P.S.Seelan Wrote:நிவாரணத்தில் வாழ்பவர்களுக்குக் கோவணமும் அவசியமா? அப்படி அவர்கள் கோவணம் தேவையேனில் நிச்சயமாய் தமது தாய் நில்த்திற்கு வந்து இருந்து கொண்டு செய்வதை செய்யட்டும். ஆனையிறவு துடைத் தெறியப்பட்டது திருகோணமலையை இந்தியனுக்கும், அமெரிக்கனுக்கும் விற்று வாங்கிய காசிலில்லை. எமது வேர்வையில் பெற்ற நிதியினால். அது எந்த ரூபத்திலும் இருக்கட்டும். வரி வட்டி லஞ்சம். கொடுத்துவிட்டு எம் தாய் மண்ணில் கால் நீட்டித் திண்ணையில் அமைதியாக உறங்கவிரும்புகின்றோம். அந்நிய தேசத்தில் வாழும் தாய்மண் பற்றுக் கொண்ட உறவுகளுக்கும் அது தான் விருப்பமெனில் அள்ளிக் கொடுக்கட்டும். நிச்சயமாய் நாளை உங்கள் மண்ணில் வந்து மதிப்புடன் தலைநிமிர்ந்து வாழ்வீர்கள்.
சீலன் அப்ப நீங்கள் புலம்பெயர்ந்த ஒன்றரை மில்லியன் கோவணமில்லாதவர்கள் என்று சொல்லுறியள்..
:mrgreen:
கோவணம் கூட கட்டாமல்ப் போய் உழைச்சு அனுப்பின காசு செல்லாக்காசெண்டு சொல்லுறியள்.
:mrgreen:
அது சரி மற்றவன் உழைச்சுச் சம்பாதித்த பணம் நேர்மையாக உழைத்த பணம் அல்ல.. வியர்வை சிந்தி உழைத்த பணம் அல்ல.. வரி கப்பம் வேண்டிற வேலை வியர்வை சிந்தியது.. நேர்மையாக உழைத்த பணம் பெறுமதியான பணம்.. அப்படித்தானே சீலன்.. அதற்குப் பெயர் நிதி.
உதுக்குமேலை நான் என்னத்தைச் சொல்லுறது.
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஆனால் ஒண்டு.. எனது கணிப்பிலை ஒரு மில்லியன் போனது போனதுதான் திரும்ப வராது. திரும்பச் சண்டை தொடங்கினால் மற்றுமொரு 6 இலட்சம் திரும்ப வராது. பிறனெண்ண நீங்களும் இருக்கிற நாட்டு முட்டாக்கும்போட்டு உங்கையே குந்தச் சரி.
P.S.Seelan Wrote:இங்கே முட்டாக்குப் போட்டாலும் எம்மை இருக்க விட மாட்டார்கள். நாம் இருக்கப் போவதுமில்லை.புலம் பெயர்ந்து சென்ற அனைவரையும் நான் குறை கூற வில்லை. உங்களைப் போல தமிழீழம் சென்று வந்த உங்கள் நன்பர்களைப் போன்றவர்களையே நான் குறிப்பிட்டு எழுதினேன். நீங்கள் உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். புலம் பெயர்ந்து ஓடியவர்கள் அனைவரும் நாட்டில் ஏற்பட்ட வன்முறையால் ஓடினீர்களா? அல்லது உழைப்பிற்காய் சுய நலத்திற்காய் ஓடினீர்களா என்று. காணவில்லையா போய் தொங்கிக் கொண்டு இருந்தவர்கள் வந்து தமிழீழத்தை நாறடிப்பது. உண்மையில் தன் மண்ணின் மீது பற்றுள்ளவன் நிச்சயமாய்த் திரும்பி வரத்தான் போகின்றான். இன்னுமொன்று. நீங்கள் இனியும் தமிழன் யுத்தத்திற்குப் பயந்து அகதியாய் ஓடுவான் என்று நினைத்தால் ஏமாறுவீர்கள். ஓடிப் போனவர்களும் ஒழிந்து போனவர்களும் சீக்கிரம் திரும்பி வரத்தான் போகின்றீர்கள். அது மட்டும் நிச்சயம்.
ஐயா சீலன்.. நீங்களே கோவணமில்லாமல் இருந்துகொன்டு மற்றவனை கோவணமில்லாதவன் என்று சொல்லுகிறீர்கள்.. நீங்கள் வெளிநாட்டிலிருந்துகொண்டு மற்றவனை அங்கு போய் இருக்கச்சொல்லுகிறீர்கள்.. நீங்கள் உங்கள் பிள்ளைகளை பவுத்திரமாக வைத்துக்கொண்ட மற்றவன் பிள்ளைகளை ஆயுதம் தூக்கு என்று தூண்டுகின்றீர்கள்.. ஆட்சேர்ப்புக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்.. உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்.. உங்கள் வன்முறை இதுவரையில் எந்த வெற்றியைத் தந்துள்ளதென்று..?
மேலும் எனது கணிப்பு ஊகத்தின் அடிப்படையில் செல்லப்பட்டது அல்ல.. சந்திக்கும் பலரிடம் செய்த கணிப்பீட்டின் யதார்த்தம் தான் அந்த ஒரு இலட்சம் மக்கள்.. இவர்கள் ஒருபொழுதும் திரும்பப்போகப்போவதில்லை.. சரித்திரத்தில் இடம்பிடிக்கப்படக்கூடிய நிகழ்வுகள்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.. ஏனது கணிப்பில் நீங்கள் நினைப்பதற்கு எதிர்மாறாகவே எல்லாம் இடம்பெறுகின்றன.. சிறிதுகாலத்தில் நான் என்ன சொல்லுகின்றேன் என்பது புரியும்..
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
P.S.Seelan Wrote:நீங்கள் உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். புலம் பெயர்ந்து ஓடியவர்கள் அனைவரும் நாட்டில் ஏற்பட்ட வன்முறையால் ஓடினீர்களா? அல்லது உழைப்பிற்காய் சுய நலத்திற்காய் ஓடினீர்களா என்று.
சத்தியமாச் சொல்லுறன் சீலன் உந்தக் கேள்வி எனக்குப் பொருத்தமில்லை.. கல்லெறிஞ்சு கொடியறுத்த காலத்திலையே அம்மா பிடிச்சு அனுப்பிப்போட்டாவெண்டு முதலே சொன்னனான்தானே.. ஆனால் எனக்கு வடிவாத் தெரியும் அம்பலாண்னைக்கு உதுக்கான மறுமொழி தெரியும் அவரிட்டைக் கெட்டுப்பாருங்கோவன்..