Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குட்டிக் கவிதைகள்.
#1
1)
இரகசியம் சொல்வதாய்
முத்தமொன்றை
வைத்து தொலைத்தேன்.
என்ன நீ....
ஒரு முத்தம் தானே.
அதற்கு இப்படியா
யாரும் முறைப்பார்கள்.
2)
ஐயோ பாவம் அந்த நகங்கள்.
அருகிருக்கும் செடிகள்.
என் வருகைக்காக
அவற்றை எவ்வளவு நேரம் தான்
பிய்த்து எறிவாய்..!
அட தூர நின்று
இதைக் கூட
ரசிக்காது விட்டால்
நான் உன் காதலியா என்ன.
3)
அதெப்படி உன் நெற்றியில்
தடவிப்போகும் ஒற்றைத்தலைமுடி.
அதை நீ ஒதுக்கி ஒதுக்கி
கதைக்கும் போது
எத்தனை அழகு தெரியுமா.
4)
உன்னை நான் கடக்கும் போது
அதெப்படி எனக்காக
இவ்வளவு அழகான பார்வையையும்
புன்னகையையும்
பரிசளிக்கிறாய்..!
5)
உனது நண்பர்களோடு
இருக்கும் போது
என்னைக்கண்டதும்
ஒரு செருமல்.
அதெப்படி நண்பர்களுக்கே
தெரியாமல்
என் செவி தடவிப்போகும்
உந்தன் செருமல்.
6)
உந்தன் கைவிரல்களோடு
எந்தன் கைவிரல்களை
பிணைத்துக் கொள்வதில் தான்
எனக்கு எத்தனை ஆனந்தம்.
அவை கூட உந்தன் மனசைப்போல்
அத்தனை மென்மை.
7)
உன்பெயர் சொல்லி
அழைக்கும் போதெல்லாம்
என் விழிகள் தான்
உன் பெயர் சொல்வதாய் நீ..!
அட என் விழிகள்
எப்போது போச
கற்றுக் கொண்டன.

உன் நாக்கு உச்சரிக்கும்
வார்த்தைப்புூக்களை
எவ்வளவு அழகாக
விழாது பாதகாத்து
என் செவி சேற்கிறது
உந்தன் உதடுகள்.
9)
உதடுகள் நோகாமல்
எப்படி உன்னால்
பேச முடிகிறது.
ஆராய்ச்சி செய்து
என் விழிகள்
சோர்ந்து விட்டன.
மின்னலாய் சில
கதிர் கற்றைகள்.
அட உந்தன்
பற்களில் இருந்து
என் கண் சேர்ந்த
ஒளிக் கீற்றுகள்.
10)
உன் வருகைக்காக
காத்திருந்தேன்
இருள் எனைச்சுூழ.
தூர உன் வருகையை
உடனமே உணர்ந்து விடுவேன்.
என்னைச்சுhழ அழகிய பல ஒளிவண்ணம்.

யெடயலiலெ வாயஅயசயளைநடஎயn
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#2
காலக்கண்ணாடியின் - முன்
ஞானக்கதவினைத்திறக்க - முன்
ஆடி அடங்கிடும் சிநதனைகளுக்கும் - முன்
தேடலே இல்லாமல் .. ஒளியாய்
ஒலியாய், உணர்வாய், சுவையாய்..
எங்கும் எதிலும் எப்பொழுதும் நிலைத்திருக்கும்...பரம்பொருளே
பொழிந்திடுவாய்.............................!

-சர்வமும் பிரம்மமயம்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)