Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறுமிகள் மீட்பு
#1
வவுனியா நகரப்பகுதியில் காணாமற்போன இரு சிறுமிகள்
பாழடைந்த வீட்டில் இருந்து மீட்பு

வவுனியா நகரப்பகுதியில் இருந்து வவுனியா நகரப்பகுதியில் காணாமற்போன இரு சிறுமிகள்
பாழடைந்த வீட்டில் இருந்து மீட்பு

வவுனியா நகரப்பகுதியில் இருந்து கடந்த முதலாம் திகதி காணாமற்போன இரு சிறுமிகள் மறவன்குளம் பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.
15,16 வயதுகளையுடைய இந்த இரு சிறுமிகள் தாம் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணையப்போவதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு கடந்த முதலாம் திகதி வீட்டிலிருந்து வெளியேறியிருந்தனர்.
இதற்கிடையில் -
மறவன்;குளம் பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் இரு ஆண்களும், இரு பெண்களும் தங்கியிருப்பதாகத் பொதுமக்கள் கொடுத்த தகவலை அடுத்து, விடுதலைப் புலிகள் அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து சிறுமி களுடன் இருந்த இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் குறித்த இரு சிறுமிகளையும் அழைத்துவந்து விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அதிகாரி முன்னிலையில் அவர்களின் பெற்றோர்களிடம் நேற்று ஒப்படைத்தனர்.
வவுனியா பஸ்நிலையத்தடியில் வைத்து இருவர் தங்களைக் கடத்தி அநுராதபுரத்துக்குக் கொண்டுசென்று ~லொஜ்| ஒன்றில் தங்கவைத்துப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர் என்றும் -
அதன்பின் வௌ;வேறு நபர்கள் மன்னா ர், மறவன்குளம் பகுதிகளுக்கு கூட்டிச்சென்று அவ்விடங்களில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் - அச்சிறுமிகள் தெரிவித்தனர்.
இந்தச் சிறுமிகளை வைத்தியசாலையில் அனுமதித்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என விடுதலைப் புலிகள் கண்காணிப்புக் குழுவினரிடம் கோரினர்.
சட்டம், ஒழுங்கைப் பேணும் பொலீஸார் அந்தப் பணியை மேற்கொள்வர் என கண்காணிப்புக் குழுவினர் பதில் அளித்தனர். ???
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

http://www.uthayan.com/news/newsmain.htm
Truth 'll prevail
Reply
#2
இதன் பின்புலத்தில் யாரோ யார் அறிவார்.
[b] ?
Reply
#3
Karavai Paranee Wrote:இதன் பின்புலத்தில் யாரோ யார் அறிவார்.
நன்றி பரணி.. நேற்று இரவுப்பாலச்செய்தியின் பின்னணியில் மாற்று இயக்கங்கள் என பதிலிருந்தது. இந்தச் செய்தியில் அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள் சில உள்ளன. விரைவில் அவிழ்க்கப்படும்என எதிர்பார்க்கிறேன்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#4
தாத்தா இது பழைய முடிச்சல்ல இறுகிப்போவதற்கு, இளம்முடிச்சு விரைவில் அவிழ்க்கப்பட்டுவிடும்.
[b] ?
Reply
#5
<span style='font-size:21pt;line-height:100%'>மாணவிகள் மீது வல்லுறவு - பொலீஸாரினால் மூவர் கைது! </span>வவுனியா மகாரம்பைக் குளத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவிகள் இருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த முதலாம் திகதி காணாமற்போன இந்த இரு மாணவிகளும் பன்குளம் என்ற இடத்தில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் இருந்து நேற்றுமுன்தினம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டிருந்தனர்.
இந்த மாணவிகள் பொலீஸாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் மூன்று நபர்களைப் பொலீஸார் கைது செய்து வவுனியா நீதிவான் எம் இளஞ்செழியன் முன் ஆஜர் செய்தனர்.
எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மூவரையும் விளக்கமறியலில் வைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்ட இரு மாணவிகளையும் அநுராதபுரம் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் படியும் பொலீஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
http://www.uthayan.com/news/newsmain.htm
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)