10-15-2003, 08:03 PM
உலகிலேயே அறிவில் சிறந்தவர்கள் பட்டியலை தேர்வு செய்தால் அதில் கட்டாயம் நோபல் அறிஞர்களும் இடம்பெறுவார்கள்.உலகில் உள்ள நோபல் அறிஞர்கள் அனைவரையும் ஒரே வெப்சைட்டில் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் அது நோபல் பரிசின் அதிகாரப் பூர்வ வெப்சைட்தான்:
http://www.nobel.se
பரிசு அறிவிக்கப்படும்போதே இந்த தளத்திலும் அது குறித்த செய்தி உடனடியாக இடம்பெறுவதால் உலகெங்கிலும் உள்ள மக்கள் உடனடியாக யாருக்குப் பரிசு என்பது குறித்து அறிந்து கொள்ள முடியும். இத்தளத்தில் இயற்பியல், வேதியல், மருத்துவம், அமைதி, இலக்கியம் மற்றும் பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் இதுவரை யார் யாரெல்லாம் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள் அவர்கள் வாழ்க்கைக் குறிப்பு ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
இத்தளத்தில் நோபல் அறிஞர்களின் பேட்டிகளும் அவர்கள் ஆய்வு குறித்த குறிப்புகளும் கிடைக்கின்றன. அதேபோல் நோபல் அறிஞரின் பெயரைக் கொடுத்து அவரது வாழ்க்கைக் குறிப்பு மற்றும் பணிகள் குறித்த தகவல்கள் பெறவும் வழி உள்ளது.
அனைவரும் குறிப்பாக மாணவர்களும் ஆசிரியர்களும் சென்று படிக்க வேண்டிய தகவல் களஞ்சியம் என்றால் அது மிகையாகாது. ராயல் ஸ்வீடிஸ் அகாடமி வழங்கும் நோபல் பரிசுகள் குறித்து வேறு எங்கும் இவ்வளவு தகவல்கள் பெறமுடியாது.
மாணவர்கள் சிக்கலான அறிவியலைப் புரிந்து கொள்வதற்காக விளையாட்டுப் போக்கில் அறிவியல் தகவல்களை இடம்பெறச் செய்துள்ள மாணவ சமுதாயத்துக்கு பயனுள்ளதாக உள்ளது. 2003 அறிஞர்களின் தகவல்கள் நீங்கள் இங்கு பெறுவது அறிஞர்களை நேரில் சந்தித்த உணர்வை ஏற்படுத்துகிறது.
நார்வேயின் நோபல் பரிசு கமிட்டியின் அதிகாரப்பூர்வ தளம்:
http://www.nobel.no
இத்தளத்திலும் நோபல் பரிசு பெற்ற அறிஞர்களின் உரைகள் இடம்பெற்றுள்ளன. ஆல்பிரட் நோபல் பற்றியும் இங்கு தகவல்கள் உள்ளன.
நன்றி: தினமலர்

[i][b]
!
!