Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
IN THE NAME OF BUDDHA
#1
<b><span style='font-size:25pt;line-height:100%'>IN THE NAME OF BUDDHA
</span>
<img src='http://www.inthenameofbuddha.com/images/gal/5b.jpg' border='0' alt='user posted image'>
பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிரிழப்பு நிகழ்ந்த சிறீலங்காவின் பிரச்சனைகளை ஆராயக் கிழம்பிச் சென்ற சில மலையாளி இளைஞர்கள் அண்மையில் சிறீலங்கா அரசு மற்றும் புத்த மத நம்பிக்கையாளர்களின் கண்காணிப்புக்குள்ளாயினர். ராஜேஸ் டச்ரிவர் சாய்ஜார்ஜ் ஷண்முகதாஸ்
ஆகிய இளைஞர்கள் இன்றைக்கு சிறீலங்காவில் விவாதத்துக்குரியவர்களாக இருக்கிறரர்கள். சிறீலங்காவின் உள்நாட்டுப் போர் பின்னணியில் இவர்கள் தயாரித்த திரைப்படம் சிறீலங்கா அரசை மட்டுமின்றி இந்திய அரசையும் திடுக்கிட வைத்திருக்கிறது.

[b]இன்த நேம் ஒவ் புத்தா</b> என்ற படத்தின் வாயிலாக ராஜேஸ் மற்றும் அவரது குழுவினரும் மேற்கொண்டிருக்கிறார்கள்.

அனிதா பிரதாப் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் உலகத்திற்கு தெரியப்படுத்திய சிறீ லங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை பெரிய திரையிலும் காட்டினார்கள் என்பதுதான் இந்தத் திரைப்படத்தை உருவாக்கியவர்களின் முக்கிய சாதனையாகும்.

சிறீ லங்காவின் அரசியல் , மதம், மனித உரிமைமீறல்கள் , போர், பெண்கள் குழந்தைகள் மீதான அக்கிரமங்கள் , சிறீ லங்கா இரானுவத்தினர் மற்றும் இந்திய அமைதிப்படை (IPKF) யினரின் கற்பழிப்புகள் , கொலைகள், தற்கொலைப் படையினரின் கொடுரம் போன்றவையெல்லாம் படத்தில் அலசப்படுகிறது. போரிலிருந்தும் அது உருவாக்கும் கெடுதிகளிலிருந்தும் விடுதலை கோரும் இந்தப் படம் சிறீ லங்காவின் அமைதிப் பேச்சுக்கும் ஊக்கமளிப்பதாகும். கடந்த ஆண்டு ஒஸ்லோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இத் திரைப்படம் மிகவும் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கதாகும். 2002 டிசம்பர் 19ம் நாள் லண்டனில் திரையிடப்பட்டது. தமிழ் படமாக இருப்பினும் ஆங்கில சப் டைட்டில்களுடன் வெளியான புத்தா அங்கும் கவனத்தை ஈர்த்தது.

சொந்த உயிரைப் பலி கொடுத்து பல பேருடைய உயிரைப் பறிக்கும் தற்கொலைப் படைகளின் கொடுரமும் , இந்தியப் படைகளும் சிறீ லங்கா படைகளும் மேற் கொண்ட அக்கிரமங்களும் ராஜேஸின் இந்தப் படத்துக்கு பின்னணியாக இருந்தன.இந்தியாவிலும் சிறீ லங்காவிலும் சிலருக்கு இது கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம். புத்த மதத்தைக் குறிப்பிடும் சில காட்சிகள் இருந்ததினால் புத்த மத நம்பிக்கையாளர்களும் இந்த படத்திற்கு எதிராக திரும்பியிருக்கிறர்கள். சிறீ லங்காவில் சில மாவட்டங்களில் இருக்கும் சில புத்த மத நம்பிக்கையாளர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிக் காட்டியதால் அரசும் இந்தப் படத்தை விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது.

அதே பொழுது இந்திய இராஐதந்திர வட்டாரங்களிலும் இந்தப் படம் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. சிறீ லங்காவுக்குச் சென்ற இந்திய அமைதிப் படையைப் பற்றிய குறிப்பிடுதல்களும் சர்ச்சைக்கு காரணமாயின. அங்கு கற்பழிப்புகள் உள்ளிட்ட கொடுஞ்செயல்களில் இந்திய அமைதிப் படைக்கும் பங்கிருப்பதாகக் காட்டும் காட்சிகளும் படத்தில் இருக்கின்றன.

கேளரம்-தமிழ்நாடு போன்ற இடங்களில்தான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. இருப்பினும் இத்தகைய ஒரு கதையை பின்னணியாகக் கொண்ட படத்தைப் பற்றி முன்னதாகவே தெரிந்து கொள்ள இந்திய உளவுத் துறைகள் தவறியதுதான் அரசுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

இந்தப் படத்தின் பெருமைக்குரிய சாதனைக்குரிய இளைஞர் ராஜேஸ் டச்ரிவர் , படத்தின் திரைக் கதை ஆசிரியரும் இயக்குனரும் ஆவார். டச்ரிவர் என்றால் தொடுநதி என்று பொருள்படும். ராஜேஸ் டச்ரிவர், சாய்ஜார்ஜ், ஷண்முகதாஸ் ,ஆகியோரும் முதல் படத்திலேயே உலகப் புகழ் பெற்று விட்டனர்.

சாய்ஜார்ஜ் பழைய மலையாள திரைப்பட தயாரிப்பாளர் கே.எ…். ஆன்டணியின் புதல்வராவார். தொடுபுழாவைச் சேர்ந்த ராஜேஸ் டச்ரிவர் School of Dramaவிலிருந்து டிசைன் அண்டு டைரக்ஷன் விருது பெற்ற பின் இயக்குனராகியிருக்கிறார். 30 மேற்பட்ட நாடகங்களை இயக்கிய இவர் ஏராளமான தெலுங்கு பாலிவுட் படங்களுக்கு அசோசியேட் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். இன் த நேம் ஒவ் புத்தா வாயிலாக முதன் முதலாக இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.

ஷிஜி, சோனியா, ஜோதிலால், அமித், ஜயசூர்யா, புஷ்ப கல்யாணி, பமேலா ,சிறீஜா, கல்யாணி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். உதவி இயக்குனர்களாக ஷெரிராய் பாஸ்கர் கோலிஸில்ஸ் பணியாற்றியருக்கின்றனர். படத்தின் இசையை ராஜா மணியும் கேமராவை ராஜரத்தினமும் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலையாள மனோரமா நாளிதழ் ஞாயிறு இணைப்பு <b>சிறீ</b>யிலிருந்து

தமிழாக்கம் .வி.கே.பாலகிருஷ்ணன்
நன்றி: நிழல்

<img src='http://www.inthenameofbuddha.com/images/festivals.gif' border='0' alt='user posted image'>
http://www.inthenameofbuddha.com/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)