கள் எமது சார்பில் நிறைய விடவேண்டும் எதாவது அதுபற்றி தெரியுமாத எனவும் கேட்டிருந்தார்கள்.
எனக்கு எழுத்துரு செயஇயுமளவிற்கு தெரியாது.இப்போது அவர்கள் முரசு நெடுமாறனைப்பிடித்து ஒரு எழுத்துரு விட்டுள்ளார்கள்.
எமது புத்தூர் ஆவரங்கால் சிறீவாஸ் அவர்கள் யாரும் கீறித்தந்தர்;தால் தான் செய்துதருவதாகக்காகக்கூறினார்.
பாமினியை மாற்றித்தருமாறு கேட்டேன.பாமினி உரிமையாளரிடம் அனுமதி வாங்குவதானால் அவரது தொடர்பு வேணும்.


இதுபோல சில செய்திகளை அவ்வப்போது முதற்கட்டமாக பகிர்ந்துகொள்வோம்.
;
Reply
#4
தமிழாக்கம் செய்யப்பட்ட போஸ்ட்நியுக்(பிஏச்பி) மாதிரி

http://www.tamillinux.org/sangam
Reply
#5
சூரியன் மம்போ வை மொழிபெயர்த்துவிட்டார்களா?
அப்போ நான் எனது வெலையை நிறுத்தலாம் என்று சொல்லுங்கள்.(நானும் கிட்டத்தட்ட மம்போ வை மொழிபெயர்த்துவிட்டேன்.)
Reply
#6
கிட்டத்தட்ட என்றால் செய்துவிட்டுத் தாருங்கள். நானும் மம்போவுக்கு மாறும் திட்டம் உள்ளது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#7
http://valaippoo.yarl.net/archives/000492.html#more
Reply
#8
tpk;gj;jpy; mg;gb vd;iwAk; fhztpy;iyNa
Reply
#9
விம்பகம் தமிழில் இருப்பதைத்தான் அவர் குறிப்பிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். எப்பிடியோ யாழ் இணையம் மக்கள் மத்தியில பிரபலப்படுது...

அங்க ரிரிஎன்னில எல்லாருக்கும் முதற்பக்கம் யாழ் இணையம் தான். அதனைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.

யாழ் நெற் வேலைகள் இன்னும் ஒழுங்கா முடியேல போல இருக்கு?


Reply
#10
ரிரிஎன் என்ன ரிரிஎன் ...இன்டர்போலுக்கே போகுதாம்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#11
வலைப்புhவிலிருந்து


3. கோப்புகளில் தேடலுக்காண வாய்ப்பை அதிகரியுங்கள்
கணினித் தமிழ் பற்றிய வலைப்பதிவைத் தட்டச்சிக்கொண்டிருக்கும் பொழுது நான் என்றோ படித்த "யாவா கற்போம்" என்ற கட்டுரையை அதில் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் பல மாதங்களுக்கும் மேலாக வலையில் இருந்தும் அந்த கட்டுரையை எந்த ஒரு தேடு பொறி மூலமாகவும் கண்டுபிடிக்க முடியவில்லை. யாழ் இணையம் தேடுபொறிகளின் பார்வையிலிருந்த பொழுதும் இக்கட்டுரையைப் பற்றிய விபரங்களை அவை சேகரிக்கவில்லை. இதற்கு காரணம் அக்கட்டுரை வேறு எந்த இடத்திலும் சுட்டிகளால் இணைக்கப்படாததுதான். (இப்பொழுது அக்கட்டுரையை எனது பதிவில் சுட்டி மூலம் இணைத்துவிட்டதால் விரைவில் அது கூகிள்ஃயாஹூ தேடலில் இடம்பெறும்). ஆகவே நீங்கள் வலைப்பதியும்பொழுது முடிந்தவரை சுட்டிகளைப்ப யன்படுத்துங்கள்.

இம்முயற்சி தமிழ் வலையில் ஒரு பெரிய அலையாக இல்லையெனினும் அந்த அலைக்காண ஒரு சிறிய் உந்துதலாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன்இ
என்றும் அன்புடன்
கண்ணன்.

Pழளவநன டில நுனவைழச யவ யுpசடை 28இ 2004 08:33 யுஆ | வுசயஉமடீயஉம

ஊழஅஅநவெள
Reply
#12
ஆள் இளைஞனை துரத்துறார்? "யாவா கற்போம்" மிச்சத்தையும் தொடரலாம் போல இருக்கு...சனம் வாசிச்சிருக்கு நான் எழுதினதையும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->... நேரம்தான் மட்டுமட்டு...அதில கட்டுரை எழுதுறதில பிரச்சினையில்ல, தமிழ் சொற்களை பயன்படுத்தவேண்டுமென்று சொற்கள் தேடுவதாலேயே நேரம் அதிகம் தேவைப்படுகிறது...இருந்தாலும் பார்ப்போம்.


Reply
#13
சுட்டி என்றால் என்ன?
Reply
#14
சுட்டி = Link ??

Mouse ஐயும் சிலபேர் "சுட்டி" என்று சொன்னவை முந்தி. ஆனால் Mouse ஐ அரக்கும்போது திரையில் விழுகிற அம்புக்குறியையும் "சுட்டி" எண்டு சொல்லுச்சினம்.


Reply
#15
test
Reply
#16
test
Reply
#17
உங்கள் தகவல் பயனுள்ள தகவல். தகவலுக்கு நன்றி.

[b]


Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)