Posts: 37
Threads: 4
Joined: Sep 2003
Reputation:
0
கிழவன் நான் வழமையான தாமதத்துடன் இன்றுதான் ஒருவித அசண்டையோட எச்சில் போர்வை பார்க்க உக்காந்தன். படத்தின் முதல் காட்சியில் கதவின் ஊடு உள்வரும் ஒளியில் நடந்துவரும் காட்சியின் நேர்த்தியான ஒளி அமைப்பு, காமராக்கோணம் என்பன சட்டென்று நிமிர்ந்து உக்கார வைச்சுது.
பத்தரை நிமிடங்களுக்குள் அகதித் தமிழ் இளைஞரது வாழ்வை இதைவிட யதார்த்தமாக வேறு எவராலும் வெளிக் கொண்டு வரமுடியுமோ என்பது சந்தேகம்தான்.
படத்தில் அனைத்து அம்சங்களையும்விட கமராதான் அதிகம் கதை பேசியது. காட்டில் வெட்டிப்போடப்பட்ட மரத்துண்டுகளை நோக்கி கதையின் நாயகன் நடந்துபோய் மரக்குற்றியில் அமரும் அந்த ஒரு சில நொடிப்பொழுதே வரும் காட்சியும், படத்தின் இறுதியில் அவன் சென்றுமறையும் காட்சியுமே போதும் காட்சியமைப்பின் நேர்த்திக்கு. உட்புறப் படப்பிடிப்பில் பாவிக்கப்பட்ட அளவான ஒளியமைப்பு நல்லதொரு கமராக்கலைஞரின் திறமைக்குச் சான்று. ஒரு சில இடங்களில் திடீரென மாறும் ஒளியின் அளவு கவனிக்கப்பட்டுச் சீர் செய்திருந்தால் இன்னும் மெருகேறியிருக்கும். பாலுமகேந்திரா, சிறீராம் போன்றவையோட ஒப்பிட்டுப் பார்க்குமளவுக்குச் சில காட்சிகள் மனதைவிட்டு அகலாதிருந்தன. கமராவுக்கு ஒரு சபாஸ்.
இயல்பாகவே ஒரு சோகம் இழையோடும் அந்த முகம், உருவ அமைப்பு எல்லாமாச் சேர்ந்து அப்படியே ஒரு அப்பாவி அகதியை நம் மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் அந்தக் கதாபாத்திரத் தேர்வு சுப்பர். தொலைபேசியில் பேசேக்கை, லிப்ரில் போகேக்கை இப்படி ஒருசில காட்சியளிலை கதாபாத்திரத்தின் எண்ண ஓட்டத்தை இயல்பாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். நடிப்பு என்பதைவிட அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்ட கதையின் நாயகன் சரியான வாய்ப்புக்கள் கிடைத்தால் நல்லதொரு நடிகராக வருவார் என்பது தெரிகிறது. பாத்திரத்திற்கேற்ற நபரைத்தேடி, அவரது முழுத்திறமையையும் வெளிக்கொணர்ந்த திறமை நெறியாள்கைக்கு முத்தாய்ப்பு.
என்ரை இந்தப் பெட்டியின்ரை பிழையோ இல்லை ஒலிச் சேர்க்கையின் நேர்த்தியின்மையோ தெரியவில்லை ஒலி சற்று நெருடலாக இருந்தது.
ஒருசில நிமிடங்களுக்குள்ளேயே நீண்டதொரு கதையைச் சொல்லிய நெறியாள்கைக்கும், கமராவுக்கும் வசனம் இன்னமும் கொஞ்சம் கைகொடுத்திருக்கலாம். குறுகிய நேரத்தில் சொல்லப்படும் ஒரு விடயத்திற்கு வசனம் நெற்றியடியாக பட்டென்று தெறித்தாற்போல இருக்கவேணும். சில நொடிப்பொழுதே வரும் விளம்பரங்களில் வரும் வசனங்களை உற்றுக் கவனித்தால் புரியும். பட்டென்று உச்சிவரை ஊடுருவும் அந்த வார்த்தைகளின் நேர்த்தி.
கிட்டத்தட்ட பத்துநிமிடங்களே ஓடும் படத்தின் எழுத்தோட்டத்திற்கு ஒரு நிமிடத்திற்குமேல் ஒதுக்கியிருப்பது சற்று அதிகமாகத் தோன்றுகிறது.
இப்படியான ஒருசில குறைகளைத் தவிர்த்து, மொத்தத்தில் நல்லதொரு சிறுகதையை படித்துவிட்ட மனச்சுமையைத் தந்தது படம். ஈழத்தப் படைப்பாளியின் பெயர் உலகளவில் பேசப்படும் காலம் கண்முன் தெரிகிறது.
தம்பி அஜீவன் ஒரு சில குறையளைப் பெரிதாச்சுட்டிக் காட்டிப்போட்டன் என்று மனம் வருந்தவேண்டாம். நல்லதொரு படைப்பாளியிடமிருந்து இன்னமும் அதிசிறந்த படைப்புக்கள் வரவேண்டுமென்ற ஆவலிலைதான் சொன்னனான்.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
நன்றி அம்பலத்தார்.
1.இக்குறும்படம் 1997ல் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
(சுமார் 6 வருடங்களுக்கு முன்னர்...........)
2.எச்சில் போர்வை ஒரு பரீட்சார்த்த படைப்பாகவே செய்தேன்.
3.இக் குறும்படம் சுமார் 4 மணி நேரத்துக்குள் தீர்மானிக்கப் பட்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டதுடன்,ஒரு நாளில் தொகுக்கப்பட்டது.
அதாவது சுமார் 30-32 மணித்தியாலங்களுக்குள் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டது.
4.இன்றை பார்வை வேறு,அதனால் பிரச்சனைகள் உண்டு.
(1997ல் பார்த்த பார்வையை விட இன்றைய பார்வை வேறுதான்.............? )
[size=15]நான் எனது படைப்புகளில் திருப்தியடைவதேயில்லை.
இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என்று எண்ணுவதுண்டு............பிரச்சனைகள் நிறையவே உண்டு.............அதை தனியொருவனால் தீர்க்க முடியாது.
எச்சில்போர்வை பற்றிய கருத்துகள் ஈழமுரசில் நிகழ்ச்சியிலும் அக் காலகட்டத்தில் அலசப்பட்டுள்ளது.
அன்புடன்,
அஜீவன்
<img src='http://www.yarl.com/forum/files/echchilporvai.1.jpg' border='0' alt='user posted image'>
நன்றி:<b>ஈழமுரசு 12-18 மார்ச் 1998-France</b>
Posts: 37
Threads: 4
Joined: Sep 2003
Reputation:
0
அன்பின் அஜீவன் உங்களிடம் நான் மதிக்கும் விடங்களில் முதன்மையானது விமர்சனங்களை நீங்கள் அணுகும் முறை. புகழ்ச்சியான வார்த்தைகளில் மட்டும் மயங்கியிருக்காமல் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதை கண்டு துவண்டுபோகாமல் பரீட்சைத்தாளில் விட்ட பிழைக்கான காரணத்தைத் தேடி அறியும் மாணவன்போல விட்ட தவறுகளை அடுத்த வெற்றிக்கான படிக்கட்டுக்களாக மாற்றிக்கொள்ளும் பண்புதான். இந்தப் பண்பொன்று போதும் சிகரங்களைச் சீக்கிரம் தொடுவதற்கு.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
எச்சில் போர்வைகள் -என் உணர்வுகள்
யாழ்பாணத்தில் இருக்கும் போது
நானும் என் அண்ணிடம் அதை அனுப்பு இதை அனுப்பு என்று தொந்தரவு செய்வதுண்டு. அப்போதல்லாம் வெளிநாடு சென்றவர்களின் நிலை எனக்கு பெரிதாக தெரிவதே இல்லை. இந்தியாவந்தும் பணம் அனுப்பு நானும் வெளிநாடு வரவேண்டும் என்று கேட்டு வாங்கி ஏஜண்டுகளிடம் பலதடவை கொடுத்து ஏமாந்து உள்ளேன். எல்லாவற்றையும் இப்போதுதான் நான் உணர்கின்றேன்.
எச்சில் போர்வைகளில் கேட்ட துப்பாக்கிச்சத்தங்கள் என் இதயத்தை ஒரு நொடி நிறுத்தி பழைய நினைவுகளை மீட்டுவந்ததுவிட்டன. பன்னிரண்டு வருடங்கள் எல்லாம் மறந்திருந்தவனை ஒரு நொடியில் பழையநிலைக்கு அழைத்துச் சென்று மீண்டும் மீட்டு வந்ததுவிட்டது. அந்த ஒரு சில விநாடிகளின் ஒவ்வொரு பிரேம்களும் ஒவ்வொரு நிகழ்வுகள் . நன்றி அஜீவன் உங்களிடம் இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம்.