10-23-2003, 08:23 PM
உணவு முறைகள் சரிவர பின்பற்றப்படாமல் இருப்பதால் தலைவலி, எலும்புகள் வலுவிழத்தல் போன்ற பல நோய்கள் வர வாய்ப்புள்ளன. உணவு முறைகளை சரிவர பின்பற்றாதவர்கள் பெரும்பாலும் நடுத்தர மற்றும் இள வயது பெண்களே. வயது, இனம், பால், பொருளாதார நிலை, வேலை போன்ற எவற்றையும் கொண்டு இக்குறைபாட்டை கணக்கிட முடியாது.
உடல் மற்றும் எடை பற்றிய தற்போதைய மதிப்பீடுகள் கூறுவதாவது; 12 வயதிற்கு குறைவான 85 சதவிகித பெண்கள் பருமனாக இருப்பதால் தங்களது தோற்றம் குறித்து மிகவும் வேதனைப்படுகின்றனர். இந்த வயது சிறுவர்களோ, மிகவும் ஒல்லியான தேகத்தால் மதிப்பு குறைந்திருப்பதாக எண்ணுகின்றனர். சில ஆண்கள் தோற்றத்தை பிரதானமாக கொண்ட தொழிலுக்காக ஸ்டீராய்டை பயன்படுத்துகின்றனர்.
நான்கில் மூன்று பங்க டீனேஜ் பெண்கள் தங்களது எடையை குறைக்க விரும்புகின்றனர். இவர்களில் பலர் தேவைக்கும் குறைவான எடையை கொண்டுள்ளனர். நடுத்தர வயது பெண்களில், பத்தில் ஏழு பேர் அதிக எடையிருப்பதாக எண்ணுகின்றனர். ஆனால் பலர் சரியான எடையை கொண்டுள்ளனர். 80 சதவிகித பெண்கள் தோற்றத்திற்காக தான் உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்களே தவிர ஆரோக்கியத்திற்காக அல்ல.
70 சதவிகித பெண்களும் 35 சதவிகித ஆண்களும் உணவு கட்டுப்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இதற்கான பல அறிகுறிகள் உள்ளன அவை, மிக அதிகமான உடற்பயிற்சி, வாந்தி வரைவழைத்தல், சாப்பிட மறுத்தல் சாப்பிடுவதற்கும், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் பழகவும் மறுத்தல் என பல உள்ளன. இவற்றால் துõங்கும் நேரம் மாறுதல் இதனால் காலையில் தலைவலி ஏற்படுதல் போன்றவை ஏற்படுகின்றன. பட்டினி கிடப்பதால் ரத்ததில் சர்க்கரை அளவு குறைகிறது. எனவே அளவாக சாப்பிட வேண்டுமே தவிர, சாப்பிடாமல் இருக்க கூடாது.
பெண்களுக்கு மாதவிடாய் முடிவடையும் காலமான மெனோபாசுக்கு முந்தைய காலத்தில் உட்கொள்ளும் உணவே உடலுடன் சேரும். எனவே, சத்துள்ள உணவுகளை அவர்கள் உட்கொள்வதன் மூலமே எலும்புகள் வலுவிழக்காமல் தவிர்க்க முடியும். இல்லையென்றால், வயதான காலத்தில் உயரம் சுருங்குதல், எலும்புகள் உடைதல் போன்ற பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளன. தேவையான எடையை சரியாக அறிந்து அதனை தொடர சரியான உணவு முறைகளை கையாள வேண்டும் அளவிற்கதிகமாக உணவை குறைப்பதும் அதிகமாக உண்பதும் ஆபத்தையே விளைவிக்கும்.
நன்றி: தினமலர்

[i][b]
!
!