10-02-2003, 06:55 PM
வெள்ளைப் பூண்டினை தொடர்ந்து உணவில் சேர்ப்பதால் வயிறு மற்றும் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் அபாயம் குறைவதாக "தி அமெரிக்கன் ஜர்னல் ஆப் கிளினிகல் நியூட்ரிஷன்' என்னும் மருத்துவ, உணவு துறை சார்ந்த பத்திரிகையின் சார்பில் நடைபெற்ற ஆய்வில் தெரிய வந்துள்ளது.
* இந்த பத்திரிகையின் சார்பில் நடைபெற்ற ஆய்வின் முடிவில், வெள்ளைப் பூண்டினை தொடர்ந்து உணவில் சேர்ப்பதால் வயிற்று புற்றுநோய் அபாயம் 50 சதவிதமும், பெருங்குடல் அபாயம் 33 சதவிகிதமும் குறைவதாக தெரிய வந்துள்ளது.
* இந்த ஆய்விற்காக உணவும், புற்று நோயும் என்னும் தலைப்பில் 300 ஆய்வுகளும், புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் வெள்ளைப்பூண்டின் பங்கு என்னும் தலைப்பில் 22 ஆய்வுகளும் நடைபெற்றன.
* ஹெலிசோபாக்டர் பைலோரி என்னும் பாக்டீரியம் வயிற்று பகுதியில் காணப்படுகின்றது. இதுவே கேன்சருக்கு காரணம் என தெரிய வருகின்றது. கேன்சருக்கான இக்காரணியை கட்டுப்படுத்தும் குணம் வெள்ளை பூண்டிற்கு இருப்பதாக இந்த ஆய்வு கூறுகின்றது. வெள்ளைப்பூண்டில் உள்ள சல்பரே "ஹெலிசோபாக்டர் பைலோரி' பாக்டீரியத்தை செயலிழக்க செய்கின்றது என இந்த ஆய்வு கூறுகின்றது.
* பெருங்குடல் பையிலிருந்து மலக்குடல் வரை விரிந்துள்ள பகுதியில் ஏறு குடல், குறுக்கு குடல், இறங்கு குடல் என மூன்று பகுதிகள் உள்ளன. இந்த மூன்று பகுதிகளிலும் ஏற்படக்கூடிய புற்றுநோய் அபாயத்தை பெருமளவில் குறைக்க வெள்ளைப்பூண்டு பயன்படுகின்றது.
* 100 கிராம் வெள்ளைப் பூண்டில் 62.8; புரதம் 6.3; கொழுப்பு 0.1; கார் பா ஹைடிரேட்டு 29.0; கால்சியம் 0.03; பாஸ்பரஸ் 0.31; இரும்பு 1.3 மில்லி கிராம், வைட்டமின் சி 13 மில்லி கிராம் ஆகியவை உள்ளன. இதில் செம்பு இருப்பதாகவும் தெரிகின்றது.
* சுவாசக்குழாய், தொண்டை, நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் நோய்கள்; கக்குவான் இருமல் ஆகியவற்றுக்கு அருமருந்தாக இந்தியாவில் பயன்பட்டு வந்த வெள்ளைப்பூண்டு தற்போது அமெரிக்க மருத்துவ இதழின் ஆராய்ச்சியினால் வயிறு மற்றும் குடல் புற்று நோயையும் தடுக்கும் என தெரிய வந்துள்ளது சிறந்த விஷயமாகும்.
நன்றி: தினமலர்